டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

Coronavirus: ஸீரோ ஆய்வு என்றால் என்ன... எதற்காக செய்யப்படுகிறது... பலன்கள் என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் சமீபத்தில் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகள் குறித்து sero ஆய்வு மேற்கொண்டது. டெல்லியில் மேற்கொண்ட ஆய்வில் அதிகளவிலான மக்களுக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வில் ரத்தத்தில் Immunoglobulin G என்ற எதிர்ப்பு சக்தி இருக்கிறதா இல்லையா என்பதை அறிந்து கொள்ளலாம். இது SERO Survey என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகிறது. Immunoglobulin G என்ற எதிர்ப்பு சக்தி ரத்தத்தில் இருந்ததால்தான் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்பட்டு, பாக்டீரியா, வைரஸ்களை எதிர்க்கும். இந்த ஆய்வு டெல்லியில் கடந்த ஜூன் 27ஆம் தேதியில் இருந்து, ஜூலை 10 ஆம் தேதி வரை மேற்கொள்ளப்பட்டது.

What is the use of Sero Survey 23% Delhi residents have coronavirus antibodies

டெல்லியில் 21,387 ரத்த மாதிரிகள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பொதுவான மக்கள் தொகையில் மக்களிடம் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா என்பதற்காக பார்க்கப்பட்டது. இதில் டெல்லியில் 23.48 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது தெரிய வந்துள்ளது. அவ்வப்போது, கொரோனா நோய் தொற்று பரவல் ஏற்ற, இறக்கத்தின்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

டெல்லியில் எவ்வாறு செய்யப்பட்டது?

டெல்லியின் 11 மாவட்டங்களில் இருந்து குறிப்பிட்ட மக்கள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டனர். இவர்களது ரத்த மாதிரி எடுக்கப்பட்டது. இவர்களது உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா என்பதை அறிய sero சோதனை செய்யப்பட்டது.

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறதா என்பதை அறியும் எலிசா சோதனை செய்யப்பட்டது. நோய் எதிர்ப்பு சக்திக்காக புரோட்டீன் உடலில் உருவாகிறதா என்பதற்கான சோதனைதான் எலிசா. முதன் முறையாக டெல்லியில் பெரிய அளவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

டெல்லியில் பரிசோதனை முடிவுகள்:

  • உலகளவில் கொரோனா தொற்று ஏற்பட்டு ஆறு மாதங்களுக்குப் பின்னரும் டெல்லியில் 23.48 சதவீதம் பேருக்கு தொற்று பரவல் இருப்பது தெரிய வந்தது. இவர்களில் பெரும்பாலும் நெருக்கடியான இடத்தில் இருப்பவர்கள்தான்.
  • டெல்லியில் இன்னும் கணிசமான மக்கள் தொகைக்கு தொற்று பரவும் ஆபத்து இருக்கிறது. ஆதலால், தொடர்ந்து இந்த ஆய்வு தேவை என்ற அபிப்பிராயம் ஏற்பட்டுள்ளது. தனி மனித இடைவெளி, சமூக இடைவெளி, தனி நபர் ஒழுக்கம், மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி சோப்பால் கழுவுவது அவசியம் என்பது அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் இதுவரைக்கும் 11,55,191 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. டெல்லியில் மட்டும் 1,23,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
English summary
What is the use of Sero Survey 23% Delhi residents have coronavirus antibodies
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X