திண்டுக்கல்-பொள்ளாச்சி பஸ் பெயர் பலகையில் என்ன "ஓடிச்சு" பாருங்க.. தலைசுற்றிப்போன மக்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் இயக்கப்பட்ட அரசு பேருந்து ஒன்றின் பெயர்ப் பலகையில் திடீரென சீன எழுத்துக்கள் ஓடியதால் பயணிகள் குழம்பிப் போனார்கள்
நாட்டிலேயே மிகவும் வலுவான ஒரு பொது போக்குவரத்து முறையைக் கொண்ட மாநிலங்களில் ஒன்று தமிழ்நாடு. குறிப்பாகத் தமிழகத்தில் ரொம்பவே விரிவான பேருந்து வசதி இருக்கிறது.

மாநிலத்தில் எந்தவொரு இடத்தில் இருந்தும் மிக எளிமையாக மற்றொரு இடத்திற்குச் சென்று வர முடியும். சில குறைபாடுகள் இருந்தாலும் மாநிலத்தில் உள்ள பேருந்து கட்டமைப்பைப் பலரும் பாராட்டவே செய்கிறார்கள்.
பேருந்து: எந்தவொரு பேருந்திலும் முன்புறமும் பின்புறமும் தகவல் பலகை இருக்கும். அதில் தான் பேருந்து எங்கிருந்து புறப்படுகிறது. அது எந்த ஊர்கள் வழியாக எந்த ஊருக்குச் சென்று சேர்கிறது உள்ளிட்ட தகவல்கள் இருக்கும். முன்பெல்லாம் மரப்பலகை ஒன்றில் இந்த தகவல்களை எழுதி வைத்திருப்பார்கள். ஆனால், மாலை மற்றும் இரவு நேரங்களில் அதைப் படிப்பதே சிரமமாக இருக்கும்.
இந்தச் சூழலில் தான் சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு பேருந்துகளில் டிஜிட்டல் பெயர் பலகைகளைக் கொண்டு வந்தார்கள். முன்புறமும் பின்புறமும் டிஜிட்டல் ஸ்கிரீன் ஒன்று இருக்கும். அதில் பேருந்தின் ரூட் உள்ளிட்ட தகவல்கள் இருக்கும். பயணிகள் வசதிக்காகத் தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளிலும் இந்த தகவல்களை ஒளிபரப்பினர்.
டிஜிட்டல் ஸ்கிரீன்: இரவு நேரங்களில் தொலைவில் இருந்தும் கூட எளிதாகப் பெயர்ப் பலகைகளைப் படிக்க முடிவதால் மக்கள் இதையே அதிகம் விரும்பினர். இதனால் தமிழ்நாட்டில் இப்போது பெரும்பாலான பேருந்துகளில் டிஜிட்டல் பெயர்ப் பலகைகளே இருக்கிறது.
தொழில்நுட்ப கோளாறு: இதற்கிடையே சமீபத்தில் திண்டுக்கல் முதல் பொள்ளாச்சி வரை இயக்கப்பட்ட ஒரு அரசு பேருந்தில் ஓடிய பெயர்ப் பலகையைப் பார்த்ததும் பலருக்கும் ஷாக். அந்த டிஜிட்டல் ஸ்கிரீனை பார்த்த பலரும் குழம்பிப் போய்விட்டார்கள். ஏனென்றால் அந்த பேருந்தில் பெயர்ப் பலகை தமிழிலும் இல்லை.. ஆங்கிலத்திலும் இல்லை.. மாறாக அதில் சீன மொழியில் ஏதோ ஓடியிருக்கிறது.
இதன் காரணமாகவே பொதுமக்கள் குழம்பிப் போனார்கள். திண்டுக்கல்லில் புறப்பட்டு பொள்ளாச்சிக்குச் சென்று சேரும் வரை அது சீன மொழியிலேயே ஓடி உள்ளது. சீன மொழியில் வெல்கம் என்ற வாசகம் அதில் ஓடியுள்ளது. ஏன் இதுபோல திடீரென சீன மொழியில் வாக்கியம் ஓடியது என்பது குறித்துத் தெளிவாகத் தெரியவில்லை. இருப்பினும், தொழில்நுட்ப கோளாறு காரணமாக இதுபோல நடந்திருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications