மாம்பழம்.. ராகுல் உள்பட 7 எம்பிக்களுக்கு போன பார்சல்! பாகிஸ்தான் தூதரகம் அனுப்பியது ஏன்? சுவாரசியம்
டெல்லி: பாகிஸ்தான் தூதரகம் சார்பில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவரான காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி உள்பட 7 பேருக்கு அட்டைப்பெட்டி பார்சலில் திடீரென்று மாம்பழம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் பாஜக எம்பிக்கள் ஒருவர் கூட இல்லாத நிலையில் அதன் பின்னணியில் உள்ள சுவாரசிய தகவல் வெளியாகி உள்ளது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி கேரளா மாநிலம் வயநாடு மற்றும் உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி ஆகிய தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதில் வயநாடு எம்பி பதவியை அவர் ராஜினாமா செய்த நிலையில் ரேபரேலி தொகுதி எம்பியாக உள்ளார்.

இதன்மூலம் லோக்சபாவில் காங்கிரஸ் எம்பிக்களின் எண்ணிக்கை என்பது 98 ஆக உள்ளது. இதனால் கடந்த 10 ஆண்டுகளுக்கு பிறகு லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் பதவி காங்கிரஸை கைப்பற்றி உள்ளது. லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி செயல்பட்டு வருகிறார்.
இந்நிலையில் தான் டெல்லியில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் தூதரகம் சார்பில் ராகுல் காந்தி உள்பட 7 எம்பிக்களுக்கு அட்டைபெட்டி நிறைய மாம்பழங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, திருவனந்தபுரம் காங்கிரஸ் எம்பி சசிதரூர், சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த உத்தர பிரதேச மாநிலம் ராம்புர் எம்பி மொஹிபுல்லா நட்வி, சாம்பல் தொகுதி எம்பி ஜியா உர் ரஹ்மான் பர்க், கைரானா தொகுதியின் பெண் எம்பியான ஹை சவுத்ரி என்ற இக்ரா ஹாசன், காசிப்பூர் எம்பி அப்சல் அன்சாரி, ராஜ்யசபா எம்பி கபில் சிபல் ஆகியோருக்கு மாம்பழ பார்சல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மாறாக பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சியில் உள்ள எம்பிக்களுக்கு மாம்பழம் எதுவும் அனுப்பி வைக்கப்படவில்லை. இந்நிலையில் தான் இது அதிக கவனம் பெற்றுள்ளது. மேலும் அதன் பின்னணியில் உள்ள சுவாரசிய தகவல் என்பது வெளியாகி உள்ளது. அதாவது ஒவ்வொரு ஆண்டும் பாகிஸ்தான் தூதரகம் சார்பில் நட்பு பாராட்டும் வகையில் எம்பிக்களுக்கு மாம்பழம் என்பது அனுப்பி வைக்கப்படும். அந்த வகையில் இந்த முறை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் ராகுல் காந்தி உள்பட 7 எம்பிக்களுக்கு மாம்பழங்களை அனுப்பி வைத்துள்ளது.
சகதியில் கால் படாதா? காரை விட்டு இறங்கி வர மாட்டீங்களோ? வயநாட்டில் ராகுலிடம் சண்டைக்கு போன மக்கள்
நம் நாட்டை பொறுத்தவரை இந்த மாம்பழம் அனுப்பி நட்பு பாராட்டும் வழக்கம் ஒன்றும் புதிதல்ல. இது காலம் காலமாக நடந்து வருகிறது. தற்போது வங்கதேசத்தின் பிரதமர் பதவியை இழந்த ஷேக் ஹசீனா ஒவ்வொரு முறையும் பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தனித்தனியாக மாம்பழம் அனுப்பி வைத்து நட்பு பாராட்டுவார்.
சிக்கலில் ஷேக் ஹசீனா.. நீண்டகாலம் அடைக்கலம் கொடுக்க நம் நாடு தயங்குவது ஏன்? பின்னணியில் 3 காரணம்
அதேபோல் அரசியலில் எதிரெதிர் துருவங்களாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் பிரதமர் நரேந்திர மோடி அறியப்படுகின்றனர். இருப்பினும் கூட மம்தா பானர்ஜி, பிரதமர் மோடிக்கு தங்கள் மாநிலத்தில் விளைந்த சுவை மிகுந்த மாம்பழங்களை அனுப்பி வைத்து நட்பு பாராட்டுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
முன்னதாக இந்த மாம்பழ கலாசாரத்தை இந்தியாவும், அண்டை நாடான சீனாவுடன் தொடர்ந்து வந்தது. இந்தோ - சீனா போர் தொடங்கும் வரை 1950ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்திய தலைவர்கள், சீனாவுக்கு மாம்பழங்களை அனுப்பி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications