20 வருடங்களில் மிக மோசம்.. கச்சா எண்ணெய் விலை பெரும் வீழ்ச்சி.. பெட்ரோல், டீசல் விலையிலும் சரிவு!

கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையிலும் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையிலும் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுநோய் என்று உலக சுகாதார மையத்தால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால், உலக நாடுகள் எல்லாம் பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க இதனால் பெரிய அளவில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா, சீனா போன்ற பணக்கார நாடுகள், இந்தியா போன்ற வளரும் நாடுகள் எல்லாம் இதனால் பெரிய அளவில் சரிவை சந்திக்க தொடங்கி உள்ளது. தற்போது மத்திய கிழக்கு நாடுகளும் பாதிப்பை சந்தித்து வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

விலை சரிவு

விலை சரிவு

கடந்த மூன்று நாட்களாக தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்து வருகிறது. மிக முக்கியமாக பிரென்ட் வகை கச்சா எண்ணெய்தான் மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. உலகில் 70% கச்சா எண்ணெய் தேவை பிரென்ட் கச்சா எண்ணெய் மூலம்தான் பூர்த்தி செய்யப்படுகிறது. 1991ல் இருந்து மிக மோசமான சரிவை தற்போது பிரென்ட் கச்சா எண்ணெய் சந்தித்து இருக்கிறது. நேற்று மட்டும் இதில் 2% சரிவு ஏற்பட்டது.

எவ்வளவு

எவ்வளவு

கடந்த 3 நாட்களில் 11% சதவிகிதம் வரை பிரென்ட் கச்சா எண்ணெய் சரிந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் 28% சரிவை இது சந்தித்துள்ளது . அதேபோல் யுஎஸ் கச்சா எண்ணெய் 2008க்கு பிறகு மிக மோசமான சரிவை சந்தித்துள்ளது. இதில் 3.2 சதவிகிதம் சரிவு ஏற்பட்டுள்ளது. அதேபோல் யுஎஸ் வேஸ்ட் டெக்ஸாஸ் இன்டெர்மேடியேட் கச்சா எண்ணெய் வகை 2.1% சரிந்துள்ளது.

என்ன மாற்றம்

என்ன மாற்றம்

இதனால் பெட்ரோல் டீசல் விலையில் லேசான மாற்றம் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் பெட்ரோல் விலை 70.14 ரூபாய்க்கும், டீசல் விலை 62.89 ரூபாய்க்கும் விற்கிறது. மும்பையில் பெட்ரோல் விலை 75.70 ரூபாய்க்கும், டீசல் விலை 64.88 ரூபாய்க்கும் விற்கிறது. பெங்களூரில் பெட்ரோல் விலை 72.40 ரூபாய்க்கும், டீசல் விலை 65.04 ரூபாய்க்கும் விற்கிறது.

சென்னை எப்படி

சென்னை எப்படி

இந்த நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 15 காசு குறைந்தது. இதனால் பெட்ரோல் விலை ரூ.72.71 க்கு விற்பனை ஆகிறது. ஒரு லிட்டர் டீசல் விலை 16 காசு குறைந்து விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை ரூ.66.19க்கு விற்பனையாகிறது.இன்னும் சில நாட்களில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+