கனிமொழிக்கு நம்பிக்கை கொடுத்த ராகுல் காந்தியின் ஒற்றை வார்த்தை.. டெல்லி மீட்டிங்கில் நடந்தது என்ன?
டெல்லி: தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர்பாகச் சில சலசலப்புகள் ஏற்பட்டுள்ளன. இதற்கிடையே நேற்றைய தினம் கனிமொழி- ராகுல் காந்தி இடையே நடந்த சந்திப்பு தொடர்பாகச் சில முக்கிய தகவல்கள் வந்துள்ளது. இது திமுகவுக்கு உற்சாகத்தையே தருவதாக அமைகிறது.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி கணக்குகள் நடந்து வருகிறது. தமிழ்நாடு காங்கிரஸில் பல தலைவர்கள் கூட்டணி ஆட்சி வேண்டும் எனப் பேச ஆரம்பித்துள்ளனர். மறுபுறம் திமுக 2ம் கட்ட தலைவர்களும் காங்கிரஸ் நிர்வாகிகளை விமர்சிக்கும் வகையில் பேசுகிறார்கள். இதனால் திமுக காங்கிரஸ் உறவில் விரிசல் ஏற்பட ஆரம்பித்துள்ளது.

ஆலோசனை
இந்தச் சூழலில் தான் காங்கிரஸின் ராகுல் காந்தி மற்றும் திமுக எம்.பி. கனிமொழி ஆகியோர் நேற்றைய தினம் டெல்லியில் ஆலோசனை நடத்தினர். வரவிருக்கும் தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. இருந்தபோதிலும் இந்த மீட்டிங்கில் தொகுதிப் பங்கீடு குறித்து எந்தவொரு உடன்பாடும் எட்டப்படவில்லை என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், காங்கிரஸுக்கு அமைச்சரவையில் இடமளிக்க வாய்ப்பே இல்லை என்பதை திமுக திட்டவட்டமாகக் கூறிவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
என்ன நடந்தது
அமைச்சரவையில் இடமளிக்க வாய்ப்பே இல்லை என்பதே திமுகவின் நிலைப்பாடாக இருக்கிறது. இந்த மீட்டிங்கில் காங்கிரஸை மதிக்க வேண்டியதன் அவசியத்தை ராகுல் காந்தி வலியுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.. மேலும், தொகுதிப் பங்கீட்டுச் சிக்கலைத் தீர்க்க கார்கே தலைமையிலான குழுவுடன் திமுக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனக் கூறியிருக்கிறார்..
இது குறித்து கட்சி வட்டாரங்கள் மேலும் கூறுகையில், "இந்தச் சந்திப்பு சுமுகமாகவே நடைபெற்றது. அதேநேரம் தொகுதிப் பங்கீட்டு குறித்து முடிவெடுக்கவில்லை. ஆனால் தேசியளவில் முக்கிய கட்சியாக இருக்கும் காங்கிரஸுக்கு உரிய அங்கீகாரம் தரப்பட வேண்டும் என்பது கன்வே செய்யப்பட்டது" என்றனர்.
வாய்ப்பே இல்லை
தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள் முன்பே குறிப்பிட்டது போல அதிக இடங்களோடு சேர்ந்து ஆட்சியில் முக்கிய பங்கையும் கோருகின்றனர். ஆனால், ஆட்சியில் பங்கு இல்லை என்பதில் திமுக மிகத் தெளிவாக இருக்கிறது.
2021 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 25ல் போட்டியிட்டு 18ல் அக்கட்சி வென்றது. அதை விடக் கூடுதல் இடங்களை இந்த முறை கேட்டுப் பெற வேண்டும் என்பதில் காங்கிரஸ் தெளிவாக இருக்கிறது. ஆனால், கடந்த தேர்தலை விடக் காங்கிரஸ் கட்சிக்கு அதிக இடங்களை ஒதுக்க திமுக தயாரில்லை. நாடாளுமன்றத்தில் காங்கிரசுக்கு திமுக தொடர்ந்து ஆதரவளிப்பது போல், மாநில அளவிலும் அத்தகைய பரஸ்பர ஆதரவை எதிர்பார்ப்பதாக திமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
திமுக ஹேப்பி
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் கூட்டாட்சி என்பதை வலியுறுத்த முக்கிய காரணமே விஜய் தான். தனது தவெக உடன் கூட்டணி அமைத்தால்... தேர்தலில் வென்றால் கூட்டாட்சி என்று அவர் அறிவித்தார். இதன் காரணமாகவே தவெக உடன் கூட்டணி அமைக்க வேண்டும் எனச் சில காங்கிரஸ் தலைவர்கள் மிகப் பெரிய லாபி செய்து வருகிறார்கள். ஆனால் காங்கிரஸின் டெல்லி தலைமை திமுக கூட்டணியையே விரும்புகிறது. நேற்று நடந்த மீட்டிங்கில் அது மீண்டும் உறுதியாகி இருக்கிறது.
திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடரும் எனக் கனிமொழிக்கு ராகுல் காந்தி உறுதியளித்தார். இதனால் காங்கிரஸ் கூட்டணி மாறுமோ என்ற குழப்பம் நீங்கியுள்ளது.. இந்த விஷயத்தில் மட்டும் ஒருமித்த கருத்து எட்டப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின், காங்கிரஸ் தலைமையுடன் நல்லுறவைப் பேணி வருவதால் சட்டசபைத் தேர்தலில் இரு தரப்பும் இணைந்தே போட்டியிடும். மிகச் சீக்கிரமே தொகுதிப் பங்கீடு முடியும் என்றே சொல்லப்படுகிறது.
-
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்! -
திருவாடானை தொகுதியில் களமிறங்கும் திமுக? MLA சீட் ரேஸில் யார்? -
திமுக போட்டியிடும் தொகுதிகள் எவ்வளவு.. கூட்டணி கட்சிகளுக்காக ஸ்டாலின் எடுக்கும் ரிஸ்க் -
திமுகவால் எப்படி சமூகநீதி அரசாக நடைபோட முடியும்? ஊழலை தோலுரித்து காட்டுவேன்! வேல்முருகன் -
"6 தொகுதிகளிலும் ஜெயித்திருப்போம்!" 2021 தேர்தல் குறித்து சிபிஎம் பெ.சண்முகம் அதிரடி விளக்கம்! -
Election Exclusive: கூட்டணியில் ’சிவப்பு’ சிக்னல்.. தோழர்களை கூலாய் ஹேண்டில் செய்யும் ஸ்டாலின்! பரபரப்புக்களுக்கு எண்ட்! -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
திமுகவில் அடுத்த விக்கெட்? காங்கிரசுக்கு தந்த சீட்டால் வினை.. தமிழகத்தில் கனவாகும் ஸ்வீப் சக்சஸ் -
சட்டசபை தேர்தலில் முன்னாள் அமைச்சர் பொன்முடி போட்டியில்லை? திருக்கோவிலூர் தொகுதியில் மகனுக்கு சீட் -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
வெயிட்டாக எதிர்பார்க்கும் காங்., அசைந்து கொடுக்குமா அறிவாலயம்? லிஸ்டோடு தவிக்கும் கதர் கட்சியினர்!












Click it and Unblock the Notifications