தமிழகத்திற்கு எப்போது தேர்தல்..சுனில் அரோரா சொல்லப் போகும் தேதி என்ன..மொத்தப் பார்வையும் டெல்லி மீது
டெல்லி: ஏப்ரல் 12 ஆம் தேதி அன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா பணி ஓய்வு பெறுவதால் அதற்கு முன்பு தமிழக, புதுவை சட்டசபை தேர்தல் நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. தனது பதவிக்காலத்திலேயே தேர்தலை நடத்த விரும்புவதாக அரோரா தகவல்கள் கூறுகின்றன.
தமிழகம், புதுவை சட்டசபையின் பதவிக்காலம் வரும் மே மாதம் முடிவடைகிறது. அது போல் அஸ்ஸாம், மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநில சட்டசபைகளும் இன்னும் சில மாதங்களில் முடிவடைகின்றன.
இதனால் இந்த 5 மாநிலங்களில் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் மும்முரம் காட்டி வருகிறது. இந்த 5 மாநிலங்களிலும் உள்ள பள்ளிகளில் பொதுத் தேர்வுகள் நடத்தப்படும்.

தேர்வுகள்
அந்த தேர்வுகளுக்கு முன்னர், அதே நேரத்தில் பள்ளிகள் கோடை விடுமுறைக்கு மூடியிருக்கும்போதே தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுவையில் வரும் மே 3-ஆம் தேதி முதல் பிளஸ் 2 தேர்வு நடத்தப்படுகிறது. இந்த தேர்வு 21 ஆம் தேதி முடிவடைகிறது. இதைத் தொடர்ந்து 10ஆம் வகுப்பு தேர்வு நடத்தப்படும்.

தேர்தலை நடத்தி முடிக்க
எனவே மே 3-ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று மே 3 ஆம் தேதிக்குள் தேர்தலை நடத்தி, தேர்தல் முடிவுகள் அறிவிக்க வாய்ப்புள்ளது. இன்னொன்று மே 3 க்குள் தேர்தலை நடத்தி முடித்துவிட்டு மே 21 ஆம் தேதிக்கு பிறகு வாக்கு எண்ணிக்கை நடத்தவும் வாய்ப்புள்ளதாக பேசப்படுகிறது.

புதுவை
இந்த நிலையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவின் பதவிக்காலம் ஏப்ரல் 12-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தனது பதவிக்காலத்திலேயே 5 மாநில சட்டசபை தேர்தலையும் நடத்தி முடிக்க அவர் விரும்புவதாக தெரிகிறது. குறைந்தபட்சம் தமிழகம், புதுவை மாநில தேர்தலையாவது நடத்தி முடிக்க அவர் விரும்புவதாக தெரிகிறது.

சட்டசபை தேர்தல்
இதனால் வரும் ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் தமிழக சட்டசபை தேர்தல் நடத்தி முடிக்க வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. கடந்த வாரம் சென்னை வந்த சுனில் அரோரா தலைமையிலான குழுவினர் வந்திருந்து தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்திருந்தனர். எனவே ஏப்ரல் 12-ஆம் தேதிக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்படும் என தெரிகிறது.