அலறுதே கேரளா! மிரள வைக்கும் புது ஜேஎன் 1 கொரோனா..மத்திய அரசிடம் இருந்து பறந்த எச்சரிக்கை! என்னாச்சு
டெல்லி: இந்தியாவில் இப்போது புது வகை ஜே.என்.1 துணை வேரியண்ட் கண்டறியப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசு இது தொடர்பாக முக்கியமான எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
கடந்த 2019இல் சீனாவில் முதலில் பரவ தொடங்கிய கொரோனா அதன் பிறகு உலக நாடுகளை உலுக்கிப் போட்டது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை கிட்டத்தட்ட அனைத்து நாடுகளும் இந்த கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.

அதன் பிறகு கொரோனா வேக்சின், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என உலக நாடுகள் எடுத்த தீவிர நடவடிக்கைகளால் வைரஸ் பாதிப்பு குறைந்தது. இந்தச் சூழலில் தான் இப்போது மீண்டும் வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மாநில அரசுகள்: உலகின் பல நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறது. ஏற்கனவே இதன் காரணமாகக் கர்நாடக அரசு 60 வயதைக் கடந்தோர் மற்றும் இணை நோய் உள்ளவர்களுக்கு மீண்டும் மாஸ்கை கட்டாயமாக்க உள்ளதாக அறிவித்துவிட்டது. இது நாம் எந்தளவுக்கு ஆபத்தான சூழலில் இருக்கிறோம் என்பதைக் காட்டுகிறது.
மீண்டும் மிரட்டும் கொரோனா.. கர்நாடகாவில் இனி மாஸ்க் கட்டாயம் போடணும்.. யாரெல்லாம் நிச்சயம் போடணும்
இதற்கிடையே சமீபத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் 79 வயதான பெண் ஒருவருக்கு ஜே.என்.1 வகை கொரோனா கண்டறியப்பட்டது. உலகின் பல நாடுகளில் கொரோனா அதிகரிக்க இந்த ஜே.என்.1 கொரோனா தான் காரணமாக இருக்கிறது. இந்தியாவில் இந்த கொரோனா கண்டறியப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ஒரு ஆலோசனையை வழங்கியது.
மீண்டும் மிரட்டும் கொரோனா.. கர்நாடகாவில் இனி மாஸ்க் கட்டாயம் போடணும்.. யாரெல்லாம் நிச்சயம் போடணும்
மத்திய அரசு: கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பயணி ஒருவருக்கும் சிங்கப்பூரில் ஜேஎன்.1 வேரியண்ட் கண்டறியப்பட்டது அனைவரையும் அச்சுறுத்தியது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பிய செய்திக்குறிப்பில், "அடுத்து வரும் பண்டிகை காலத்தைக் கருத்தில் கொண்டு வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாம் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பொது சுகாதாரத்தை காக்கவும் வைரஸ் பரவல் பாதிப்பைக் குறைக்கவும் சில நடவடிக்கைகள் தேவை" என்று கூறப்பட்டுள்ளது. காய்ச்சல் மற்றும் கடுமையான சுவாச நோய் குறித்த வழக்குகளை மாவட்ட வாரியாக கண்காணித்து அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது. மேலும், அனைத்து வகையான தகவல்களையும் ஒரே இடத்தில் அப்டேட் செய்யவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
ஆபத்தா: இந்த ஜேஎன் 1 வகை கொரோனா என்பது ஓமிக்ரான் BA.2.86 வகை அல்லது பைரோலாவின் துணை வேரியண்ட் ஆகும். இந்த வைரஸ் பாதிப்பு முதலில் அமெரிக்காவில் கடந்த செப். 2023இல் கண்டறியப்பட்டது. அடுத்து டிசம்பர் 15ஆம் தேதி சீனாவில் ஏழு பேருக்கு இந்த வகை கொரோனா வேரியண்ட் கண்டறியப்பட்டது. இந்த வகை கொரோனாவின் புரத ஸ்பைக்கில் மொத்தம் 20 பிறழ்வுகள் இருக்கிறது. மனித செல்களை தாக்க இந்த புரத ஸ்பைக்குகள் தான் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது..
இந்த ஜேஎன் 1 வகை கொரோனாவை பொறுத்தவரை லேசான காய்ச்சல், இருமல், நாசிப் பாதையில் அசௌகரியம், தொண்டைப் புண், மூக்கு ஒழுகுதல், தலைவலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் ஆகும். இந்த மற்ற கொரோனா வகைகளைக் காட்டிலும் வேகமாகப் பரவும் என அஞ்சப்படுகிறது. இதன் காரணமாகவே நாம் அச்சப்படத் தேவையில்லை என்றாலும் கூட தொடர்ந்து கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து வல்லுநர்களும் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications