இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? மோடிக்கு 24% ஆதரவு.. ஆதித்யநாத் 2ம் இடம்.. மூட் ஆப் தி நேஷன் சர்வே!
டெல்லி: இந்தியாவின் அடுத்த பிரதமராக பதவி ஏற்க நரேந்திர மோடியே தகுதியானவர் என்று இந்தியா டுடே மூட் ஆப் தி நேஷன் சர்வேயில் 24% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அடுத்த பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் பட்டியலில் உ.பி முதல்வர் ஆதித்யநாத் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.
இந்தியா டுடே மூட் ஆப் தி நேஷன் சர்வே இன்று வெளியாகி உள்ளது. குறிப்பிட்ட மாதங்கள் இடைவெளியால் இந்தியா டுடே செய்தி நிறுவனம் மூட் ஆப் தி நேஷன் சர்வேவை வெளியிடுவது வழக்கம். தேசிய அளவில் மத்திய ஆளும் கட்சிக்கும், பிரதமருக்கு இருக்கும் மக்கள் ஆதரவு, மாநில முதல்வர்களின் செயல்பாடு என்று பல விஷயங்கள் குறித்து மக்களிடம் கருத்து கேட்கப்பட்டு இந்த சர்வே வெளியிடப்படும்.
அதேபோல் மக்கள் மத்தியில் அதிக பாதிப்பை ஏற்படுத்திய பிரச்சனைகள், களநிலவரம் குறித்து பல்வேறு தகவல்கள் இந்த சர்வேயில் இடம்பெறும்.

சர்வே
இந்த நிலையில் இன்று வெளியான இந்தியா டுடே மூட் ஆப் தி நேஷன் சர்வேயில், இந்தியாவின் அடுத்த பிரதமர் பதவிக்கு நரேந்திர மோடியே தகுதியானவர் என்று 24% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த மூட் ஆப் தி நேஷன் சர்வேயில் 66% மக்கள் மோடிக்கு ஆதரவு அளித்த நிலையில் இந்த முறை சரிந்துள்ளது. கடந்த வருடம் ஆகஸ்டில் பிரதமர் மோடிக்கான ஆதரவு 66 சதவிகிதமாக இருந்தது.

ஜனவரி
கடந்த ஜனவரியில் இது 38 சதவிகிதமாக குறைந்தது. தற்போது மேலும் சரிந்துள்ளது. அடுத்த பிரதமர் பதவிக்கு தகுதியானவர்கள் பட்டியலில் உ.பி முதல்வர் ஆதித்யநாத் இரண்டாம் இடம் பிடித்தார். பிரதமர் பதவிக்கு உ.பி முதல்வர் ஆதித்யநாத் தகுதியானவர்: 11% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்திதான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று 10% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கம்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று 8% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.அதேபோல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று 8% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.உள்துறை அமைச்சர் அமித் ஷா பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று 7% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

காங்கிரஸ் இடைக்கால தலைவர்
காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்திதான் பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று 4% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.காங்கிரஸ் மூத்த தலைவர் பிரியங்கா காந்தி பிரதமர் பதவிக்கு தகுதியானவர் என்று 4% மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஆதித்யநாத்
இந்த கருத்து கணிப்பில் மோடிக்கு அடுத்து யோகி ஆதித்யநாத் இடம்பெற்று இருக்கிறார். ஆனால் அதே சமயம் மோடிக்கு அடுத்து பாஜக கட்சிக்குள் சிறந்த பிரதமர் வேட்பாளர் என்ற கேள்விக்கு அமித் ஷாவிற்கு 23 சதவிகிதம் பேர் வாக்களித்துள்ளனர். இவர் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். யோகி ஆதித்யாநாத்திற்கு 19 சதவிகிதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர். ராஜ்நாத் சிங்கிற்கு 11 பேர் சதவிகிதம் பேர் ஆதரவு அளித்துள்ளனர்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications