Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"5 பாயிண்ட்".. காங்கிரஸ் தலைவர் பதவி.. ராகுல் காந்தி ஏன் அந்த விசயத்துக்கு சரிப்பட்டு வர மாட்டார்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இன்று நடைபெற்று வரும் காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகியோர் போட்டியிடும் நிலையில் காங்கிரஸ் எம்.பியும் காந்தி குடும்பத்தின் தற்போதைய நம்பிக்கைக்குரிய முகமாகவும் விளங்கும் ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக ஏன் சரிப்பட்டு வரமாட்டார் என்ற 5 காரணங்களை பட்டியலிட்டு உள்ளோம்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து பதவி விலகினார். அதன் பின்னர் புதிய தலைவராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை. காங்கிரஸ் மூத்த தலைவராக இருந்த சோனியா காந்தியே இடைக்கால தலைவராக பதவியேற்று கட்சியை வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அக்டோபர் 17 ஆம் தேதியான இன்று காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அக்டோபர் 19 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் செப்டம்பர் 24 தேதி தொடங்கி கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி நிறைவடைந்தது. இதில் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசி தரூர் ஆகியோர் நேருக்கு நேர் மோதுகின்றனர். இதில் கார்கேவுக்கு வெற்றிவாய்ப்பு அதிகம் என கூறப்படுகிறது.

காரணம் 1 - குடும்பம்

காரணம் 1 - குடும்பம்

எந்த குடும்பத்தின் பெயர் இத்தனை ஆண்டுகாலமாக காங்கிரஸ் கட்சிக்கு பலமாக இருந்ததோ அதே பெயர் தற்போது கட்சிக்கு பலவீனமாக மாறி இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி காங்கிரஸ் கட்சியை வாரிசு கட்சி என்றும், காந்தி குடும்பத்தை சேர்ந்தவர்களை தவிர்த்து வேறு யாரும் அதிகாரத்துக்கு வர முடியாது என்றும் தெரிவித்து வந்தது. பாஜகவின் இப்பிரச்சாரம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துவிட்ட நிலையில் காந்தி குடும்பத்தை சாராதவரை தலைவராக நிறுத்த வேண்டிய தேவை காங்கிரஸுக்கு எழுந்துள்ளது.

காரணம் 2 - தேர்தல்

காரணம் 2 - தேர்தல்

கடந்த சில ஆண்டுகளாக காங்கிரஸ் அடைந்து வரும் படுதோல்விகளுக்கு ராகுல் காந்தியே காரணம் என்று கூறப்படுகிறது. தற்போது காங்கிரஸ் கட்சி ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் மட்டுமே ஆட்சியில் உள்ளது. பீகார், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. பஞ்சாப், கேரளா, புதுச்சேரி, கோவா, உத்தராகண்ட், அசாம் ஆகிய மாநிலங்களில் வெற்றிபெற வாய்ப்பு இருந்தும் அக்கட்சி தோல்வியடைந்தது ஏமாற்றம் அளித்தது. ராகுல் காந்தியின் தேர்தல் வியூகங்கள் பயனளிக்கவில்லை என்ற எண்ணம் மக்கள் மத்தியில் மட்டுமின்றி காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியிலும் எழுந்துள்ளது.

காரணம் 3 - நிர்பந்தம்

காரணம் 3 - நிர்பந்தம்


காங்கிரஸ் கட்சிக்கு மீண்டும் தலைவராக வேண்டும் என்ற விருப்பம் ராகுல் காந்திக்கு இல்லை என்று காங்கிரஸ் மூத்த தலைவர்கள் கூறுகிறார்கள். ராகுல் காந்தி மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்வு செய்யப்பட்டால், காங்கிரஸில் வேறு தகுதியான தலைவர்கள் இல்லை என்ற கருத்து வெளியில் பகிரப்படும். பலமான தலைவர்கள் இல்லாததால் ராகுல் காந்தி நிர்பந்தத்தின் காரணமாக தலைவராகியுள்ளாரா என்ற கேள்வியும் எழும். அத்துடன் காந்தி குடும்பம் தகுதியானவர்களுக்கு வாய்ப்பளிக்க மறுக்கிறது என்ற மற்ற கட்சிகளின் வாதத்திற்கு இது வலு சேர்ப்பதாகிவிடும்.

 காரணம் 4 - உட்கட்சிப்பூசல்

காரணம் 4 - உட்கட்சிப்பூசல்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களாக திகழ்ந்த பலர் வெளிப்படையாகவே கட்சித் தலைமையின் முடிவுகளுக்கு எதிராக கருத்து தெரிவிக்க தொடங்கிவிட்டார்கள். சில தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி வேறு கட்சிகளில் இணைந்துவிட்டார்கள். கட்சியில் இருக்கும் தலைவர்களும் தற்போதைய காங்கிரஸ் தலைமையால் அதிருப்தியில் இருந்து வருகிறார்கள். மீண்டும் ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவரானால் கட்சியிலிரும் பலர் விலகுவதற்கு வாய்ப்பு உள்ளது.

 காரணம் 5 - நேரமின்மை

காரணம் 5 - நேரமின்மை

ராகுல் காந்தியால் அடிக்கடி கட்சிக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை என்றும், திடீரென கட்சி, ஊடகங்களின் கண்களைவிட்டு அவர் மறைந்துவிடுகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் முன் வைக்கப்படுகின்றன. இதற்கு காரணம் அடிக்கடி அவர் செல்லும் வெளிநாட்டு பயணங்கள். அதை தவறு என்று சொல்ல முடியாது. காரணம் தன்னுடைய தாய் சோனியா காந்திக்கு உடல்நலக்குறைவு ஏற்படுவதால் அவரை வெளிநாடுகளுக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்று வருகிறார். தாயை கவனித்துக் கொள்வதிலேயே அவர் பெரும்பான்மை நேரத்தை செலவிடுகிறார். எனவே முழு நேர அரசியல்வாதி தலைவராக வேண்டும் என அக்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+