டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அண்ணாமலைக்கு போன கால்.. மிட் நைட் நேரத்தில்.. அந்த 2 பேரை பார்த்த எடப்பாடி! டெல்லியில் நடந்தது என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி சென்று இருக்கும் எடப்பாடி பழனிசாமி அங்கு 2 முக்கியமான அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை செய்ததாக டெல்லி தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜி 20 கூட்டமைப்பிற்கு தலைமை வகிக்க இந்தியா தேர்வாகி உள்ளது. இதை பற்றி ஆலோசனை செய்ய நேற்று பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் கூட்டம் நடைபெற்றது.

குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து முதல்வர் ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் எம்பி திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அங்கே போட்ட அச்சாரம்.. எடப்பாடி 'கிரீன் சிக்னல்’.. உடனே ஓகே சொன்ன பாஜக! பின்னணி இதானா? அப்போ ஓபிஎஸ்? அங்கே போட்ட அச்சாரம்.. எடப்பாடி 'கிரீன் சிக்னல்’.. உடனே ஓகே சொன்ன பாஜக! பின்னணி இதானா? அப்போ ஓபிஎஸ்?

பிரதமர் மோடி

பிரதமர் மோடி

இந்த மீட்டிங்கிற்கு சென்ற எடப்பாடி பழனிசாமி நேற்று கூட்டத்திற்கு பின் பிரதமர் மோடியை சந்தித்தார். இது தனிப்பட்ட சந்திப்பு கிடையாது. மாறாக பிரதமர் மோடி அங்கு இருந்த முதல்வர்கள், கட்சி தலைவர்கள் எல்லோரையும் சந்தித்து பேசினார். இவர்களிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். அவர்களின் குடும்பங்களில் நடத்த சுப நிகழ்வுகள் குறித்து பேசினார். அதேபோல் எடப்பாடி பழனிசாமியிடமும் 5 நிமிடம் பிரதமர் மோடி பேசினார். இவர்கள் சிரித்தபடி நன்றாக பேசிக்கொண்டனர். ஆனால் இவர்கள் அரசியல் பேசவில்லை. எடப்பாடியின் உடல்நிலை குறித்து மட்டும் பிரதமர் மோடி பேசி இருக்கிறார்.

சந்தோசம்

சந்தோசம்

இந்த சந்திப்பு காரணமாக எடப்பாடி பழனிசாமி சந்தோசமாக இருப்பதாக கூறப்படுகிறது. தனக்கு கொடுக்கப்பட்ட மரியாதை காரணமாக அவர் உற்சாகமாக இருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான கடிதம் 2 நாட்களுக்கு முன் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்பப்பட்டது. அந்த கடிதத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு கீழ், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் என்று கூறப்பட்டு இருந்தது. இதன் காரணமாக எடப்பாடி மகிழ்ச்சியாக இருக்கிறாராம். டெல்லி தனக்கு கொடுத்த அங்கீகாரம் இது என்று எடப்பாடி பழனிச்சாமி மகிழ்ச்சியாக இருக்கிறாராம்.

பூரிப்பு

பூரிப்பு

நேற்று டெல்லி செல்லும் போதே இவர் முகம் முழுக்க பூரிப்புடன் சென்றதாக கூறப்படுகிறது. டெல்லி சென்றிருக்கும் எடப்பாடி பழனிச்சாமி, இன்று பிற்பகல் 12:15-க்கு டெல்லியில் இருந்து சென்னைக்கு புறப்படுகிறார். அதேபோல, இரவு 10:15-க்கு.டெல்லியிலிருந்து சென்னை வருகிறார் அண்ணாமலை. அண்ணாமலையும் டெல்லியில்தான் இருக்கிறார். டெல்லியில் மாநகராட்சி பிரச்சாரம் உட்பட பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொண்ட அவர், சில பாஜக தலைகளை சந்தித்தார்.

டெல்லி ஏன்?

டெல்லி ஏன்?

பாஜகவில் தற்போது உட்கட்சி மோதல் விஸ்வரூபம் எடுத்து உள்ளது. தமிழ்நாடு பாஜகவில் சுனாமி போல புயலை கிளப்பி இருக்கிறது காயத்ரி ரகுராம் நீக்கப்பட்ட விவகாரமும், திருச்சி சூர்யா ஆடியோ விவகாரமும். இது தொடர்பான புகார்கள் பாஜக மேலிடத்திற்கும் சென்றுள்ளது. இந்த விஷயமும் டெல்லிக்கு தெரிந்து கண்டித்து இருக்கிறதாம். தமிழ்நாடு பாஜக மீது டெல்லி அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் அண்ணாமலை அவசரமாக டெல்லிக்கு சென்று அங்கு பாஜக தலைவர்களை சந்தித்து பேசினார் என்று கூறப்படுகிறது

எடப்பாடி

எடப்பாடி

இன்னொரு பக்கம் டெல்லி பயணத்தில் நேற்று இரவு, மத்திய உள்துறையை சேர்ந்த 2 அதிகாரிகளை சந்தித்துள்ளார் எடப்பாடி. அதில், என்னை அழைத்ததற்கு மோடிஜிக்கும் அமித் ஷா ஜீக்கும் ரொம்ப நன்றி என சொல்லியிருக்கிறார் எடப்பாடி . இவர்களிடம் சில நிமிடம் எடப்பாடி பேசியதாக கூறப்படுகிறது. தமிழ்நாடு சட்ட ஒழுங்கு, அதிமுக உட்கட்சி பிரச்சனை, உச்ச நீதிமன்ற பொதுக்குழு வழக்கு உட்பட அரசியல் ரீதியாக பல விசயங்கள் பேசப்பட்டதாக தெரிகிறது. இது மட்டுமல்லாமல் அண்ணாமலையும் எடப்பாடியும் நேற்று நள்ளிரவு நீண்ட நேரம் தொலைப்பேசியில் விவாதித்தபடி இருந்தனர் என்கிறது டெல்லி சோர்ஸ். அதாவது டெல்லியில் ஒரே நேரத்தில் இருந்தாலும் இவர்கள் சந்திக்காத நிலையில், இவர்கள் போனில் பேசிக்கொண்டதாக கூறப்படுகிறது.

English summary
Why did Edappadi Palanisamy meet two home ministry officials and did he call Annamalai?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X