மது போதையில் பேக்கரியில் மட்டை.. எழுப்பியதும் ருத்ரதாண்டவம்.. அகில இந்திய இந்து மகா சபா நிர்வாகி கைது
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் மது போதையில் பேக்கரியை அடித்து நொறுக்கிய புகாரில் அகில இந்திய இந்து மகா சபா மாவட்ட துணை செயலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ள ஆத்துமேட்டில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பேக்கரியை கேரளாவைச் சேர்ந்த யாசிர் என்பவர் நடத்தி வருகிறார்.. இந்த பேக்கரிக்கு அகில இந்திய இந்து மகா சபா மாவட்ட துணை செயலாளர் அருண் பாண்டியன் செவ்வாய்கிழமை இரவு சென்றுள்ளார்.. அங்கு போதையில் சென்று சிக்கன் ரைஸ் சாப்பிட்டுள்ளார்.

பின்னர் மது போதை தலைக்கேறி டேபிளிலேயே படுத்து உறங்கி உள்ளார். அப்போது கடை ஊழியர்கள் எழுப்பி காசு கேட்ட போது,, அவர்களை தாக்கி,, பேக்கரியை அடித்து நொறுக்கி உள்ளார். அதில் ஒரு ஊழியருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அதிக விலைக்கு சிக்கன் ரைஸ் விற்பனை செய்வதாக கூறி அங்கு கடையில் இருந்தவர்களிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். இது தொடர்பாக பேக்கரி ஊழியர்கள் உடனடியாக திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்..
இதையடுத்து விரைந்து வந்த வேடசந்தூர் போலீசார் என்ன நடந்தது என்று விசாரித்தனர்,.. அப்போது மதுபோதையில் இருந்த அகில இந்திய இந்து மகா சபா மாவட்ட துணை செயலாளர் அருண் பாண்டியன் அதிக விலைக்கு சிக்கன் ரைஸ் விற்பதாக தகராறில் ஈடுபட்டது தெரிய வந்ததது.
இதையடுத்து மதுபோதையில் இருந்த காரணத்தால் அருண் பாண்டியனை மறுநாள் காலையில் காவல் நிலையம் வருமாறு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் அகில இந்திய இந்து மகா சபா மாவட்ட துணை செயலாளர் அருண் பாண்டியன் மறுநாள் காலையில் தலைமறைவானார். இந்நிலையில் கரூர் பேருந்து நிலையத்தில் இருந்த அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications