2 பிள்ளைகளை தவிக்கவிட்டு எஸ்கேப்பான ஒத்தரோசா! போலீஸ் கதவை தட்டிய கணவன்! காத்திருந்ததே ஒரு அதிர்ச்சி!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே இரு குழந்தைகளை தவிக்க விட்டு மனைவி மாயமானதாக காவல் நிலையத்தில் கணவன் புகார் அளித்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில் கூறப்பட்ட தகவல் கடும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது என்ன நடந்தது.

தொழில்நுட்பம், மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வுகள் அதிகரித்து வரும் இந்தக் காலத்தில் தங்கள் துணையைத் தேர்ந்தெடுக்க அனைவருக்குமே சம உரிமை உள்ளது, கணவனோ மனைவியோ தங்களுக்கு இடையேயான உறவு சுமூகமாக இல்லை என்றால் மனமுவந்து இருவரும் ஒன்றாக பிரியலாம்.

திருமணம் தாண்டிய உறவு ஒருபுறம் சமூக குடும்ப வாழ்க்கையில் ஒரு பெரும் அச்சுறுத்தலாக இருந்தாலும் சட்டப்படி அதனை அங்கீகரிக்கிறது.

அதிர்ச்சி சம்பவம்

அதிர்ச்சி சம்பவம்

தற்போது பாலின சமத்துவம் பாலின உரிமைகள் குறித்து முடிவெடுக்கும் அதிகாரம் அனைவருக்குமே உண்டு என்றாலும் அதனை யோசித்து தங்கள் குடும்பத்தினருக்கும் தங்களுக்கும் எந்தவித பிரச்சனையும் வராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஆணோ பெண்ணோ தவறான முடிவுகள் எடுத்தால் பாதிக்கப்படுவது அவர்கள் மட்டுமல்ல அவர்கள் சார்ந்த குழந்தைகள், குடும்பம், சமூகம் என பெரும் பாதிப்பு ஏற்படுகிறது, அப்படியான ஒரு சம்பவம் தான் திண்டுக்கல் மாவட்டத்தில் அரங்கேறி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது,

பெண் மாயம்

பெண் மாயம்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே பழைய வக்கம்பட்டியை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு உற்றார் உறவினர் முன்னிலையில் உற்சாகமாக திருமணம் நடைபெற்றது. இருவரும் நன்றாக வாழ்க்கை பயணத்தை தொடர்ந்து வந்த நிலையில் அதன் அடையாளமாக இரு குழந்தைகளும் பிறந்தன. இந்த நிலையில் அந்த இளம் பெண் அதே பகுதியில் உள்ள தனியார் நூற்பாலை ஒன்றில் பணியாற்றி வந்திருக்கிறார்.

 பெண்ணுடன் உறவு

பெண்ணுடன் உறவு

அப்போதுதான் அவரது நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்திருக்கிறது கணவனோடு தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடாததோடு எப்பொழுதும் சண்டை பிடித்து வந்திருக்கிறார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண் தனது இரு குழந்தைகளையும் கணவரையும் தவிக்க விட்டு மாயமானார். இதுகுறித்து கணவர் திண்டுக்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணை

விசாரணை

அப்போது அந்த பெண் பெங்களூருவில் பதுங்கி இருப்பது தெரியவந்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவர்களிடன் விசாரித்த போது தான் அந்த திடுக்கிடும் சம்பவம் வெளியானது. தனியார் நூர் பாளையம் வேலை பார்த்தபோது பித்தளை பட்டியைச் சேர்ந்த திருமணமாகாத பெண் ஒருவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. நாளடைவில் இருவரும் நெருக்கமாக பழகியுள்ளனர். இந்த நிலையில் தான் தங்கள் வாழ்க்கையை தாங்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என கணவன் குழந்தைகளை விட்டுவிட்டு பெங்களூருக்கு சென்றது தெரிய வந்தது.

போலீசார் அறிவுரை

போலீசார் அறிவுரை

மேலும் இதுகுறித்து தங்கள் பணியாற்றிய நூற்பாலையில் பணியாற்றிய அனைவருக்குமே தெரியும் என்றும் தங்களை வாழ விடுங்கள் என போலீசாரிடம் கூறியுள்ளார். இதை அடுத்து பெங்களூருவில் தனியாக அறை எடுத்து வசித்து வந்த இருவரையும் மீட்டு திண்டுக்கல்லுக்கு அழைத்து வந்த காவல் துறையினர் இருவருக்கும் அறிவுரை கூறி திருமணமான பெண்ணை அவரது கணவருடன் அனுப்பி வைத்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+