தர்மபுரி பரிமளா வீட்டில் டக்னு நுழைந்த அரசு ஆபீசர்ஸ்.. 47 வயசு சாந்தி கிட்ட அபார்ஷன் மாத்திரை? ஷாக்
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், ரங்காபுரம் அப்பார்ட்மென்ட்டில், நிசப்தமான நேரத்தில் அரங்கேறியது அந்த சோதனை.. ஆனால், யாரும் எதிர்பாராத நேரத்தில் சுகாதார துறையினர் நடத்திய அந்த மின்னல் வேக அதிரடி நடவடிக்கை, பணத்திற்காக பிஞ்சுயிர்களைப் பலிகொடுக்க துணிந்த ஒரு கும்பலின் சதித்திட்டத்தை வேரோடு சாய்த்துள்ளது. அப்படி என்ன நடந்தது ரங்காபுரத்தில்?
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ரங்காபுரம் பகுதியில், கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தைக் கண்டறிந்து சொல்லும் சட்டவிரோதச் செயல்கள் நடப்பதாக மாவட்ட சுகாதாரத் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

தர்மபுரி பரிமளா வீடு
இந்த தகவலின் அடிப்படையில், மாவட்ட சுகாதார அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான குழுவினரும், பென்னாகரம் போலீசாரும் இணைந்து ஒரு குறிப்பிட்ட வீட்டில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்தச் சோதனையின் போது, மருத்துவத் துறை மற்றும் காவல்துறையினரை அதிர வைக்கும் பல உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
அதாவது ரங்காபுரம் பகுதியில் உள்ள பரிமளா என்ற 34 வயது பெண்ணின் வீட்டில் அதிகாரிகள் குழுவினர் நுழைந்தபோது, அங்கு மருத்துவமனைக்கு இணையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த வீட்டில் சோதனையிட்டதில், கருவில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதைத் துல்லியமாகக் கண்டறியப் பயன்படுத்தப்படும் நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் சட்டவிரோதமாகக் கருக்கலைப்பு செய்வதற்குத் தேவையான அதிகப்படியான அபார்ஷன் மாத்திரைகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. ஒரு சாதாரண குடியிருப்பில் இவ்வளவு ஆபத்தான மருத்துவ பொருட்கள் இருந்தது அதிகாரிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
அபார்ஷன் மாத்திரை
உடனே இதுகுறித்த விசாரணை கையிலெடுக்கப்பட்டது.. விசாரணையில், இந்த சட்டவிரோதச் செயலின் பின்னணியில் உள்ள நபர்கள் குறித்து தெரியவந்தது. அந்த வீட்டின் உரிமையாளரான பரிமளா, செவிலியர் டிப்ளமோ நர்சிங் முடித்திருக்கிறாராம்..
தான் கற்ற மருத்துவ அறிவை நல்வழியில் பயன்படுத்தாமல், சட்டத்திற்குப் புறம்பான பணத்தைச் சம்பாதிப்பதற்காக அவர் இப்படியொரு ரூட்டை தேர்ந்தெடுத்துள்ளார். அவருக்குத் துணையாக ஆதனூர் பகுதியை சேர்ந்த சாந்தி என்ற 47 வயது பெண்ணும் செயல்பட்டு வந்துள்ளதும் தற்போது வெளியே தெரியவந்துள்ளது..
இவர்கள் 2 பேரும் ஒரு குழுவாகச் செயல்பட்டு, தர்மபுரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெண் குழந்தை வேண்டாம் என்று கருதும் பெற்றோர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு ரகசியமாகப் பாலினச் சோதனைகளை நடத்தி வந்துள்ளனர்.
சாந்தியும் உடந்தை
பெண் சிசுக்கொலைக்கு வித்திடும் இத்தகைய செயல்கள், தமிழக அரசின் சட்டதிட்டங்களின்படி மிகக் கடுமையான குற்றமாகும். ஆனால், பரிமளா மற்றும் சாந்தி ஆகிய இரு பெண்களும் பணத்திற்காகத் தொடர்ந்து இதுபோன்ற ஆபத்தான கருக்கலைப்பு ஆலோசனைகளையும், மருந்துகளையும் வழங்கி வந்துள்ளனர்.
இந்த சோதனையின் இறுதியில், சட்டவிரோதப் பாலின நிர்ணயம் மற்றும் கருக்கலைப்பு முயற்சியில் ஈடுபட்டதற்காகப் பரிமளா மற்றும் சாந்தி ஆகிய இருவரையும் பென்னாகரம் காவல்துறையினர் முறைப்படி கைது செய்தனர். அவர்களிடமிருந்த மருத்துவக் கருவிகள் மற்றும் கருக்கலைப்பு மாத்திரைகள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டன.
தர்மபுரி மாவட்டத்தில் இதுபோன்ற கும்பல்கள் இன்னும் எங்காவது செயல்படுகிறதா என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தர்மபுரியில் தப்பி சிக்கிய 2 பெண்கள்
ரங்காபுரம் பகுதியில் நடந்த இந்த அதிரடி நடவடிக்கை, சட்டவிரோத பாலினப் பரிசோதனையில் ஈடுபடும் நபர்களுக்கு ஒரு பெரும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள இரு பெண்கள் மீதும் கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுத் தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...!!!
இவர்கள் 2 பேர் பற்றியும் ஏற்கனவே நிறைய புகார்கள் போலீசுக்கு போனதாம்.. அதனால் இவர்களை கைது செய்ய போலீசார் முயன்றபோது, 2 பேருமே தலைமறைவாகி விட்டார்களாம்.. பிறகு ஜாமீனில் வெளியே வந்து, இப்போது மறுபடியும் இதே காரியத்தை செய்து, தற்போது கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்கள்...!!!












Click it and Unblock the Notifications