டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மனைவியுடன் கணவன் வல்லுறவு கொள்வது தவறா? நீதிபதிகள் தனி தனி தீர்ப்பு! உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை

Google Oneindia Tamil News

டெல்லி: மனைவியுடன் கணவன் கட்டாய உடலுறவு கொள்வதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு தனித்தனி தீர்ப்பு வழங்கி உள்ளன. மனைவியுடன் கணவன் கட்டாய உறவு கொள்வது தவறு இல்லை என்று ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்கி உள்ளார். இன்னொரு நீதிபதி இதற்கு எதிராக தீர்ப்பு வழங்கி உள்ளார். இதையடுத்து வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனைவியுடன் கட்டாய உடலுறவு கொள்வதற்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது. பல்வேறு பெண்கள் நல அமைப்புகள் மூலம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 375 பிரிவின் கணவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள விலக்கை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

சட்டம் என்ன சொல்கிறது

சட்டம் என்ன சொல்கிறது

சட்ட பிரிவு 375 படி ஒரு பெண்ணை ஏமாற்றி, பலவந்தப்படுத்தி, மருந்து கொடுத்து, மிரட்டி, அல்லது உறவினர்களை அடைத்து வைத்து, கணவன் போல வேடமிட்டு ஏமாற்றி பாலியல் உறவு கொள்வது பலாத்காரம் என்று வரையறைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. 16 வயதுக்கு குறைவான பெண்களுடன் எந்த வகையில் பாலியல் உறவு கொண்டாலும் அது பாலியல் பலாத்காரம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே சமயம் 16 வயதுக்கு மேற்பட்ட மனைவியிடம் கணவன் அனுமதி இன்று பாலியல் உறவு மேற்கொண்டால் அது பாலியல் பலாத்காரம் இல்லை என்று இந்த சட்டம் விலக்கு அளித்துள்ளது.

கணவர்களுக்கு விலக்கு

கணவர்களுக்கு விலக்கு

அதாவது ஒரு கணவர் தன் மனைவியிடம் கட்டாயப்படுத்தி பாலியல் உறவு மேற்கொண்டால், அது தவறு கிடையாது என்று இந்த சட்டம் சொல்கிறது. பல்வேறு பெண் அமைப்புகள் தொடுத்த இந்த வழக்கில், இந்த சட்ட விலக்கை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. மூர்க்கமான கணவர்கள், தங்கள் மனைவிகளை பாலியல் ரீதியாக கொடுமைப்படுத்த இந்த சட்டம் வழி வகுப்பதாக அந்த மனுவில் கூறப்பட்டது.

இந்த வழக்கை டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் ராஜிவ் ஷாக்தேர் மற்றும் ஹரி சங்கர் ஆகியோர் விசாரித்து வந்தனர். கடந்த பிப்ரவரி 21ம் தேதி இந்த வழக்கில் விசாரணை முடிவு பெற்றது. இதில் நீதிபதிகள் இருவரும் மூத்த வழக்கறிஞர்கள் ரெபேக்கா ஜான், ராஜேஷ்வர் ராவ் ஆகியரை ஆலோசர்களாக நியமித்து இருந்தனர்.

மத்திய அரசு வாதம்

மத்திய அரசு வாதம்


பெண்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். ஆனால் அதே சமயம் இந்த சட்டத்தில் போதிய மாற்றங்களை செய்ய ஆலோசனைகளை செய்து வருகிறோம். மத்திய அரசு மாநில அரசுகளிடம் இது பற்றி அவர்களின் நிலைப்பாட்டை கேட்டுள்ளது. அவர்கள் இதில் பதில் அளிக்க வேண்டும். அதுவரை இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் விசாரணை நடத்த கூடாது.

ஆனால் உயர் நீதிமன்ற நீதிபதிகள், இதை ஏற்க மறுத்தனர். அதோடு மத்திய அரசு எத்தனை காலத்திற்குள் மாநில அரசுகளின் கருத்துக்களை கேட்டு இதில் முடிவு எடுக்கும் என்று விளக்கமாக சொல்லவில்லை என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டு இருந்தனர். இந்த நிலையில்தான் மனைவியுடன் கட்டாய தாம்பத்யம் கொள்வதற்கு எதிரான வழக்கில் இன்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

இரட்டை தீர்ப்பு

இரட்டை தீர்ப்பு

மனைவியுடன் கணவன் கட்டாய உடலுறவு கொள்வதற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில் 2 நீதிபதிகள் அமர்வு தனித்தனி தீர்ப்பு வழங்கி உள்ளன. மனைவியுடன் கணவன் கட்டாய உறவு கொள்வது தவறு இல்லை என்று நீதிபதி ராஜிவ் ஷாக்தேர் தீர்ப்பு வழங்கி உள்ளார். இன்னொரு நீதிபதி ஹரி சங்கர் இதற்கு எதிராக தீர்ப்பு வழங்கி.. இந்த விலக்கை நீக்க வேண்டும் என்று கூறி உள்ளார். இதையடுத்து வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு பரிந்துரை செய்யப்படுகிறது.

கர்நாடக கோர்ட்

கர்நாடக கோர்ட்

ஏற்கனவே மனைவியுடன் கட்டாய உடல் உறவு' கொள்வதும் பாலியல் வன்கொடுமைதான் என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடகாவில் பெண் ஒருவர் தனது கணவர் தன்னை கட்டுப்படுத்தி வன்புணர்வு செய்வதாக தொடுத்த வழக்கில், மனைவியுடன் கட்டாய உடல் உறவு தவறு என்று கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Will marital rape be criminalized? Delhi High Court to pronounce verdict today. மனைவியுடன் கட்டாய உடலுறவு கொள்வதற்கு எதிரான வழக்கில் இன்று டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X