எட்றா பணத்த... ஏரிச்சலையில் சுற்றுவளைக்கப்பட்ட சுற்றுலாபயணி! சரமாரியாக அடித்து துவைத்த திருநங்கைகள்!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா வருபவர்களிடம் பொது இடங்களில் திருநங்கைகள் சிலர் வழிமறித்து பணம் கேட்டு மிரட்டுவதோடு, சுற்றலா பயணி ஒருவரை தாக்கும் வீடியோ வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வார விடுமுறை, தொடர் விடுமுறை காலத்தில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகைதருவர்.
தமிழகம் மட்டுமின்றி, கேரளா கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் அவர்களை சங்கடத்திற்குள்ளாக்கும் நிகழ்வுகளும் அரங்கேறுகின்றன.

சுற்றுலாப் பயணிகள்
தற்போது கொடைக்கானலில் உள்ள சுற்றுலா இடங்களுக்கு திருநங்கைகள் நான்கு முதல் ஆறு பேர் சேர்ந்து சுற்றுலாப் பயணிகளிடம் வழிப்பறி செய்வது போன்று மிரட்டி, அவர்களிடமிருந்து பணம், பொருள்களைப் பிடுங்கிச் செல்கின்றனர். இப்படி பல ஆயிரம் ரூபாய்களை சுற்றுலாப் பயணிகளிடம் திருநங்கைகள் தினமும் பறித்துச் செல்வதாக புகார் எழுந்துள்ளது.

எண்ணிக்கை அதிகரிப்பு
இந்நிலையில் தற்போது கோடைக்காலம் நெருங்கிவரும் நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அண்மையில் கொடைக்கானல் ஏரிக்கரை சாலையில் திருநங்கைகள் சிலர் சுற்றுலா பயணி ஒருவரை தாக்கும் வீடியோ வெளியாகி இருந்தது.

திருநங்கைகள் தொல்லை
அதில் சாலையோரம் நடந்துவரும் சுற்றுலாப் பயணியிடம் மூன்று திருநங்கைகள் பணம் கேட்டுள்ளனர். அப்பொழுது பணம் தர மறுத்ததால் சுற்றுலா பயணிக்கும் திருநங்கைகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் கைகலப்பானது. உடனே அங்கிருந்த சிலர் இருதரப்பையும் சமாதானப்படுத்தி அனுப்பிவைத்தனர். இதுபோன்ற சம்பவங்கள் அங்கு அடிக்கடி நடப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

நடவடிக்கை தேவை
பணம் தரவில்லை என்றால் சாபம் விடுவது, முகம் சுளிக்கும் வகையில் பொது இடங்களில் நடந்து கொள்வது என சில திருநங்கைகள் ஈடுபடுவதாக தெரிவிக்கின்றனர். இதற்கு போலீசார்தான் தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர் அப்பகுதி மக்கள். எனவே தமிழக அரசும் காவல்துறையினரும் கொடைக்கானலுக்கு வரும் பயணிகளுக்கு பாதுகாப்பு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications