டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"ஸீலிப்பர் செல்களின்" மெகா பிளான்.. டெல்லி சுவரில் திடீரென தோன்றிய போட்டோக்கள்.. உளவு துறை பரபர

டெல்லியில் ஸ்லீப்பர் செல்கள் நடமாட்டம் குறித்து உளவு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

Google Oneindia Tamil News

டெல்லி: தலைநகர் டெல்லியில் ஸ்லீப்பர் செல்கள் நடமாட்டம் குறித்து மத்திய உளவு அமைப்புகள் புதிய வார்னிங் ஒன்றைக் கொடுத்துள்ளது. இதனால் அங்குப் பதற்றமான ஒரு சூழல் உருவாகியுள்ளது.

விஜய் நடிப்பில் ஏர்.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் துப்பாக்கி. விஜய் திரைப்பட வரிசையில் அவருக்கு மிகப் பெரிய ஹிட் கொடுத்த படமாக இது அமைந்தது.

இந்தப் படத்தில் தான் ஸ்லீப்பர் செல் என்றால் என்ன? அவர்கள் எப்படிச் செயல்படுவார்கள்? என்பது குறித்தெல்லாம் விளக்கமாகச் சொல்லியிருப்பார்கள். அதன் பின்னரே ஸ்லீப்பர் செல் என்ற வார்த்தையே அதிகம் புழக்கத்திற்கு வந்தது.

 ஸ்லீப்பர் செல்

ஸ்லீப்பர் செல்

ஸ்லீப்பர் செல் என்பவர்கள் பயங்கரவாதிகளைப் போன்றவர்கள் ஆவர். பயங்கரவாதிகள் எப்போதும் பயங்கரவாத இயக்கத்தில் இருப்பார்கள். ஆனால், சீலிப்பர் செல்கள் சமூகத்தில் நம்மில் ஒருவராகவே இருப்பார்கள். பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த இவர்கள் குடும்பம், வேலை எனப் பார்க்கச் சாதாரண நபர் போலவே இருப்பார்கள். ஆனால், பயங்கரவாத அமைப்பு தொடர்பு கொண்டால், அவர்கள் தரும் கொடூர வேலைகளைச் செய்து முடிப்பார்கள்.

பயங்கரவாதிகள்

பயங்கரவாதிகள்

பயங்கரவாதிகளைப் போல இல்லாமல் இவர்கள் சமூக்தில் ஒருவராக இருப்பதால் ஸ்லீப்பர் செல்களை கண்டுபிடிப்பது சிரமமாகவே இருக்கும். இதனால் அனைத்து நாடுகளும் ஸ்லீப்பர் செல்களை எச்சரிகையுடனேயே கையாள்கிறது. இதனிடையே இந்தியாவில் ஸ்லீப்பர் செல்கள் நடமாட்டம் தொடர்பாக மத்திய உளவுத் துறை அமைப்புகள் புதிய எச்சரிக்கை கொடுத்துள்ளது. குறிப்பாகத் தலைநகர் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் பயங்கரவாத தாக்குதல் நடத்தக் கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 காலிஸ்தான் ஸ்லீப்பர் செல்கள்

காலிஸ்தான் ஸ்லீப்பர் செல்கள்

பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளைத் தனி நாடாக அறிவிக்க வேண்டும் என்று பிரிவினை கோரும் காலிஸ்தான் பயங்கரவாதிகள்.. டெல்லி மற்றும் தலைநகரைச் சுற்றியுள்ள பகுதியில் காலிஸ்தானி ஸ்லீப்பர் செல்களின் பயங்கரவாத அமைப்புகள் செயல்படுவதாக உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்பு தான், மேற்கு டெல்லி பகுதிகளில் காலிஸ்தான் பிரிவினைவாத போஸ்டர் மற்றும் சுவர்களில் காலிஸ்தான் பிரிவினைவாத பெய்ண்ட்கள் அடிக்கப்பட்டு இருந்தது மிகப் பெரியளவில் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது.

 பரபர வார்னிங்

பரபர வார்னிங்

தேசிய தலைநகர் பகுதியில் காலிஸ்தானி ஸ்லீப்பர் செல்கள் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தலாம் என்றும் உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. அவர்கள் முதற்கட்டமாக பிரிவினைவாத போஸ்டர் ஓட்டிய மேற்கு டெல்லியின் விகாஸ்புரி, ஜனக்புரி, பஸ்சிம் விஹார், பீராகர்ஹி உள்ளிட்ட பகுதிகளே முதல் இலக்காக இருக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதையடுத்து அங்குப் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அங்குள்ள ஸ்லீப்பர் செல்களை கண்டறியும் முயற்சியிலும் போலீசார் இறங்கியுள்ளனர்.

 போஸ்டர்கள்

போஸ்டர்கள்

காலிஸ்தான் பிரிவினைவாத போஸ்டர்கள் ஒட்டப்பட்டது பரபரப்பைக் கிளப்பிய நிலையில், அந்த சுவரொட்டிகளை உள்ளூர் போலீசார் விரைவாக அகற்றினர். மேலும், பெயிண்ட் அடிக்கப்பட்ட சுவர்களும் மீண்டும் பழைய நிலைக்கு மாற்றப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த பகுதிகளில் போலீசார் ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

 விசாரணை

விசாரணை

மேலும், அங்குள்ள சிசிடிவி கேமரா பதிவுகளையும் அவர்கள் ஆய்வு செய்தனர். டெல்லியில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தைச் சீர்குலைக்க காலிஸ்தானி பிரிவினைவாதிகள் திட்டமிட்டுள்ளதாக உளவு அமைப்பினர் எச்சரித்துள்ள நிலையில், டெல்லியில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் காலிஸ்தானி பிரிவினைவாதிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாகும்.

English summary
Spy agencies warns on Khalistani sleeper cells attack in delhi: Khalistani sleeper cells Intel agencies warns.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X