ஒரு ரூபாய் கூட எடுக்க கூடாது! ஓபிஎஸ்ஸுக்கு ஐடியா தந்த முக்கிய புள்ளி? டெல்லியில் பரபரக்கும் எடப்பாடி
டெல்லி: அதிமுகவில் வங்கி கணக்குகளை எல்லாம் முடக்க வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் கடிதம் எழுதி உள்ளார். இதில் ஆர்பிஐ எடுக்க போகும் முடிவு என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இருக்கிறார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பிரிவு உபசார விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.
அதோடு இன்று அவர் பிரதமர் மோடியையும் சந்தித்தார். இந்த சந்திப்பில் எடப்பாடி பழனிசாமி உடன் வேலுமணி எம்எல்ஏ, தம்பிதுரை எம்பி ஆகியோர் உடன் இருந்தனர்.

எடப்பாடி
எடப்பாடி பழனிச்சாமி - பாஜக இடையில் கடந்த சில நாட்களாக உறவு சரி இல்லை. அதனால்தான் வருமானவரித்துறை அதிமுக தலைகளை குறி வைக்கிறது என்று செய்திகள் வந்தன. இந்த நிலையில்தான் பாஜக - அதிமுக உறவை சரி செய்யும் விதமாகவும், இரண்டு தரப்பு உறவை புதுப்பிக்கும் விதமாகவும் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை சந்தித்ததாக கூறப்படுகிறது. பாஜக - அதிமுக நட்பு குறித்து எடப்பாடி மோடியிடம் பேசுவார் என்று கூறப்படுகிறது.

சந்திப்பு
நேற்றே அவர் சில பாஜக தலைவர்களை சந்தித்து இது தொடர்பாக பேசியதாக கூறப்படுகிறது. எடப்பாடி இப்படி டெல்லியில் பரபரப்பாக இருக்கும் நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் முக்கிய மூவ் ஒன்றை மேற்கொண்டு உள்ளார். கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுகவின் பொருளாளர், அடிப்படை உறுப்பினர், ஒருங்கிணைப்பாளர் ஆகிய பொறுப்புகளில் இருந்து ஓ பன்னீர்ச்செல்வம் நீக்கப்பட்டார். கட்சியின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

நிராகரிப்பு
இந்த நிலையில்தான் அதிமுக வங்கி கணக்குகள் இருக்கும் பேங்குகளுக்கு ஓ பன்னீர்செல்வம் தான்தான் பொருளாளர் என்று கூறி கடிதம் அனுப்பினார்.நான்தான் அதிமுகவின் பொருளாளர். என்னுடைய அனுமதி இன்றி பணத்தை எடுக்க யாருக்கும் அனுமதி தர கூடாது என்று ஓபிஎஸ் கடிதத்தில் குறிப்பிட்டார். ஆனால், நீங்கள்தான் பொருளாளர் என்பதற்கான உரிய ஆதாரங்கள், போதிய ஆவணங்கள் இல்லை. அதனால் இதை நிராகரிக்கிறோம் என்று வங்கிகள் கூறியது.

ஏற்றுக்கொண்டது
அதே சமயம் எடப்பாடி பழனிசாமி தரப்பும் பொதுக்குழு கடிதத்தோடு திண்டுக்கல் சீனிவாசன்தான் புதிய பொருளாளர் என்று கூறி இன்னொரு கடிதம் அனுப்பியது. இதை வங்கிகள் தரப்பு ஏற்றுக்கொண்டது. இந்த நிலையில்தான் ஓ பன்னீர்செல்வம் தற்போது ஆர்பிஐ அமைப்பை நாடி உள்ளார். அதில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் உள்ளது. இதில் இன்னும் தீர்ப்பு வரவில்லை.

தீர்ப்பு
அதுவரை அதிமுகவின் வங்கி கணக்குகளை யாரும் பயன்படுத்த கூடாது. அது சட்ட விரோதம். அதனால் அதிமுகவின் 7 வங்கிக்கணக்குகளை முடக்க வேண்டும். இதில் பண பரிவர்த்தனையை தடை செய்ய வேண்டும் என்று ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எடப்பாடி டெல்லியில் இருக்கும் நேரம் பார்த்து ஓ பன்னீர்செல்வம் இந்த கடிதத்தை அனுப்பி உள்ளார். ஓ பன்னீர்செல்வம் நேற்று இரவு தனது வீட்டில் ஆலோசனை மேற்கொண்டார்.
Recommended Video

ஆலோசனை
இந்த ஆலோசனையின் முடிவில்தான் அவர் இந்த கடிதம் எழுதும் திட்டத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது. கட்சி மற்றும் நிதி விவகாரங்கள் குறித்து விவரம் அறிந்த ஒரு முக்கிய புள்ளிதான் இந்த ஐடியாவை ஓ பன்னீர்செல்வத்திற்கு கொடுத்ததாக கூறப்படுகிறது. அதிமுக கணக்குகளில் இருந்து எடப்பாடி ஒரு ரூபாயை கூட எடுக்க விடமால் எடுக்க வேண்டும் என்பதற்காக ஓ பன்னீர்செல்வம் இந்த கடிதத்தை அனுப்பி உள்ளார் என்கிறார்கள்.
-
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்!












Click it and Unblock the Notifications