மனசு வலிக்குதுங்க! ரொம்ப அசிங்கப்படுத்தியிருக்காங்க..அவமானபட்ருக்கேன்! உடைந்து பேசிய ‘பிக்பாஸ்’ ஜூலி
திண்டுக்கல் : பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன்னை யாருக்கும் பிடிக்காது என்றும், கல்லூரி நிகழ்ச்சிகளில் கூட அவமானப்பட்டிருக்கிறேன் என ஜல்லிக்கட்டு போராட்டம் மாற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ஜுலி திண்டுக்கல்லில் ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வேதனை பொங்க பேசியுள்ளார்.
மரிய ஜுலியானா என முழுப்பெயரைக் கொண்ட ஜுலி தனியார் தொலைக்காட்சியில் 2017ஆம் ஆண்டு தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனின் போட்டியாளாக பங்கேற்று தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் பிரபலமானவர்.
ஆரம்பத்தில் நர்சாக பணியாற்றிய ஜுலி, 2017ஆம் ஆண்டு தொடக்கத்தில் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

பிக்பாஸ் ஜுலி
பின்னர் அப்போராட்டத்தின் போது இவர் எழுப்பிய முழக்கங்களால் வீர தமிழச்சி என சமூக வளைதள வாசிகளால் கொண்டாட்டப்பட்ட இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிறகு அதே சமூக வலைதளங்களி கடுமையான கண்டனத்திற்குள்ளானார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் பொது இவரை விமரிசித்து பல மீம்ஸ், சர்ச்சை பேச்சுகள் போன்ற விஷயங்களுக்கு உள்ளானார். பின்னர் தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும், ஒரு சில படங்களிலும் பணிபுரிந்தார்.

கல்லூரி நிகழ்ச்சியில் ஜுலி
இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்னை யாருக்கும் பிடிக்காது ஜூலி கூறியுள்ளார். திண்டுக்கல் நத்தம் சாலையில் உள்ளது திரு இருதய கல்லூரி. இந்த கல்லூரியின் 2022 ஆண்டு விழா சனியன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் புகழ் நடிகை ஜுலி கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி பேசினர். அதில்,"ஜல்லிக்கட்டு நமது பாரம்பரிய விளையாட்டு. அதற்காக நாம் போராட போனோம்.

நாட்டு மாடுகள் அவசியம்
ஆனால் அதில் ஒரு உள்ளர்த்தம் இருக்கிறது. விலங்குகளை துன்புறுத்துவதால் மாடுகளை ஜுவில் கொண்டு போய் வைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். ஏற்கனவே ஜுவில் உள்ள பல விலங்குகள் காணாமல் போய்விடுகிறது. அப்படி இருக்கும் போது டொமஸ்டிக் அனிமலாக உள்ள நம்ம மாடுகளை, மாடுகளை நம்பி வாழக்கூடிய நம்மிடமிருந்து பிரித்து ஜுவில் வைத்துவிட்டால் வெளிநாட்டில் உள்ளவர்கள் பாலும், பால் சார்ந்த பொருட்களையும் அவர்கள் ; நிர்ணயிக்கிற விலைக்கு அதிகமாக விற்பார்கள்.

நிறைய அவமானம்
நமது நாட்டில் மாடுகள் இருக்கும் போது எதற்கு அடுத்த நாட்டில் போய் பிச்சை எடுக்க வேண்டும். பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து மாணவ மாணவிகள் கேட்டதுக்கு பதில் அளித்து பேசிய ஜுலி," பிக்பாஸ் சீசன் 1ல் நான் கலந்து கொண்டேன். எனக்கு ஃபுல் நெகட்டிவ் சென்ஸ். நான் ஓப்பனா சொல்வேன். யாருக்கும் என்னை பிடிக்காது. இதே போல் காலேஜ் நிகழ்ச்சிகளில் அவமானப்பட்டிருக்கிறேன்" என்று வேதனையுடன் குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications