"சூதாட்டம்.." கிரிப்டோ கரன்சிகளுக்கு முழு தடை விதிக்கணும்.. அதற்கு மதிப்பே இல்லை! ஆர்பிஐ ஆளுநர்
டெல்லி: இந்தியாவில் கிரிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயங்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அது சூதாட்டத்திற்கு இணையானது என்றும் அதற்கு ஒட்டுமொத்தமாகத் தடை விதிக்க வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை எங்குத் திரும்பினாலும் கிரிப்டோ கரன்சிகள் பற்றியே பேச்சுக்கள் இருந்து. கடந்த 2021 இறுதியில் ஒரு பிட்காயின் அதிகபட்சம் 47 லட்சம் வரை சென்றது. ஆனால், அதன் பின்னர் தொடர்ந்து பிட்காயின் மதிப்பு சரிந்தே வருகிறது.
இப்போது பிட்காயின் மதிப்பு மிகப் பெரியளவில் சரிந்து 17-18 லட்ச ரூபாயில் உள்ளது. பிட்காயின் உள்ளிட்ட பல கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்வதாகச் சொல்லி பொதுமக்கள் தங்கள் பணத்தை அதிகம் இழந்து வருகின்றனர்.

ஆபத்தானது
பொருளாதார வல்லுநர்கள் பிட்காயின் உள்ளிட்ட கிரிப்டோ கரன்சிகளுக்கு எதிராகவே தொடர்ச்சியாகக் கருத்துகளைத் தெரிவித்து வந்தனர். கிரிப்டோ கரன்சிகளில் செய்யப்படும் முதலீடு ஆபத்தானது மட்டுமின்றி.. அதில் இருந்து எந்தவொரு பயனும் நமக்கு இல்லை என்றே தொடர்ச்சியாகக் கூறி வந்தனர். இருப்பினும், இளைஞர்கள் விரைவில் பணக்காரராக ஆசைப்பட்டு இதில் முதலீடுகளைச் செய்து வருகின்றனர். இப்போது உலகின் பல்வேறு நாடுகளும் கிரிப்டோ கரன்சிகளுக்கு தடை விதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறது.

முக்கியம்
இந்தியாவில் கிரிப்டோ கரன்சிகளுக்கு முழுமையான தடை இல்லை என்றாலும் கூட இதை வைத்து வர்த்தகம் செய்ய முடியாத அளவுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கிரிப்டோகரன்சிகளை முற்றிலும் தடை செய்ய வேண்டும் என்று கூறிய ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ், இவை சூதாட்டத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றும் அவற்றின் மதிப்பு என்பது மக்களை நம்ப வைப்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். கிரிப்டோகரன்சிகளுக்கு எதிரான குரல் அதிகரித்து வரும் நிலையில், சக்திகாந்த தாஸ் இப்படிக் கூறியுள்ளது முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.

முற்றிலும் தடை விதிக்க வேண்டும்
சில மாதங்களுக்கு முன்பு வரை.. ஏகப்பட்ட கிரிப்டோகரன்சிகள் உலா வந்து கொண்டு இருந்தது.. பலரும் அதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டினார்கள்.. இதைத் தடுக்கவும் ரிசர்வ் வங்கி முதல் முறையாகச் சோதனை அடிப்படையில் டிஜிட்டல் ரூபாயை சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது. இதற்குப் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. கிரிப்டோ கரன்சிகளுக்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ள ரிசர்வ் வங்கி ஆளுநர், ஒரு சின்ன துலிப் பூவுக்கான மதிப்பு கூட இந்த கிரிப்டோ கரன்சிகளுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு மதிப்பும் இல்லை
இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், "ஒவ்வொரு சொத்துக்கும், ஒவ்வொரு பொருளுக்கும் சில அடிப்படை மதிப்பு இருக்க வேண்டும்.. ஆனால் கிரிப்டோ விஷயத்தில் அதற்கு எந்த அடிப்படையும் இல்லை... அதற்கு ஒரு துலிப் மலர் அளவுக்குக் கூட மதிப்பு இல்லை.. கிரிப்டோக்களின் விலை அதிகரிப்பது என்பது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது.. எந்த அடிப்படையும் இல்லாமல், ஒன்றின் விலை முழுமையாக நம்பிக்கை அடிப்படையில் ஏறுவதும் இறங்குவதும் சூதாட்டம் தான்.

சூதாட்டம்
நமது நாட்டில் சூதாட்டத்தை நாங்கள் அனுமதிக்கவில்லை.. நீங்கள் நமது நாட்டில் சூதாட்டத்தை அனுமதிக்க விரும்பினால், அதை (கிரிப்டோ) சூதாட்டமாகக் கருதி, சூதாட்டத்திற்கான விதிகளை வகுக்கவும்.. ஆனால் தெளிவாகச் சொல்கிறேன் கிரிப்டோ ஒரு நிதி சார்ந்த விஷயம் இல்லை.. அதைச் சொத்தாகக் கருதுவதும் மிகவும் தவறான ஒரு விஷயம்.. கிரிப்டோக்களை சட்டப்பூர்வமாக்குவது பொருளாதாரத்தின் அதிக டாலர் மயமாக்கலுக்கு வழிவகுக்கும்.

டாலர் சார்பு
பெரும்பாலான கிரிப்டோக்கள் டாலர் மதிப்புடையவை என்பதால், கிரிப்டோவை வளர அனுமதித்தால் அது டாலர் மயமாக்கலுக்கு வழிவகுக்கும். ஒரு பொருளாதாரத்தில் 20 சதவீத பரிவர்த்தனைகள் தனியார் நிறுவனங்களால் வழங்கப்படும் கிரிப்டோக்கள் மூலம் நடைபெறுகின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள். அப்போது ரிசர்வ் வங்கி அந்த 20 சதவீத பண விநியோகத்தின் மீதான கட்டுப்பாட்டை இழக்கும்.. நிதி கொள்கை மற்றும் பணப்புழக்க நிலைகளை முடிவு செய்யும் திறனும் பாதிக்கப்படும்.. அது டாலர் மயமாக்கலுக்குத் தான் வழிவகுக்கும்.

வெற்று எச்சரிக்கை இல்லை
இது வெற்று எச்சரிக்கை அல்ல.. ஓராண்டுக்கு முன்பு இருந்தே இந்த முழு விஷயமும் விரைவில் சரிந்துவிடும் என்று தொடர்ந்து கூறி வந்தோம்.. கடந்த ஓராண்டாக நடப்பதைப் பார்த்தால் உங்களுக்கே புரிந்து இருக்கும்.. கிரிப்டோவுக்கும் டிஜிட்டல் முறைக்கு நாம் மாறுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் நமக்குப் பாதிப்புகள் இல்லை.. ஆனால், பெரிய டெக் நிறுவனங்கள் உள்ளே வரும்போது டேட்டா பாதுகாப்பு குறித்த கேள்விகள் எழுகின்றன. இதில் மட்டும் நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்" என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications