இந்தியாவில் கிரிப்டோகரன்சிக்கு தடையா? கட்டுப்பாடுகள் வருமா? பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் விளக்கம்
டெல்லி: கிரிப்டோகரன்சியை தடை செய்ய மத்திய அரசுக்கு ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளதாக இன்று நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார். விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கிரிப்டோ கரன்சி குறித்து எழுப்பிய கேள்விக்கு நிதியமைச்சர் மேற்குறிப்பிட்ட பதிலை அளித்துள்ளார்.
கிரிப்டோகரன்சி என்பது ஒரு நாணயத்தின் டிஜிட்டல் வடிவமாகும். இது, நாணயம் அல்லது நோட்டு போன்ற தொட்டு உணரும் வடிவத்தில் உங்கள் கையில் இருக்காது. இது முழுவதும் இணையத்தில் இருக்கும். எந்த சட்டவிதிகளும் இல்லாமல் இதன் மூலம் வர்த்தகம் செய்யப்படுகிறது. இதை அரசோ, ஒழுங்குமுறை அதிகார அமைப்போ வழங்குவதில்லை. டிஜிட்டல் கரன்சி காரணமாக இணைய மோசடிகள் நடப்பதற்கான வாய்ப்பு உள்ளதாக, இவ்விவகாரத்தை மத்திய ரிசர்வ் வங்கி அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளது.

2018 ஆம் ஆண்டில், கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை ஆதரிக்கும் விஷயத்தில், வங்கிகள் மற்றும் முறைப்படுத்தப்பட்ட நிதி நிறுவனங்களுக்கு RBI தடைவிதித்தது. ஆனால், 2020 மார்ச் மாதத்தில் இந்திய உச்ச நீதிமன்றம் ரிசர்வ் வங்கியின் தடைக்கு எதிராக தீர்ப்பளித்தது. 'இந்த விஷயத்தில் எந்த ஒரு முடிவெடுப்பதற்கும் அரசு சட்டத்தை உருவாக்க வேண்டும்' என்று உச்ச நீதிமன்றம் கூறியது.
இந்தியா தனக்கென ஒரு கிரிப்டோகரன்சி மற்றும் அதன் புழக்கம் தொடர்பான வழிவகைகளை ஆராய்ந்து வருவதாக ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு மார்ச் மாதம் கூறியது. இந்த நாணயம் இந்தியாவில் எவ்வாறு பயன்படுத்தப்படும் என்பது அரசின் எதிர்கால முடிவு குறித்த தொலைநோக்குபார்வை நிர்ணயிப்பதாக இருக்கும்.
இந்நிலையில் குளிர்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று கிரிப்டோ கரன்சி குறித்து திருமாவளவன் கேள்வியெழுப்பினார். இதற்கு பதிலளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்த கிரிப்டோ கரன்சியை தடை செய்ய ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளதாகவும், இதை கட்டுப்படுத்த தகுந்த சட்டத்தை இயற்றவும் ரிசர்வ் வங்கி பரிந்துரைத்துள்ளதாகவும் கூறினார். மேலும் கிரிப்டோகரன்சி தொட்டு உணரும் வடிவிலான பணம் அல்ல என்பதையும் சுட்டிக்காட்டினார். இந்தியாவில் எந்த ஒரு பணத்தையும் ரிசர்வ் வங்கிதான் அறிமுகம் செய்யும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
அதேபோல இந்த கிரிப்டோகரன்சிகள் நாட்டின் பொருளாதாரத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்துவது குறித்து ரிசர்வ் வங்கி கவலை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ரிசர்வ் வங்கி தனது சொந்த டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவது குறித்து தற்போது வரை எந்த திட்டத்தையும் அறிவிக்கவில்லை. இது நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் உள்ளது. எனவே அனைவரின் கவனமும் கிரிப்டோகரன்சியை நோக்கி நகர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications