வெங்கய்யா நாயுடு சொன்னது கேட்டுச்சா? அரைவேக்காடு அவருக்கு எதுக்கு பதில் சொல்லனும்! விளாசிய மா.கம்யூ
திண்டுக்கல் : பாஜக தலைவர் அண்ணாமலை சொல்வதெற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டியதில்லை எனவும், அண்ணாமலை அரைவேக்காட்டு தனமாக பேசுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
பழனியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய அலுவலகக் கட்டிட திறப்பு விழா இன்று நடைபெற்றது. புதிய அலுவலகக் கட்டிடத்தை மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர்," கடந்த எட்டு ஆண்டுகளில் பல முறை பெட்ரோல் டீசல் எரிவாயு விலை ஆகியவற்றை உயர்த்திவிட்டு தற்பொழுது சிறிதளவு வரியை குறைத்து அறிவித்துள்ளனர்.

எரிவாயு மானியம்
அதேபோல எரிவாயு சிலிண்டர் விலைக்கு 200 ரூபாய் மானியம் என அறிவித்துள்ளதில் மோடி அரசு திட்டத்தின் கீழுள்ள பொதுமக்கள் மட்டுமே பயனடையும் வகையில் உள்ளது.இதன்படி 2 சதவிகிதம் மக்கள் கூட பயனடையமாட்டார்கள். கடந்த 8 ஆண்டுகளில் மக்கள் படாதபாடு பட்டு வருகின்றனர். பருத்தி விலை பலமடங்கு உயர்ந்துள்ளது. இதுபோல பல பொருட்களின் விலையும், வேலையில்லா திண்டாட்டமும் பலமடங்கு அதிகரித்து உள்ளதற்கு காரணம் மோடி அரசின் தவறான கொள்கையே.

வெறுப்பு அரசியல்
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு மோசம் அடைந்துள்ளதாகவும், வெறுப்பு அரசியலை மனதில் வைத்து 1991ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட வழிபாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த சட்டம் நீர்த்துபோனால் பெரும் மதக்கலவரம் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதன்மூலம் இந்திய நாட்டின் பன்முகத்தன்மையை சீரழிக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது.

வெங்கய்யா நாயுடு பேச்சு
குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு அறிவித்தது போல எந்த மொழியையும் திணிக்கவும் கூடாது அதே சமயம் எதிர்க்கவும் கூடாது என்று தெரிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. மாநில மொழி உரிமையை தட்டிப் பறித்து, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் தினிக்கிற நடவடிக்கையை மோடி அரசு வெங்கய்யா நாயுடுவின் பேச்சை ஏற்று இந்த நடவடிக்கையை கைவிடுமா . மாநில அரசு சொத்து வரி உயர்வை அறிவித்துள்ளது/. மத்திய அரசின் கட்டாயத்தின் பேரிலேயே. எனவே தமிழக அரசு மத்திய அரசின் கட்டாயத்திற்கு அடிபணிந்து நாம் சொத்து வரி உயர்வை உயர்த்த வேண்டிய அவசியம் இல்லை

அரசுக்கு வேண்டுகோள்
அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், இல்லாவிட்டால் 50 சதவிகிதம் சொத்து வரியை உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன். தமிழக அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டுமென சொல்வது பிள்ளையையும் கிள்ளிவிட்டு, தொட்டிலையும் ஆட்டி விடுவது போல் உள்ளது . திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு வரியை உயர்த்தி இருந்தால் அவர்களை விலை குறைக்க சொல்வதில் நியாயம் உள்ளது. மத்திய அரசின் வரி குறையும்பொழுது தமிழக அரசின் வாக்கு வங்கி தானாகவே குறைகிறது என்பதால் தமிழக அரசு விலையை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை.












Click it and Unblock the Notifications