இருங்க நவம்பர்ல நான் யாருனு காட்டுறேன்..3க்கு வாங்க ஆள் இல்லை! குப்பையில் தக்காளி..என்னாச்சு பாருங்க
தர்மபுரி: கடந்த ஆண்டு நவம்பர் அக்டோபர் மாதங்களில் ஒரு கிலோ தக்காளியின் விலை 150 ரூபாய்க்கு மேல் விற்பனையான நிலையில் தற்போது விலை அதல பாதாளத்திற்கு சரிந்துள்ளது. ஒரு கிலோ தக்காளியை மூன்று ரூபாய்க்கு கூட வாங்க ஆள் இல்லாத நிலையில் குப்பையில் கொட்டி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் தக்காளியை வீணாக்காமல் மக்களுக்கு இலவசமாக வழங்கியிருக்கிறார் தர்மபுரியை சேர்ந்த விவசாயி ஒருவர்..
ஒரு சீசனில் ஒரு காய்கறியின் விலை சரிவை சந்திப்பதும் மற்றொரு காய்கறியின் விலை அதிகரிப்பதும் வழக்கம் தான். மழைக் காலங்களில் தக்காளியின் விலை ஆனது மிகக் கடுமையாக அதிகரிக்கும். மழை காரணமாக தக்காளி செடியிலேயே அழுகி விடுவதால் மிகக் குறைந்த அளவே மார்க்கெட்டுக்கு தக்காளியின் வரத்து இருக்கும்.

இதனால் தக்காளியின் விலை அதிகரிப்பது வழக்கம் குறிப்பாக. அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தக்காளியின் விலை வெகுவாக அதிகரிக்கும். கடந்த ஆண்டுகளில் 150 ரூபாய் வரை கூட தக்காளி மொத்த மார்க்கெட்டுகளில் விற்பனையானது.
வெளிச்சந்தைகளில் 170 ரூபாய் வரை விற்பனையானது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது பனி மற்றும் மழையின் தாக்கம் குறைந்து இருக்கும் நிலையில் வெயில் அதிகரித்து இருக்கிறது. அதே நேரத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாததால் தக்காளி விளைச்சல் வெகுவாக அதிகரித்திருக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் அதிக அளவில் தக்காளி உற்பத்தி செய்யப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர், ஒட்டன்சத்திரம், சென்னை கோயம்பேடு ஆகிய மொத்த மார்க்கெட்டுகளுக்கு விற்கப்படுகிறது. அங்கிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை கடைகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது அதிக அளவில் தக்காளி விளைச்சல் இருப்பதால் மார்க்கெட்டுக்கு வரத்து அதிகரித்து இருக்கிறது. இதனால் விலை மிகக் கடுமையாக சரிந்திருக்கிறது.
குறிப்பாக கிருஷ்ணகிரி, தருமபுரி, திண்டுக்கல் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தக்காளியை வாங்க ஆள் இல்லாததாலும், அதை சந்தைக்கு கொண்டு செல்வதற்காக ஆகும் செலவுக்குக் கூட தக்காளி விலை கட்டுபடியாகாது என்பதாலும் உழவர்கள் தக்காளியை சாலைகளிலும், கால்வாய்களிலும் கொட்டி வருகின்றனர். மேலும், தக்காளி விலையை நிலைப்படுத்த தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஒரு கிலோ தக்காளி உற்பத்தி செய்ய குறைந்தது ரூ.10 செலவாகிறது. தக்காளி அறுவடை, போக்குவரத்து செலவு ஆகியவற்றுடன் லாபமும் சேர்த்து குறைந்தது ஒரு கிலோ தக்காளி ரூ.20க்கு கொள்முதல் செய்யப்பட்டால் தான் விவசாயிகளுக்கு ஓரளவு லாபம் கிடைக்கும். ஆனால், தக்காளி நல்ல விளைச்சல் ஈட்டும் போது கிலோ ரூ.3க்கு கூட வாங்கப்படுவதில்லை. அதே நேரத்தில், விளைச்சல் இல்லாத போது, வெளிச் சந்தையில் தக்காளி கிலோ ரூ.200 வரை விற்கப்படும் போது, அதில் பெருந்தொகையை வணிகர்களும், இடைத்தரகர்களும் தான் எடுத்துக் கொள்கிறார்களே தவிர உழவர்களுக்கு பெரிய தொகை கிடைப்பதில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.
இந்த நிலையில் தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்முடி, கடத்தூர் ஆகிய பகுதிகளில் சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் தக்காளி பயிரிடப்பட்டிருக்கிறது. ஆனால் தக்காளியின் விலை வெகுவாக சரிந்துள்ளதால் அதனை பறிக்க வரும் கூலித் தொழிலாளர்களுக்கு கூட சம்பளம் கொடுக்க முடியாததால் அவற்றை சில விவசாயிகள் செடியிலேயே விட்டு கால்நடைகளுக்கு தீவனமாக்கி வருகின்றனர். சிலரோ அதனை பறித்து குப்பையில் கொட்டி வருகின்றனர். இந்த நிலையில் சில விவசாயிகள் அதனை பறித்து மக்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications