ஒப்புதல் அளித்த மத்திய அமைச்சரவை.. மகளிர் 33% இட ஒதுக்கீடு மசோதா என்றால் என்ன! 5 முக்கிய பாயிண்டுகள்
டெல்லி: மத்திய அமைச்சரவை மகளிர் 33% இட ஒதுக்கீட்டிற்கு அனுமதி அளித்துள்ளது. இந்த மசோதா என்ன சொல்கிறது. இது ஏன் முக்கியம் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
மத்திய அரசு நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை இப்போது கூட்டி இருக்கிறது. இந்தக் கூட்டம் இன்று பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் தொடங்கிய நிலையில், நாளை முதல் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் இது நடக்க இருக்கிறது.

இதற்கிடையே இன்று மாலை மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு ஆரம்பித்த இந்தக் கூட்டம் இரண்டு மணி நேரம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு அளிக்கும் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இட ஒதுக்கீடு மசோதா: இந்த மசோதா நிறைவேறும்பட்சத்தில் இனி நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மகளிருக்கு 33% இட ஒதுக்கீடு கிடைக்கும். நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடர் இப்போது நடைபெறும் நிலையில், இந்த கூட்டத்தொடரிலேயே இந்த மசோதா தாக்கலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்த மசோதா நிலுவையில் இருக்கும் நிலையில், இதை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் மத்திய அரசு இறங்கியுள்ளது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
5 பயிண்டுகள்: ஏற்கனவே காங்கிரஸ் தொடங்கிப் பல கட்சிகளும் இந்த மசோதாவை நிறைவேற்ற வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நாடு முழுக்க இருக்கும் லோக்சபா மற்றும் மாநிலச் சட்டசபைகளில் மூன்றில் ஒரு பங்கு இடம் மகளிருக்கு ஒதுக்கப்படும். இந்த மசோதா குறித்து நாம் கூடுதல் தகவல்களைப் பார்க்கலாம்.
1. இந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா லோக்சபா மற்றும் மாநிலச் சட்டசபைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்கிறது.
2. மேலும், இந்த மசோதாவின்படி, பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட மொத்த இடங்களில் மூன்றில் ஒரு பங்கும் அதே பிரிவைச் சேர்ந்த பெண்களுக்கு ஒதுக்கப்படும். இந்த சுழற்சி முறையில் ஒவ்வொரு முறையும் ஒதுக்கப்படலாம்.
3. பாலின சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அரசு நிர்வாகத்திற்கு இந்த மசோதா முக்கிய படியாக இருக்கும். இருப்பினும், இந்த மசோதா மீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது. இந்த மசோதா கடந்த 2010ஆம் ஆண்டிலேயே ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்ட போதிலும், சில காரணங்களால் லோக்சாபாவில் தாக்கலாகவில்லை.
4. ஏற்கனவே தாக்கலான மசோதாவின்படி, இந்த இட ஒதுக்கீடு சட்டமாகி அமலுக்கு வந்து 15 ஆண்டுகள் இருக்கும் எனக் கூறப்பட்டிருந்தது. இதற்கிடையே இப்போதுள்ள மத்திய அரசு என்ன மாதிரியான மசோதாவை மீண்டும் கொண்டு வரவுள்ளதா என்பதை நாம் பொறுத்தே பார்க்க வேண்டும்.
5. முன்னதாக இந்த சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் இது குறித்து வலியுறுத்தி இருந்தனர். இது குறித்து என்சிபி தலைவர் சுப்ரியா சுலே கூறுகையில், "காங்கிரஸ் ஆட்சியிலேயே இந்த மசோதா நிறைவேறி இருக்கும். அப்போது சில கட்சிகள் இதற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. இதன் காரணமாகவே அப்போது இந்த மசோதாவை நிறைவேற்ற முடியாமல் போனது" என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.
-
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
முடியாதுனு முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய அண்ணாமலை! விடிய விடிய பேசிய கோயல்! கடைசி சான்ஸ்? -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்! -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
இல்லத்தரசி கூப்பன்.. கிராமங்களில் உள்ளவர்களுக்கு செம சான்ஸ்.. ஸ்டாலின் மாஸ்டர்பிளான்? கசிந்த தகவல் -
திருச்சி ரோடு ஷோவில்.. வேனில் இருந்து எகிறி குதித்து ஓடிய விஜய்.. பதறிய பவுன்சர்கள்.. யாரந்த பெண்? -
அண்ணன் சொல்லிட்டாரு.. சட்டென களத்திற்கு வந்த பிரேமலதா.. இல்லத்தரசி கூப்பன் பற்றி செம அப்டேட்! -
ஆத்திரத்தின் உச்சியில் அண்ணாமலை..டெல்லியை ஆட்டி படைக்கும் அடிவருடிகள்! கருப்பு சிகப்பாகும் காவிகள்?












Click it and Unblock the Notifications