Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வன்னியர் இடஒதுக்கீட்டை ரத்து செய்ய கேட்ட கேள்விகள் உயர்ஜாதி ஏழைகள் 10% வழக்கில் கேட்கவில்லை?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: முற்படுத்தப்பட்ட அல்லது உயர்ஜாதியினரில் பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு செல்லும் என்கிறது உச்சநீதிமன்ற நீதிபதிகளின் பெரும்பான்மை தீர்ப்பு. வன்னியர் உள் இடஒதுக்கீடு, மராத்தா இடஒதுக்கீடுகளுக்கு எதிராக உச்சநீதிமன்ற தீர்ப்புகள் முன்வைத்த கேள்விகள், 10% இடஒதுக்கீடு வழக்கில் ஏன் எழுப்பப்படவில்லை என்பது இடஒதுக்கீடு ஆதரவாளர்களின் கேள்வி.

நாட்டின் அரசியல் சாசனமானது சமூக ரீதியாக, கல்வி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேற்றத்துக்காக இடஒதுக்கீடு வழங்க வகை செய்துள்ளது. இதனடிப்படையில்தான் நாட்டின் பெரும்பாலான மாநிலங்கள் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடை வழங்குகிறது.

அதுவும் ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு மிக சொற்பமாகவும் இந்த வரையறைக்குள் வராத முற்படுத்தப்பட்ட அல்லது உயர்ஜாதி அல்லது பொது பிரிவினருக்கு மிக அதிகமாகவும் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இதனால்தான் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி இடஒதுக்கீட்டு முறையை சீரமைக்க வேண்டும் என்கிற குரல் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு

உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு

இதனைப் பற்றி கிஞ்சித்தும் அக்கறை கொள்ளாத மத்திய பாஜக அரசு, ஆண்டாண்டு காலமாக ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை அபகரித்து அனுபவித்து வரும் முற்படுத்தப்பட்ட அல்லது உயர்ஜாதி அல்லது பொது பிரிவினரில் பொருளாதார அடிப்படையில் ஏழைகளாக இருப்பவர்களுக்கு 10% இடஒதுக்கீடு வாரி வழங்கியது. ஒட்டுமொத்தமாக இடஒதுக்கீடு வழங்கப்படுவதன் நோக்கத்தையே சிதைக்கிற வகையில், அரசியல் சாசனத்துக்கே எதிரான இந்த பொருளாதார இடஒதுக்கீட்டுக்கு எதிராக திமுக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகளில் பெரும்பான்மையினர், உயர்ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடு செல்லும் என தீர்ப்பளித்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

அடேங்கப்பா கேள்விகள்

அடேங்கப்பா கேள்விகள்

பொதுவாக சமூக ரீதியாக, கல்வி ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க, உள் இடஒதுக்கீடு வழங்க, இடஒதுக்கீட்டு அளவை அதிகரிக்க மாநில அரசுகள் ஏதேனும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் உச்சநீதிமன்றத்தில் எதிர்ப்பு தெரிவித்து மனு போடுவது முற்படுத்தப்பட்ட அல்லது முன்னேறிய அல்லது உயர்ஜாதி கோஷ்டிகள்தான். அப்படி போடப்படுகிற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமும், அதெப்படி பின்தங்கிய வகுப்பு என வரையறை செய்தீங்க? என்ன டேட்டா இருக்கிறது? அதெப்படி பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கை தூக்கிவிடப்பட வேண்டியவர்கள் என ஒரு குறிப்பிட்ட சமூகத்தை வரையறை செய்ய முடியும்? அதுக்கு என்ன டேட்டா இருக்கிறது? என ஏகப்பட்ட கேள்விகளை முன்வைத்து இடஒதுக்கீட்டுக்கு வேட்டு வைப்பதுதான் வழக்கமானது.

வன்னியர் உள் இடஒதுக்கீடு

வன்னியர் உள் இடஒதுக்கீடு

உதாரணமான வன்னியர் உள் இடஒதுக்கீடு விவகாரத்தை எடுத்துக் கொள்வோம். அதாவது தமிழகத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவு -எம்.பி.சி. பிரிவில் மொத்தம் உள்ள 20% இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5% உள் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டது. மேலும் 68 ஜாதிகளை உள்ளடக்கிய சீர்மரபினருக்கு 7%; எஞ்சிய 22 ஜாதியினருக்கு 2.5% இடஒதுக்கீடு சட்டம் கொண்டு கொண்டுவரப்பட்டது. இந்த வன்னியர் உள் இடதுக்கீடு செல்லாது என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பு.

வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்தின் பின்னணி

வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்தின் பின்னணி

வன்னியர் உள் இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட போது விசிகவின் எம்.பி. ரவிக்குமார் தெரிவித்த கருத்து மிக முக்கியமானது. அதாவது முஸ்லீம்கள் மற்றும் அருந்ததியர்களுக்கான இடஒதுக்கீட்டைப் பொருத்தவரை, ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பிலும் மக்கள்தொகைப் புள்ளிவிவரங்கள் கணக்கிடப்பட்டு, அதன் அடிப்படையில், அவர்களது பின் தங்கிய நிலையும், போதிய பிரதிநிதித்துவம் இல்லையென்பதும் கண்டறியப்பட்டு, முறையாகக் கமிஷன் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தன்னிச்சையாகச் செயல்படுவதற்கும், 115 சாதிகளுக்குக் கிடைத்த உரிமைகளைப் பறிப்பதற்கும் எந்த அதிகாரத்தையும் இந்திய அரசியலமைப்புச் சட்டம் அரசுக்கு வழங்கவில்லை. மேலும் எம்.நாகராஜ் வழக்கில் மூன்று அளவுருக்களிலும் நேரடியாக அரசின் கையிலோ அல்லது ஆணையத்திடமோ தரவுகள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கைப் பொருத்தமட்டில் 1994 ஆம் ஆண்டின் சட்டம்45 பிரிவு 7 இன் படி ஆணையத்தின் அறிக்கையின் மூலம் அந்தத் தரவுகள் பெறப்பட வேண்டும். இந்த சட்டத்தை 2021 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்தபோது உச்சநீதிமன்றம் கூறியதோ, அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டிருப்பதோ எதுவும் பின்பற்றப்படவில்லை என கூறியிருந்தார் ரவிக்குமார். அதாவது நீதிமன்றங்களுக்கு போதுமான டேட்டா தரவில்லை; அதனால் இந்த இடஒதுக்கீடு அம்போவானது என்பதுதான் இதன் சாரம்சம்.

மராத்தா இடஒதுக்கீடு

மராத்தா இடஒதுக்கீடு

இதே அவலம்தான் மராத்தா இடஒதுக்கீடு வழக்கிலும் நிகழ்ந்தது. மகாராஷ்டிராவில் கல்வி, சமூக ரீதியாக ஒடுக்கப்பட்ட மராத்தா ஜாதியினருக்கு இடஒதுக்கீட்டை அதிகரிக்க மாநில அரசு முடிவு செய்தது. இதனால் மகாராஷ்டிராவில் மொத்த இடஒதுக்கீடு அளவு 52%-ல் இருந்து 68% ஆக அதிகரித்தது. உச்சநீதிமன்றத்தின் முந்தைய உத்தரவுப்படி மொத்த இடஒதுக்கீடு அளவு 50%-க்கும் அதிகம் என்பதால் மராத்தா இடஒதுக்கீடு ரத்தானது.

10% கேஸில் கேட்கமாட்டாங்களா?

10% கேஸில் கேட்கமாட்டாங்களா?

ஆனால் உயர்ஜாதி ஏழைகளுக்கான 10% இடஒதுக்கீடு வழக்கில் இப்படியான தரவுகள், அளவீடுகள் எதுவும் யாருடைய கண்ணுக்கும் தெரியவில்லை. திமுக உள்ளிட்ட கட்சிகள் கரடியாய் வாதிட்டு, என்ன அடிப்படையில் பொருளாதார அளவு கோல் உருவாக்கப்பட்டது? என்ன அடிப்படையில் ரூ8 லட்சம் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது? உயர்ஜாதி ஏழைகள் என்பது எப்படி வரையறை செய்யபட்டது? என்கிற டேட்டாவை கேட்டது. ஆனால் ஒரு கண்ணில் வெண்ணெய்; மற்றொரு கண்ணில் சுண்ணாம்பு கதையாய் இங்கே டேட்டாக்களும் கோட்டாக்களும் கேள்விக்குள்ளாக்கப்படவில்லை. ஏற்கனவே ஆண்டனுபவித்துக் கொண்டிருக்கிற முன்னேறிய வகுப்பு அல்லது உயர்ஜாதியினருக்கு ஏழைகள் என்ற போர்வையில் மேலும் ஒரு 10% தாரை வார்க்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுவிட்டது. இந்த சமூக அநீதிக்கு எதிராகத்தான் இப்போது பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் ஒருமித்து குரல் எழுப்புகின்றனர்.. வெல்லுமோ நியாயம்தானா?

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+