காரை தனியாக ஓட்டி சென்றது ஏன்? ரிஷப் பண்ட்டின் ஷாக் பதில்.. இப்படி பண்ணிட்டாரே.. புலம்பும் ரசிகர்கள்
டெல்லி: உத்தரகண்ட்டில் கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட்டின் கார் நேற்று அதிகாலை விபத்தில் சிக்கி தீப்பற்றி எரிந்தது. இதில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஜன்னல் கண்ணாடியை உடைத்து வெளியே வந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் ரிஷப் பண்ட் தனியாக காரை ஓட்டி சென்றது ஏன்? என்பது பற்றிய விபரம் வெளியாகி ஷாக்கை தந்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்னாக இருந்து வரும் ரிஷப் பண்ட் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்.
இவர் டெல்லி அருகே உள்ள உத்தரகண்ட் மாநிலம் ரூர்கே பகுதியில் பிறந்தார். இதுதான் அவரது சொந்த ஊர். இருப்பினும் ரிஷப் பண்ட் தற்போது தலைநகர் டெல்லியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட் கார்
இந்நிலையில் தான் நேற்று அதிகாலை ரிஷப் பண்ட் காரில் டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். கார் முகமத்பூர் ஜாட் பகுதி அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று ரிஷப் பண்டின் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி சாலை தடுப்புகளில் மோதி தீப்பிடித்து எரிந்தது. காரில் இருந்த ரிஷப் பண்ட் கண்ணாடிகளை உடைத்து வெளியே வந்தார்.

ரிஷப் பண்ட்டிற்கு சிகிச்சை
இருப்பினும் அவர் படுகாயமடைந்தனர். ரிஷப் பண்ட்டின் தலை, முதுகு, கால் ஆகியவற்றில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு டேராடூனில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் நலமாக உள்ளார்.

வெளியான வீடியோ
இதற்கிடையே விபத்தில் ரிஷப் பாண்ட் சிக்கிய வீடியோ, மேலும் காயங்களுடன் அவரது போட்டோக்கள் இணையதளத்தில் பரவ தொடங்கின. இது அனைவரையும் ஷாக்கடைய வைத்தது. இதற்கிடையே ரிஷப் பண்ட் வேகமாக குணமடைந்து மீண்டும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து கடவுள்களிடம் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

தனியாக கார் ஓட்டியது ஏன்?
இதற்கிடையே தான் ரிஷப் பண்ட் விபத்தில் சிக்கியது தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ரிஷப் பண்ட் தூங்கியபடி வாகனம் ஓட்டியதால் விபத்து நடந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் தான் தற்போது இன்னொரு விஷயம் கசிந்துள்ளது. ரிஷப் பண்ட் ஏன்? தனியாக கார் ஓட்டி சென்றார் என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ரிஷப் பண்ட்டுக்கு தனியாக கார் ஓட்டும் வாய்ப்பு என்பது கிடைக்காதாம். எப்போதும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் தான் கார் ஓட்டுவார்களாம். இதனால் ரிஷப் பண்ட்டிற்கு தனியாக கார் ஓட்ட வேண்டிய விருப்பம் வந்துள்ளது. இதனால் தான் அவர் டெல்லியில் இருந்து ரூர்க்கியில் உள்ள வீட்டுக்கு காரில் தனியாக சென்றபோது விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது.

புலம்பும் ரசிகர்கள்
விபத்துக்கு பிறகு காயமடைந்து துடிதுடித்த நிலையில் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது ஊழியர் கேட்டபோது ரிஷப் பண்ட் இந்த தகவலை கூறியுள்ளார். இதனை கேட்கும் ரசிகர்கள் ரிஷப் பண்ட் இப்படி பண்ணிட்டாரே, காலையில் கூட காரை தனியாக எடுத்து சென்று இருக்கலாமே என கூறி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications