தக்காளி விலை எப்போது இயல்பு நிலைக்கு திரும்பும் - மத்திய அரசு சொன்ன நல்ல செய்தி
டிசம்பர் மாதம் தக்காளி விலை, கடந்த ஆண்டு இருந்த விலைக்கு வந்து விடும் என மத்திய அரசு கூறியுள்ளது.
டெல்லி: டிசம்பர் மாதம் பிறந்த பின்னர் வடமாநிலங்களில் இருந்து தக்காளி வரத் தொடங்கும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சந்தையில் தக்காளி தாராளமாக கிடைக்கும் என்பதால் அதன் விலை குறையத் தொடங்கும் என மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஜூன் மாதம் தென்மேற்குப் பருவமழை தொடங்கியது அக்டோபர் வரை பருவமழை நீடித்தது. அக்டோபர் 25ஆம் தேதி தொடங்கிய வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது.
வட இந்தியாவின் பல பகுதிகளில் தென்மேற்குப் பருவமழையால் வெள்ளம் பெருக்கெடுத்தது. விளைநிலங்கள் தண்ணீரில் மூழ்கின. தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் தற்போது பெய்து வரும் மழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தக்காளி விலை
கனமழை காரணமாக நாடு முழுவதும் தக்காளி விலை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை ஒரு கிலோ தக்காளி 160 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது. ஆப்பிளுக்கு நிகராக தக்காளி விலை உயர்ந்ததால் இல்லத்தரசிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். கடைகளில் பிரியாணியை விட தக்காளி சாதம் விலை உயர்ந்தது.

நாடு முழுவதும் தக்காளி விலை
சந்தைக்கு தக்காளி வரத்து படிப்படியாக விலை குறைந்தது. இன்றைய தினம் தக்காளி ஒரு கிலோ 40 ரூபாயாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டில் விலை குறைந்தபோதிலும், டெல்லி, பெங்களூரு, ஹைதராபாத், திருவனந்தபுரம் என பல பகுதிகளில் விலை அதிகமாகவே உள்ளது.

மழையால் பாதிப்பு
தக்காளி விலை கடந்த செப்டம்பர் மாதத்தில் இருந்து அதிகரித்து வருகிறது. பஞ்சாப், உத்தரபிரதேசம், ஹரியானா, இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெய்த மழையால் தக்காளி செடிகள் அழுகியதே இதற்கு காரணம் என மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

63 சதவிகிதம் அதிகம்
வட மாநிலங்களில் இருந்து தக்காளி வரத்து தாமதமானது மட்டுமின்றி, தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் பருவமழை தொடங்கியதால் தக்காளி விலை அதிகரித்து விட்டது. அகில இந்திய சராசரி விலை கிலோவுக்கு ரூ.67 ஆக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 63 சதவிகிதம் அதிகம் ஆகும். தக்காளி விலை எப்போது குறையும் என்று அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் நிலையில் மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகார அமைச்சகம் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது.

எப்போது விலை குறையும்
டிசம்பர் மாதத்தில் இருந்து வடமாநிலங்களில் இருந்து தக்காளி வரத் தொடங்கும் எனவும் இதனால் தக்காளி சந்தைகளில் தாராளமாக கிடைக்கும் என்பதால் அதன் விலை குறையத் தொடங்கும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதம் தக்காளி விலை, கடந்த ஆண்டு இருந்த விலைக்கு வந்து விடும். அதே சமயத்தில், வெங்காயத்தின் விலை, கடந்த ஆண்டும், அதற்கு முந்தைய ஆண்டும் இருந்த விலையை விட குறைந்துள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications