திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காக்கி சட்டைக்குள் ஒரு மதர் தெரசா! ஆதரவற்றவர்களுக்கு பிரியாணி அள்ளி ஊட்டி.. நெகிழ்ந்து போன மக்கள்!

Google Oneindia Tamil News

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே ஆதரவற்ற முதியவர்களுக்கு தீபாவளி விருந்து கொடுத்த காவல் ஆய்வாளர், சாப்பிட முடியாத நிலையில் இருந்தவர்களுக்கு அள்ளி ஊட்டி விட்ட காட்சிகள் சமூக வலை தளங்களில் வேகமாகப் பரவிய நிலையில் ஆய்வாளருக்கு பாராட்டு குவிந்து வருகிறது

திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் சண்முகலட்சுமி. இவர் காவல் பணியோடு சேர்த்து சமூகப் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.

திண்டுக்கல் நெடுஞ்சாலை பகுதியில் ஆதரவு இல்லாமல் சாலையில் சுற்றி திரிபவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை அழைத்துச் சென்று அப்பகுதியில் செயல்படும் காப்பகத்தில் சேர்த்துவிட்டு தன்னால் இயன்ற உதவிகளை செய்து வருகிறார்

சீக்கிரமா போ நாங்க பிரியாணி சாப்பிடனும்! இணையத்தை கலக்கும் சூரிய கிரகணம் மீம்ஸ்! தலைவன் வேற லெவல்யா!சீக்கிரமா போ நாங்க பிரியாணி சாப்பிடனும்! இணையத்தை கலக்கும் சூரிய கிரகணம் மீம்ஸ்! தலைவன் வேற லெவல்யா!

தீபாவளி

தீபாவளி

இந்நிலையில் தீபாவளி பண்டிகையொட்டி ஜல்லிபட்டியில் செயல்படும் ஆதரவற்றோர் காப்பகத்தில் உள்ள முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் 300 பேருக்கு இனிப்பு மற்றும் அறுசுவை அசைவ பிரியாணி உணவுகளை ஆய்வாளர் சண்முக லட்சுமி வழங்கினார். மேலும் தன் முயற்சியால் காப்பகத்தில் சேர்க்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் மகிழ்ச்சியுடன் கலந்துரையாடினார்.

காவல் ஆய்வாளர்

காவல் ஆய்வாளர்

தீபாவளி பண்டிகை அன்று முழுநேர பாதுகாப்பு பணியில் இருந்து விட்டு பின்னர் தனது குடும்பத்தினரை கூட சந்திக்க செல்லாமல் காப்பகத்திற்கு வந்து அங்கு தங்கி இருந்தவர்களை மகிழ்வித்த ஆய்வாளர் சண்முகலட்சுமி, சாப்பிட முடியாத நிலையில் இருந்தவர்களை குழந்தை போல பாவித்து அவர்களுக்கு தனது கையாலேயே பிரியாணியை ஊட்டி விட்டு மகிழ்ந்தார்.

 சமூக பணிகளில் ஆர்வம்

சமூக பணிகளில் ஆர்வம்

அம்மையநாயக்கனூர் காவல் ஆய்வாளராக பணிபுரிபவர் சண்முகலட்சுமி காவல்நிலையத்தின் கண்டிப்பானவர் என பெயர் பெற்றவர். பல்வேறு குற்றவழக்குகள் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதில் கண்டிப்பானவர் எனவும் பெயர் பெற்றவர் ஆவர். அதே நேரத்தில் சமூகப் பணிகளிலும் ஆர்வம் கொண்ட அவர் தனது பணிக் காலத்தில் பலரை மீட்டு ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்திருக்கிறார்.

மக்கள் பாராட்டு

மக்கள் பாராட்டு

மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தான் பணி புரியும் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்ட பலரை மீட்டு இந்த காப்பகத்தில் தான் ஆய்வாளர் சண்முக லட்சுமி சேர்த்திருக்கிறார் .இதுவரை பத்துக்கும் மேற்பட்டோரை மீட்டு அவர் ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்த்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி அவர் ஆதரவற்றவர்களுடன் கொண்டாடிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

English summary
A police inspector who gave a Diwali dinner to destitute elderly people near Dindigul has been receiving praise for the inspector as the footage of those who were unable to eat went viral on social media.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X