’காவிரி’ மூலம் டெல்லிக்கு ரூட் போட்ட அன்புமணி! கிருஷ்ணர் முதல் மசூதி வரை! ஒகேனக்கலில் காட்டிய மாஸ்!
தர்மபுரி : தருமபுரி காவேரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தி மூன்று நாள் நடைபயணம் பிரச்சாரத்தை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று ஒகேனக்கலில் தொடங்கியுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்தை போலவே மாஸ் காட்டிய அன்புமணிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததால் மகிழ்ச்சியில் அவர் தரப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து கட்சியை மறு சீரமைப்பு செய்வதற்காக பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில் கிராமம் கிராமமாக சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
முதற்கட்டமாக திருவள்ளூர் மாவட்டத்தில் இரண்டு நாட்களில் 60 கிராமங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட அவர் கட்சி கொடியை ஏற்றி வைத்து தொண்டர்களை சந்தித்து கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கியதோடு அவர்களது கருத்துக்களையும் கேட்டறிந்தார்.

அன்புமணி ராமதாஸ்
குறிப்பாக வட மாவட்டங்களில் பாமக வலுவாக இருக்கும் பகுதிகளில் உள்ள மக்கள் மற்றும் தொண்டர்களின் குறைகளை கேட்டறிந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பயணத் திட்டம் வரையறுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் தருமபுரி காவேரி உபரி நீர் திட்டத்தை நிறைவேற்ற, வலியுறுத்தி அடுத்த கட்ட போராட்டமாக மூன்று நாள் நடைபயணம் பிரச்சாரத்தை பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று ஒகேனக்கலில் தொடங்கியுள்ளார்.

3 நாள் நடை பயணம்
தருமபுரி மாவட்டம் வழியாக செல்லும் காவிரி ஆற்றில் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளத்தால் அதிகளவு தண்ணீர் கடலில் கலக்கிறது. இந்நிலையில் தர்மபுரி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாவட்டத்தில் உள்ள ஏரி குளங்களுக்கு உபநீரை கொண்டு வலியுறுத்தி பாமக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது. அந்த வகையில் தர்மபுரி மாவட்டத்தில் கையெழுத்து இயக்கம் துவக்கி சுமார் பத்து லட்சம் பேரிடம் கையெழுத்து பெறத்தான் இந்த நடைபயணம்.

விழிப்புணர்வு பயணம்
இதுகுறித்து ஒகேனக்கலில் பேசிய அன்புமணி ராமதாஸ்,"மிக முக்கிய பிரச்சனையான இந்த பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் அடுத்த கட்டமாக, இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை நான் தற்போது மேற்கொண்டு இருக்கிறேன். மூன்று நாட்கள் பிரசாரமாக இன்று தொடங்கி இருக்கிறேன். இந்த நடைப் பயணம் அரசியல் செய்வதற்கான பயணமல்ல. மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பயணம். தருமபுரி மக்கள் பயனடையும் வகையிலான இந்த திட்டத்தை அனைத்து அரசியல் கட்சிகளும் ஆதரிக்கின்றன" என்றார்.

வீதி வீதியாக பிரச்சாரம்
இதனையடுத்து பல்வேறு பகுதிகளை தேர்தல் நேரத்தில் வாக்கு சேகரிப்பது போல வீதி வீதியாக சென்று மக்களிடம் துண்டு பிரசுரங்களை கொடுத்து கையெழுத்து சேகரித்தார் அன்புமணி ராமதாஸ். தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது கூட பிரச்சாரத்திற்கு வந்த கூட்டத்தை விட தற்போது பல மடங்கு கூட்டம் அன்புமணி பின்னால் சென்றது. மேலும் கலைநிகழ்ச்சிகள், ஆட்டம் பாட்டம், ப்ளக்ஸ் பேனர்கள் என உள்ளூர் நிர்வாகிகள் மாஸ் காட்டியிருந்தனர்.

உற்சாகம்
காய்கறி விற்கும் பெண்களிடம் பேசுவது, மசூதிகளில் இஸ்லாமிய மக்களை சந்தித்து ஆதரவு திரட்டியது, நிகழ்ச்சியில் கலை நிகழ்ச்சிகள் கலந்து கொண்ட கலைஞர்களிடம் புகைப்படம் எடுத்துக் கொள்வது கிருஷ்ணர் வேஷம் போட்ட மாணவர்களுடன் புகைப்படம் என அன்புமணியின் இந்த சுற்றுப்பயணம் வேறு விதமாக இருந்தது. முதல் நாளில் கிடைத்த வரவேற்பால் உற்சாகத்தில் இருக்கும் அன்புமணி அடுத்த கட்ட பயணத்தை இன்னும் சிறப்பாக மேற்கொள்ள திட்டமிட்டு இருக்கிறார் போகிற போக்கை பார்த்தால் அடுத்த முறை அண்ணன் தான் எம்பி என்கின்றனர் பாமக பாட்டாளிகள்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications