Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஒரு வாரம் டைம்! உடனே அரஸ்ட் பண்ணுங்க.. இல்லனா.." பிரிஜ் பூஷன் கைதிற்கு கெடு விதித்த விவசாய சங்கம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மல்யுத்த வீரர், வீராங்கனைகளுக்கு ஆதரவாக விவசாய சங்கத்தினர் களமிறங்கியுள்ள நிலையில், வரும் 9ஆம் தேதிக்குள் பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும் என்று அவர்கள் கெடு விதித்துள்ளனர்.

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் மீது பாலியல் புகார்கள் கடந்த ஜன. மாதம் முன்வைக்கப்பட்டது. அப்போது, மேரி கோம் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்ட நிலையில், அதன் பிறகு எந்தவொரு நடவடிக்கையும் இல்லை.

இதையடுத்து கடந்த ஏப்ரல் மாத இறுதி முதல் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்கினர். பிரிஜ் பூஷன் மீது வழக்குப்பதிவு செய்யவே சுப்ரீம் கோர்ட் வரை சென்று மல்யுத்த வீரர், வீராங்கனைகள் வழக்கு தொடர வேண்டி இருந்தது.

போராட்டம்: வழக்குப்பதிவு செய்த பின்னரும் நடவடிக்கை இல்லை என்று குற்றஞ்சாட்டிய மல்யுத்த வீரர்கள், புதிய நாடாளுமன்றம் திறப்பு விழாவின் போது நாடாளுமன்ற கட்டிடம் எதிரே போராட்டம் நடத்த முடிவு செய்தனர், அப்போது வினேஷ் போகத், சாக்ஷி மாலிக் மற்றும் பஜ்ரங் புனியா ஆகியோரை கைது செய்து வலுக்கட்டாயமாக அங்கிருந்து போலீசார் அப்புறப்படுத்தினர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியது. பலரும் மல்யுத்த வீரர், வீராங்கனைகளை போலீசார் கையாண்ட விதத்தை விமர்சித்தனர்.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில், சர்வதேச தொடர்களில் வென்ற பதக்கங்களுடன் வீரர், வீராங்கனைகள் ஹரித்துவாருக்கு சென்றனர். அப்போது, அவர்களைத் தடுத்து நிறுத்திய விவசாய சங்கத்தினர் தங்களுக்கு 5 நாட்கள் தங்களுக்கு டைம் தரும்படி கேட்டுக் கொண்டார். மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டத்திற்கு விவசாயச் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்க உள்ளனர்.

இறுதி எச்சரிக்கை: இதனிடையே விவசாய சங்கத்தினர் பிரிஜ் பூஷனை கைது செய்யவில்லை என்றால் மிகப் பெரிய போராட்டத்தை நடத்த உள்ளதாக இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து விவசாயச் சங்கத்தின் ராகேஷ் டிக்கைட் கூறுகையில், "மல்யுத்த வீரர்களின் புகார்களை மத்திய அரசு நிவர்த்தி செய்ய வேண்டும், பிரிஜ் பூஷனை கைது செய்ய வேண்டும்.. இல்லையெனில், ஜூன் 9ஆம் தேதி மல்யுத்த வீரர்களுடன் டெல்லி ஜந்தர் மந்தருக்குச் சென்று மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளோம்.

 What Farmer Leaders says about Brij Bhushan arrest in support of Wrestlers protest

மேலும், இப்போது தங்கள் உரிமைகளுக்காகப் போராடும் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும்.. பிரிஜ் பூஷன் சரண் சிங் கைது செய்யப்பட வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.

பாஜக எம்பியான பிரிஜ் பூஷன் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக உள்ள நிலையில், அவர் தனது தலைமை பதவியை தவறாகப் பயன்படுத்திக் கொண்டு, விளையாட்டு வீரர்களிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக மல்யுத்த வீரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இது தொடர்பாக அவர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

விவசாய சங்கத்தினருக்கு ஆதரவாக விவசாயிகள் களமிறங்கியுள்ள நிலையில், உத்திர பிரதேசம், பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் உள்ள விவசாயிகள் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக நேற்று தொடர் போராட்டங்களை நடத்தினர். இந்தச் சூழலில் தான் வரும் 9ஆம் தேதி மாபெரும் போராட்டத்தை நடத்த உள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

மத்திய அமைச்சர்: போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடையும் நிலையில், இது குறித்து மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஒரு வழியாகக் கருத்து கூறினார். மல்யுத்த வீரர்களுக்கு நீதி வழங்கப்படும் என்று அவர் கூறினாலும் பிரிஜ் பூஷன் கைது குறித்து அவர் உறுதி தரவில்லை. அரசு நடுநிலையாக விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை என்று மட்டும் கூறினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+