டெல்லியில் மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டம்! பாஜக எம்பிக்கு சம்மன் அனுப்புகிறது டெல்லி போலீஸ்!
டெல்லி: மல்யுத்த வீராங்கனைகள் டெல்லியில் இன்று 9-வது நாளாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் வேறுவழியே இல்லாமல் டெல்லி போலீசார், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷணுக்கு சம்மன் அனுப்ப முடிவு செய்துள்ளதாம்.
பிரிஜ் பூஷண் உள்ளிட்ட மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகள் மீது நாட்டுக்கு பெருமை தேடி தந்த மல்யுத்த வீராங்கனைகள் பொதுவெளியில் பகிரங்கமாக பாலியல் அத்துமீறல் புகார்கள் தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தங்களுக்கு நீதி கோரி டெல்லி வீதிகளில் மல்யுத்த வீராங்கனைகள் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் ஒரு கமிட்டியை அமைத்தது மத்திய அரசு. இந்த கமிட்டி அறிக்கை என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாது. இதனால் தங்களுக்கு நீதி கோரி 7 மல்யுத்த வீராங்கனைகள் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பிரிஜ் பூஷணுக்கு எதிராக கடுமை காட்டியது. பிரிஜ் பூஷணுக்கு எதிராக ஒரு வழக்கு கூட ஏன் பதிவு செய்யவில்லையே என கேள்வி கேட்டது.
இதனால் பிரிஜ் பூஷண் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுவிடும் என உறுதி மொழி அளித்தது மத்திய அரசு. இதனடிப்படையில் பிரிஜ் பூஷண் மீது இரு பிரிவுகளில் வழக்கு செய்ததாக டெல்லி போலீஸ் தெரிவித்தது. ஆனாலும் தங்களது கோரிக்கையை ஏற்று பிரிஜ் பூஷண் மீது நடவடிக்கை எடுக்க கோரி மல்யுத்த வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தரில் தொடர் போராட்டம் நடத்துகின்றனர்.

டெல்லியில் இன்று 9-வது நாளாக ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீராங்கனைகள் தொடர் போராட்டம் நடத்துகின்றனர். இதனால் டெல்லி போலீசார் வேறுவழியே இல்லாமல் பிரிஜ் பூஷணை விசாரணைக்காக அழைக்க உள்ளனர். இதற்காக சம்மன் அனுப்புகிறது டெல்லி போலீஸ்.
-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
மொத்தமாக காலியாகும் மம்தா கட்சி.. பாஜகவுக்கு தாவும் 50 திரிணாமுல் MLAகள்? 20 எம்பிக்களும் ராஜினாமா? -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி!












Click it and Unblock the Notifications