தர்மபுரிக்கு வண்டியை விட்ட எடப்பாடி பழனிசாமி! பஞ்சமியில் வராஹி வழிபாடு! தோல்வி கூட தோற்று விடுமாம்!
தருமபுரி : வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு அஷ்ட வராஹி அம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் தமிழக முன்னாள் முதல்வரும், தமிழக எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சாமி கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார்.
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளி தானப்ப கவுண்டர் பள்ளி வளாகத்தில் ஸ்ரீ அஷ்ட வராஹி அம்மன் கோவில் உள்ளது.
இந்த கோவிலில் வளர்பிறை பஞ்சமியை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.இதற்காக கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், காலையில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்யக் குவிந்தனர்.

வராஹி அம்மன் கோவில்
இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் உபகார பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவையும், மகா தீபாராதனை நடைபெற்றது. இந்த வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்த வழிபாட்டையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

எடப்பாடி பழனிசாமி
இதனிடையே இந்த கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு பிரசாதம் வழங்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. இந்த வழிபாட்டில் எடப்பாடி பழனிசாமியுடன் முன்னாள் அமைச்சர் கே.பி. அன்பழகன் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

உற்சாக வரவேற்பு
முன்னதாக சேலத்தில் இருந்து கிருஷ்ணகிரிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமிக்கு காரிமங்கலத்தில் அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் கட்சியின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, ஊராட்சி நிர்வாகிகள், சார்பு அமைப்பு பொறுப்பாளர்கள், உள்ளாட்சி மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்கள் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

என்ன சிறப்பு
வராஹி வழிபாடு மேற்கொண்டால் மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது. குறிப்பாக பஞ்சமி திதி அமாவாசை மற்றும் ஜாதகத்தில் லக்னத்திற்கு குரு ஆறாம் இடத்தில் ஆட்சி அல்லது உச்சம் பெற்று பிறந்தவர்கள் வராஹி வழிபாடு மேற்கொள்ளும் போது தோல்வி கூட தோற்றே விடும் என்கின்றனர். தற்போது அதிமுகவில் அடுத்தடுத்து சிக்கல்களை சந்தித்து வரும் எடப்பாடி பழனிச்சாமி பயம் தெளிந்து மனதில் துணிச்சல் தைரியம் தன்னம்பிக்கை பிறக்க வழிபாடு மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications