டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"நாட்டின் நிலை கவலை தருகிறது!" இஸ்லாமிய தலைவர்களிடம் மோகன் பகவத்! சீக்ரெட்டாக நடந்த 75 நிமிட மீட்டிங்

Google Oneindia Tamil News

டெல்லி: இஸ்லாமியத் தலைவர்களைச் சந்தித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் என்ன பேசினார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்த ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இருந்த போதிலும், அங்கு இந்து கோயில் ஒன்று இருந்ததாகவும் அதை இடித்துவிட்டே அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாகவும் ஒரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

அனைத்து மொழியும் தேசிய மொழி; அனைத்து சாதியினரும் சகோதரர்கள்.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்! அனைத்து மொழியும் தேசிய மொழி; அனைத்து சாதியினரும் சகோதரர்கள்.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!

 மோகன் பகவத்

மோகன் பகவத்

அந்த மசூதி வளாகத்தில் இருக்கும் இந்து சிலைகளை தினசரி வழிபட அனுமதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், "ஒவ்வொரு மசூதியின் கீழும் சிவலிங்கத்தைத் தேட தேவையில்லை" என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறி இந்த பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வர முயன்றார். ஆர்எஸ்எஸ் தலைவரிடம் இருந்து இப்படியொரு கருத்து வந்தது முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது.

மீட்டிங்

மீட்டிங்

இந்தச் சூழலில் தான் கடந்த மாதம் மோகன் பகவத் 5 இஸ்லாமியத் தலைவர்களைச் சந்தித்து இருந்தார். அவர்கள் சுமார் 75 நிமிடங்கள் தனிமையில் உரையாடினர். இதனிடையே இந்த மீட்டிங் குறித்த தகவல்களை அன்று மோகன் படிவத்தைச் சந்தித்த முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி பகிர்ந்து கொண்டுள்ளார். நாட்டில் இப்போது நிலவும் சகிப்புத்தன்மை இல்லாத சூழலைக் கண்டு தான் கவலைப்படுவதாக மோகன் பகவத் கூறியுள்ளார்.

கவலை

கவலை

நாட்டில் தற்போது இருக்கும் சூழல் குறித்து இஸ்லாமியத் தலைவர்கள் மோகன் பகவத்திடம் கவலை தெரிவித்து உள்ளனர். இது குறித்து குரேஷி கூறுகையில், "நாங்கள் கூறியதைக் கேட்ட பகவத், அவரும் கூட நாட்டில் நிலவும் நிலைமையை நினைத்துக் கவலைப்பட்டதாகக் கூறினார். நாட்டில் இப்போது நிலவும் சகிப்புத்தன்மை அற்ற சூழல் முற்றிலும் தவறானது என்றும் ஒற்றுமையாக இருந்தால் மட்டுமே நாடு முன்னேற முடியும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் எங்களிடம் கூறினார்.

 பசுவதை

பசுவதை

மோகன் பகவத்தும் அவருக்குக் கவலை தரும் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். பசு வதை இந்துக்களை வருத்தமடையச் செய்வதாக அவர் தெரிவித்தார். பசுவதை ஏற்கனவே தடை செய்யப்பட்டு இருக்கிறது. முஸ்லீம்கள் சட்டத்தை மதிக்கிறார்கள் என்றும் யாராவது அதை மீறினால் தண்டிக்கப்படுவார்கள் என நாங்கள் அவருக்கு விளக்கம் அளித்தோம். அடுத்து "காஃபிர்" என்ற சொல் இந்துக்கள் மனதைப் புண்படுத்துவதாகக் கூறினார். அரபி மொழியில் "காஃபிர்" என்றால் நம்பிக்கை இல்லாதவர்கள் என்று அர்த்தம். அது பொதுவான வார்த்தை தான் இப்போது தான் புண்படுத்தும் வார்த்தையாக மாறிவிட்டது. அந்த குறிப்பிட்ட சொல்லைப் பயன்படுத்தாமல் இருப்பதில் எங்களுக்குப் பிரச்சினை இல்லை.

 ஜிகாதிகள் இல்லை

ஜிகாதிகள் இல்லை

சில வலதுசாரி அமைப்புகள் அனைத்து இஸ்லாமியர்களையும் ஜிகாதிகள், பாகிஸ்தானியர்கள் என்று அழைப்பது குறித்தும் நாங்கள் கவலை தெரிவித்தோம். அவர்கள் முஸ்லீம்களின் நாட்டுப் பற்றை சந்தேகிக்கிறார்கள். இஸ்லாமியர்கள் ஒவ்வொரு முறையும் தேசபக்தியை நிரூபிக்க வேண்டும் எனச் சொல்கிறார்கள். முஸ்லீம்களும் இந்தியர்கள் தான் என்றோம்.

 மதம் மாறியவர்கள் தான்

மதம் மாறியவர்கள் தான்

இதை மோகன் பகவத் ஒப்புக்கொண்டார். நாம் அனைவருக்கும் ஒரே டிஎன்ஏ தான் என்றும் இங்குள்ள பெரும்பான்மையான முஸ்லிம்கள் மதம் மாறியவர்கள் தான் என்றும் அவர் தெரிவித்தார். அவர் பல விவகாரங்களில் எங்களுக்கு உறுதியளித்தார். குறிப்பாகச் சிவலிங்கம் பற்றிய அவரது கருத்து மிகவும் வலுவானது.. இதை நாங்கள் வரவேற்றோம். 30 நிமிடங்கள் நடக்க இருந்த இந்த கூட்டம் 1.15 மணி நேரம் நீடித்தது" என்று அவர் தெரிவித்தார்.

English summary
RSS chief Mohan Bhagwat about current atmosphere of disharmony of Nation: Five Muslim intellectuals attended the 75-minute meet with Mohan Bhagwat.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X