டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டேய்... என்னடா இதெல்லாம்.. ஏன்டா இப்படி... இப்படில்லாமாடா பிராடுத்தனம் பண்ணுவீங்க?!

Google Oneindia Tamil News

டெல்லி: சில பேர் இருப்பாய்ங்க.. பிராடுத்தனத்தின் பிசிக்ஸ், கெமிஸ்ட்ரியை பிச்சு உதறி மேஞ்சுட்டு போயிருவானுக.. இன்னும் சில பக்கிங்க இருக்குங்க.. மோசடித்தனத்தின் அனாடமியை அக்குவேறு ஆணி வேறாக உரித்தெடுத்து ஊதித் தள்ளிட்டு போய்ட்டே இருப்பாய்ங்க.. இது மாதிரியா உலக பிராடுகளை ஒட்டுக்காக உங்க முன்னாடி நிறுத்துவதுதான் இந்த கட்டுரையின் ஒரே நோக்கம்.

இந்தியாவில் நாம் பார்க்காத ஊழலா, மோசடியா, கேடித்தனமா, கேப்மாரித்தனமா… ஆனால் இதை எல்லாம் யார் செய்வார்கள்? பெரும்பாலும் அரசியல்வாதிகளும், தொழில்அதிபர்களும் தான் இதுபோன்ற சர்ச்சைகளில் சிக்குவார்கள். ஆனால் இவர்களுக்கு நாங்கள் எந்த வகையிலும் சளைத்தவர்கள் அல்ல என்று சவால்விடும் சாமானியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைப் பற்றியது தான் இந்த கட்டுரை.

நம்மூரில் கடந்த சில நாட்களாக நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த புகாரில் சில மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் சிக்கி வருகின்றனர். இதெல்லாம் நாம் வழக்கமாக கேள்விப்படும் மோசடிகள்தான். நாம் கேள்வியேபட்டிராத கேடித்தனங்கள் எல்லாம் நடக்கின்றன.

சீனாவில் ஒரு குடும்பமே சேர்ந்து மோசடித்தனம் செய்து சிக்கியிருக்கிறது. அவர்கள் அப்படி என்ன மோசடி செய்தார்கள் என்று கேட்டால் அசந்துபோய் விடுவீர்கள். ரொம்ப சிம்பிள், கல்யாணம் பண்ணியிருக்கிறார்கள். இது எப்படிங்க தப்பாகும் என்று நீங்கள் கேட்கலாம். உங்களுக்கு அந்நியன் பாணியில் சொன்னால் நன்றாகப் புரியும். ஒரு ஆளு ஒரு கல்யாணம் பண்ணா தப்பா? தப்பு இல்லை.. ஒரே ஆளு ரெண்டு மூணு கல்யாணம் பண்ணா தப்பா? தப்புதான். அதே ஆளு அடுத்தடுத்து கல்யாணம், டைவர்ஸ் என்று பண்ணிக் கொண்டே இருந்தால் தப்பா. பெரிய தப்புமாதிரி தெரியுதே. அந்த ஆளு குடும்பமே இப்படி ஒருத்தரை ஒருத்தர் மாத்தி மாத்தி கல்யாணம் பண்ணி, டைவர்ஸ் பண்ணிக்கிட்டே போனா தப்பா? இது ஏதோ மோசடி மாதிரி இருக்கே. கரெக்ட். இப்ப நீங்க பாயிண்டை பிடிச்சிட்டீங்க.

கில்மா குடும்பம்

கில்மா குடும்பம்

இதே சந்தேகம்தான் சீனாவின் வீட்டுவசதி கழக அதிகாரிகளுக்கும் வந்திருக்கு. மேட்டர் என்னன்னா, சீனாவில் கிராமப்புறங்களை நகரமயமாக்கி வர்ராங்க. இதுக்காக கிராமங்களில் நிலங்களை கையகப்படுத்தி அடுக்குமாடி குடியிருப்புகளை கட்றாங்க. அப்படி கட்டும் போது, அந்த கிராமத்தில் வசிக்கும் ஆட்களுக்கு அதில் குடியிருப்புகளை இலவசமாக ஒதுக்கித் தராங்க. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட பேன் என்ற சீனாகாரருக்கு மண்டைக்குள் பல்பு எரிந்திருக்கிறது. அவரின் முன்னாள் மனைவி ஷி, சீனாவின் சீஜியாங் மாகாணத்தில் ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார். அந்த கிராமத்தில் இதுபோன்ற அடுக்குமாடி கட்டப்பட்டு வருவதாக பேனுக்கு தகவல் கிடைக்கிறது. அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடு பெற வேண்டும் என்றால் அவர் அந்த கிராமவாசியாக இருக்க வேண்டும். ஆனால் அவரின் முன்னாள் மனைவிதான் அந்த கிராம வாசி. அவரும் இப்போது சட்டப்படி இவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டார். இப்போ, என்ன செய்வது ?

மறுபடியும் கண்ணாலம்

மறுபடியும் கண்ணாலம்

டைவர்ஸ் வாங்கிட்டா மறுபடியும் சேரக் கூடாதா என்ன? மறுபடியும் கட்ரா தாலிய என்று முன்னாள் மனைவியையே மீண்டும் மணந்துகொண்டார் பேன். இதை சொல்லி வீடு ஒதுக்கீடும் வாங்கிவிட்டார். அத்தோடு நின்றிருந்தால் பரவாயில்லை. ஆசை யாரை விட்டது. ஆறே நாளில் ஷீயை விவாகரத்து செய்துவிட்டு, அவரின் தங்கையை கட்டிக் கொண்டார். இதைக்காட்டி இன்னொரு வீடு. அப்புறம் அவரையும் டைவர்ஸ் செய்துவிட்டு, அவரின் மற்றொரு உறவினரை கட்டிக்கிட்டார், அதுக்கு ஒரு வீடு.

அத்தை.. நீ செத்தடி!

அத்தை.. நீ செத்தடி!

இவர் இப்படி ஒரு ரூட்டில் போய்க்கொண்டிருக்க, அவரின் தர்மபத்தினி ஷீ, அதே கிராமத்தில் இன்னொரு ஆளை மடக்கி கல்யாணம் பண்ணி, அவர் பேரில் ஒரு வீடு ஒதுக்கீடு வாங்கிட்டாங்க. இப்படியே குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் இதையே ஒரு வேலையா செஞ்சி வீடு மேல வீடா ஒதுக்கீடு வாங்கித் தள்ளியிருக்காங்க. இப்படி அந்த குடும்பத்தில் 11 பேர் சேர்ந்து 23 கல்யாணம் பண்ணி டைவர்ஸூம் பண்ணியிருக்காங்க. என்னடா இந்த குடும்பம் அடிக்கடி ஒதுக்கீடு கேட்டு வருதேன்னு சந்தேகம் வந்த ஆபிசர் ஒருத்தர் விசாரிக்க ஆரம்பிச்சதில், இவர்களின் குட்டு அம்பலமாகிவிட்டது. எக்கச்சக்க மாமியார் வீடுகளை உருவாக்கிய பேன், இப்போது நிஜமான "மாமியார் வீட்டில்" இருக்கிறார்.

அமெரிக்காவிலும் உண்டே

அமெரிக்காவிலும் உண்டே

இதேபோல அமெரிக்காவில் இரண்டு இளம்பெண்கள் நிறைய பேரை ஏமாற்ற புது வழி ஒன்றை கையாண்டிருக்கிறார்கள். கலிஃபோர்னியாவின் ஃபான்டனா நகரைச் சேர்ந்த ஒருவருக்கு ஒரு ஃபோன் வருகிறது. எதிர்முனையில் பேசிய பெண், தான் அமெரிக்காவின் வரி முறைகேடுகளை விசாரிக்கும் IRS - Internal Revenue Service அதிகாரி என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார். நீங்கள் நிறைய வரி முறைகேடுகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள், உங்களை கைது செய்யப் போகிறோம் என்கிறார். இந்த பக்கம் இருந்த நபர் இதைக் கேட்டதும் அரண்டு போய்விட்டார். அப்புறம் பேரம் பேச ஆரம்பித்த எதிர்முனை, 2200 டாலர்களை பிரபல கிஃப்ட் கார்ட் முறை மூலம் அனுப்ப சொல்கிறது. நம்மாளும் பயந்துபோய் சொன்னது போலவே 2200 டாலருக்கு கிஃப்ட் கார்ட் வாங்கி அனுப்பிவிட்டார். கொஞ்சம் பதட்டம் தணிந்ததும், லேசாக சந்தேகம் எழு, எதற்கும் இருக்கட்டும் என்று லோகல் போலீசில் இது பற்றி ஒரு புகார் கொடுத்திருக்கிறார்.

பலே பாண்டியம்மா!

பலே பாண்டியம்மா!

புகாரை விசாரிக்க போலீஸ் களமிறங்கிய போதுதான், இரு இளம்பெண்கள் இதுபோன்ற மோசடியை பலரிடம் அரங்கேற்றி இருப்பது தெரியவந்திருக்கிறது. பலரை தொலைபேசியில் கூப்பிட்டு மிரட்டும் இவர்கள், கிஃப்ட் கார்ட் மூலம் பணம் பெற்றுக் கொள்கின்றனர். பின்னர் அந்த கார்டுகளை கொண்டு போய் ரெடீம் செய்து தேவையான பொருட்களை ஷாப்பிங் செய்கின்றனர். இப்படி அவர்கள் அந்த கார்டை எங்கு கொண்டு ரெடீம் செய்கிறார்கள் என்பதை கண்டுபிடித்து, அந்த கடையில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை வைத்து இந்த இளம் தில்லாலங்கடிகளை மடக்கியிருக்கிறது அமெரிக்க போலீஸ். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இதேபோல பலரை ஏமாற்றி, இந்த பலே கேடிகள் 9 லட்சம் டாலர்கள் வரை கறந்திருப்பது தெரிய வந்திருக்கிறது.

 தொலைபேசி மோசடி

தொலைபேசி மோசடி

இதேபோல சீனாவில் ஒரு பெண்ணை தொலைபேசியில் தொடர்பு மர்ம நபர், தான் சீன அரசு அதிகாரி என்றும், நீங்கள் பணப்பறிமாற்ற மோசடிகளில் ஈடுபட்டிருக்கிறீர்கள், நிறைய வங்கிக் கணக்கு விவரங்களை திருடி விற்றிருக்கிறீர்கள், உங்களை கைது செய்யப் போகிறோம் என்று மிரட்டி இருக்கிறார். இதுமட்டுமின்றி வீடியோ காலில், அரசு ஆவணம் போன்ற சிலவற்றையும் காட்டியிருக்கிறார். இதைப் பார்த்து மிரண்டுபோன அந்த பெண், அந்த ஆளிடம் ஆன்லைனில் 5 லட்சம் டாலரை கொடுத்து ஏமாந்திருக்கிறார். இதுபோன்ற மோசடிகள் சமீபத்தில் சீனாவில் அதிகளவில் நடைபெறுவதாக அந்நாட்டு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

இதெல்லாம் செம டிரிக்ஸ்மா

இதெல்லாம் செம டிரிக்ஸ்மா

பணப்பரிமாற்றத்தில் பல்வேறு டிஜிட்டல் முறைகள் வந்த பிறகு உலகம் முழுவதும் இதுபோன்ற மோசடிகள் அதிகரித்திருப்பதாக சொல்கிறார்கள். அதிலும் குறிப்பாக இளம்பருவத்தினர்தான் டிஜிட்டல் மோசடிகளில் எளிதில் ஏமாந்துவிடுகிறார்களாம். இதுபோன்ற மிரட்டல் தொலைபேசிகள் வந்தால், உடனே பயந்துவிடாமல், அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் கொடுங்கள் என்கிறார்கள்.

ஆசையை தூண்டி விட்டு

ஆசையை தூண்டி விட்டு

சதுரங்க வேட்டை படத்தில் வருவதைப் போல நம் அறியாமையையும், ஆசையையும் ஆதாரமாக வைத்தே பெரும்பாலும் இதுபோன்ற குற்றங்கள் அரங்கேறுகின்றன. தொழில்நுட்பம் பெருகியிருப்பது ஒருபக்கம் வசதிதான் என்றாலும், இன்னொரு பக்கம் அதன் மூலம் நாம் ஏமாற்றப்படும் வாய்ப்புகளும் அதிகரித்திருக்கின்றன. அதனால் யாருக்கு பணம் கொடுக்குறதுக்கு முன்னாடியும் ஒருமுறைக்கு நூறு முறை யோசிங்க. அம்புட்டேதேன் சொல்ல முடியும்.

- கௌதம்

English summary
Here is a compilation of world famout frauds and families.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X