என்னவாகும் நட்டாவின் அரசியல் எதிர்காலம்.. இமாச்சல் தேர்தல் ரொம்பவே முக்கியம்! தோற்றால் அவ்வளவுதான்
டெல்லி: இன்று இமாச்சல பிரதேசத்தில் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், இது பாஜகவுக்கு எந்தளவுக்கு முக்கியமோ அதே அளவுக்கு அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டாவுக்கும் முக்கியமானதாக உள்ளது.
இப்போது இமாச்சல பிரதேசத்தில் ஜெய்ராம் தாகூர் முதல்வராக உள்ளார். அங்குள்ள 68 இடங்களுக்கு இன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
குஜராத் தேர்தல் முடிவுகள் உடன் டிச.8இல் இமாச்சல பிரதேச தேர்தல் முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளன. இந்தத் தேர்தலில் எப்படியாவது வென்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பாஜக முயல்கிறது.

இமாச்சல பிரதேசம்
இந்த இமாச்சல பிரதேச தேர்தல் மற்ற அரசியல் தலைவர்களைக் காட்டிலும், பாஜக தேசியத் தலைவர் நட்டாவுக்கு முக்கியமானது. ஏனென்றால் வேட்பாளர் தேர்வு, தேர்தல் வியூகம் என அனைத்தையும் இங்கு பிளான் செய்தது நட்டா தான். அவரது ஆதரவாளரான ஜெய்ராம் தாக்கூர் இங்கு முதல்வராக உள்ளார். எனவே, அவரை எப்படியாவது வெற்றி பெற செய்ய வேண்டும் என்பதில் நட்டா மிகத் தெளிவாகவே உள்ளார். நட்டவே நேரடியாக பல்வேறு பிரசாரங்களில் கலந்து கொண்டுள்ளார்.

நட்டா
இதுமட்டுமின்றி தொலைதூரங்களில் உள்ள வாக்குச் சாவடிகளில் அதிகபட்ச வாக்குப்பதிவை உறுதி செய்யத் தொண்டர்களைத் தனியாக இறக்கி உள்ளார். மேலும், இளைஞர்களைக் கவர ஏபிவிபியை இறக்கி உள்ளனர். நட்டாவின் சொந்த மாவட்டமான பிலாஸ்பூரில் அவரது மகன் ஹரிஷ் நட்டா வீடுவீடாக சென்று பிரசாரம் செய்து வருகிறார். பாஜக தலைவராக உள்ள நட்டாவின் பதவிக்காலம் முடிந்த பிறகு அவர் இமாச்சல் முதல்வரானாலும் கூட ஆச்சரியப்பட எதுவுமில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்..

புதிய முயற்சி
அவர் இந்தத் தேர்தலில் பல்வேறு முயற்சிகளை எடுத்துப் பார்க்கிறார். பஞ்சாப் பதன்கோட்டின் எல்லையில் அமைந்துள்ள காங்ரா மாவட்டத்தின் நூர்பூர் தொகுதியில் கடந்த 1993 முதல் காங்கிரஸ் மற்றும் பாஜக மாறி மாறி வென்று வருகிறது. அப்போது முதலே பாஜகவில் இருந்து ராகேஷ் பதானியா தான் இங்குப் போட்டியிடுவார். ஆனால் அவருக்கு வேறு சீட்டை ஒதுக்கிவிட்டு ரன்பீர் சிங் நிக்கா என்பவருக்கு நட்டா வாய்ப்பு அளித்துள்ளார். இதே ரன்பீர் சிங்தான் இந்தாண்டு தொடக்கத்தில் பாஜகவில் இருந்து நீக்கப்பட்டு இருந்தார்.

எதற்காக
அதன் பின்னர் தொகுதியில் தனது செல்வாக்கை அதிகரிக்கும் நடவடிக்கையில் ரன்பீர் சிங் இறங்கினார். இதையடுத்து அவர் ஆம் ஆத்மியில் இணைவார் எனச் சொல்லப்பட்டது. அவரை கடைசி நேரத்தில் மீண்டும் பாஜகவுக்குக் கொண்டு வந்து சீட் கொடுத்துள்ளார் நட்டா. இமாச்சல பாஜக அரசுக்கு எதிராக உள்ள மக்கள் மனநிலையைச் சமாளிக்க நட்டா இதைச் செய்துள்ளார். ஆனால், நட்டாவின் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைக்குமா என்பதை நாம் பொறுத்துத் தான் பார்க்க வேண்டும்.

என்ன பிளான்
இப்படி நட்டா பல்வேறு புதிய முயற்சிகளை எடுத்துள்ளார். அதாவது மூத்த தலைவர்களை புதிய இடங்களில் களமிறக்கி அவர்களிடம் வேலையை வாங்குவது. மேலும், யாரால் பிரச்சினை வருமோ அவரை கட்சிக்குள் கொண்டு வந்து வாய்ப்பை கொடுத்துள்ளார். அதேபோல கடந்த ஆண்டு நடந்த இடைத்தேர்தலில் பாஜக தோல்வியடைந்த நிலையில், முதல்வர் மாற்றப்படலாம் என்று தகவல் பரவியது.

முதல்வர் ஜெய்ராம் தாகூர்
அப்போதும் கூட ஜெய்ராம் தாகூருக்கு ஆதரவாக இருந்தவர் நட்டா.. ஏனென்றால் இருவருமே ஏபிவிபியை பின்னணியாகக் கொண்டவர்கள். கடந்த 2017இல் பாஜக இமாச்சல பிரதேசத்தில் பெரியளவில் வென்ற போதிலும், முதல்வராவார் என எதிர்பார்க்கப்பட்ட பிரேம் குமார் துமல் படுதோல்வி அடைந்தார். இதன் காரணமாகவே ஜெய்ராம் தாகூர் முதல்வரானார். ஜெய்ராம் தாகூரின் சொந்த மாவட்டமான மண்டியில் மொத்தம் 10 தொகுதிகள் உள்ளன. ஆட்சியைப் பிடிப்பதில் இந்த மாவட்டத்தில் வெல்வது முக்கியம்.

சமூகம்
முதல்வர் ஜெய்ராம் தாகூரின் சொந்த மாவட்டம் என்பதால் இயல்பாகவே அங்கு பாஜகவுக்கு ஆதரவு இருக்கும். அதேபோல பெரும்பான்மையாக உள்ள தாகூரை சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் ஒரு பிளஸ் பாயிண்ட். அங்குக் கடந்த 1993 முதல் தாகூரை சமூகத்தைச் சேர்ந்தவரே முதல்வராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவையெல்லாம் சேர்ந்த நட்டாவுக்கும் பாஜகவுக்கும் வெற்றியை எளிதாக்க வாய்ப்புகள் உள்ளன.

வெற்றி உறுதி இல்லை
இருப்பினும் நிச்சயம் வெற்றி எனச் சொல்ல முடியாது. ஏனென்றால் இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸும் கூட இறங்கி வேலை செய்துள்ளது. மேலும், நட்டா அதிருப்தியாளர்களும் பாஜகவுக்கு எதிராகக் களமிறங்கி உள்ளது. ஒரு மைனஸ். இந்த இமாச்சல பிரதேச தேர்தல் நட்டாவுக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. இதில் பாஜக தோற்றால் நட்டாவுக்கு உடனடியாக பிரச்சினை வராது, ஜெய் ராம் தாக்கூரை தோல்விக்குக் காரணமாகச் சொல்லிவிடுவார்கள்.

நட்டாவுக்கு முக்கியம்
ஆனால், நட்டாவின் செல்வாக்கு அவரது சொந்த மாநிலத்திலேயே சரியும். மத்திய அமைச்சராக உள்ள அனுராக் தாக்கூரின் செல்வாக்கு இமாச்சல பிரதேசத்தில் அதிகரிக்க முடியும். அங்கு பல தேர்தல்களாகக் காங்கிரஸ், பாஜக மாறி மாறியே ஆட்சியைப் பிடித்துள்ளன. அதை நட்டாவால் முறியடிக்க முடியும் பட்சத்தில் அது அவரது அரசியல் வாழ்க்கையில் முக்கியமானதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications