திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பா.. நெய் சப்ளை செய்த திண்டுக்கல் நிறுவனம் கொடுத்த விளக்கம் இதுதான்
திண்டுக்கல்: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் பிரசாதமான லட்டுவில் விலங்கின் கொழுப்பு கலந்திருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு நிறுவனங்கள் லட்டு பிரசாதத்திற்கு நெய் வினியோகம் செய்தது திண்டுக்கலை சேர்ந்த ஏ ஆர் டெய்ரி எனும் பால் நிறுவனம் என்பது தெரியவந்தது. இது குறித்து திண்டுக்கல் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவில் உலகப் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவிலில் தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு தயாரித்து வழங்கப்படுகிறது. திருப்பதி கோவிலில் வழங்கப்படும் பிரசாதமான லட்டுவில் மாட்டின் கொழுப்பு கலந்திருப்பதாக மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்த கருத்து பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தியது.

திருமலை தேவஸ்தானம் சார்பிலும் லட்டு தயார் செய்ய பயன்படும் நெய்யில் விலங்கின் கொழுப்பு சேர்க்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த விவகாரம் ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் புயலை கிளப்பியுள்ளது. 300 ஆண்டுகளுக்கு மேலாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வரும் லட்டுவில் விலங்கின் கொழுப்பு சேர்க்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒரு மாதத்திற்கு மட்டும் ஒரு கோடி லட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன.
திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படும் நெய்யானது திண்டுக்கல் ஏஆர் டெய்ரி எனும் பால் நிறுவனம் வழங்கியதாக தெரியவந்தது. இதையடுத்து இந்த திண்டுக்கல் நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்க்க ஆந்திர அரசு உத்தரவிட்டது. அதே சமயம் நெய் வழங்கியதற்கான பணம் நிலுவையில் உள்ளதாக திண்டுக்கல் நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறையினர் தனியார் நிறுவனத்தில் ஆய்வு செய்தனர். ஆனால் இதன் முடிவுகள் வெளியில் கூறப்படவில்லை.
இந்த நிலையில் திண்டுக்கல் நிறுவன தரக் கட்டுப்பாடு அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். எங்கள் நிறுவனத்தின் தயாரிப்பில் இருந்து 0.5 சதவீத நெய் தான் திருப்பதி கோவிலுக்கு செல்கிறது. அதில் எங்கள் நிறுவனம் அனுப்பியது 0.1 சதவீதம் கூட இருக்காது என்று கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்கள் கூறுகையில், எங்கள் நிறுவனம் மட்டுமின்றி பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து திருப்பதி கோவிலுக்கு நெய் செல்கிறது. எங்களது நிறுவனங்களில் இருந்து கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் மட்டுமே நெய் அனுப்பப்பட்டது.
எங்கள் நிறுவனம் தயாரிப்பில் 0.5 சதவீத நெய் தான் அனுப்பப்படுகிறது. இதில் எங்கள் நிறுவனம் அனுப்பியது வெறும் 0.1 சதவீதம் தான். இதில் இப்போது திருப்பதிக்கு எங்கள் நிறுவனம் நெய் அனுப்புவது இல்லை. திருப்பதிக்கு அனுப்பப்பட்ட நெய்யின் தரம் குறித்த ஆய்வு அறிக்கைகள் எங்களிடம் இருக்கிறது. எங்களது நிறுவனம் தயாரித்த நெய்யானது பல்வேறு விற்பனை நிலையங்களில் உள்ளது. அங்கு கூட சென்று நெய்யின் தரம் குறித்து பரிசோதனை செய்துகொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
திருப்பதி லட்டு! ஒரு இனிப்பில் மாட்டு கொழுப்பு கலந்ததை ஏன் அரசியலாக்குகிறீர்கள்? திருமாவளவன் கேள்வி
தற்போது திண்டுக்கல் ஏ ஆர் டெய்ரி பால் நிறுவனத்தில் மத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். நிறுவனத்தில் உள்ள பால், நெய் பொருட்களை ஆய்வுக்கு எடுத்து சென்று உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை நடத்த உள்ளனர். சென்னையில் உள்ள ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பப்பட்டு சோதனை நடத்தப்பட உள்ளது.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறுகையில், "திருமலையில் உள்ள ஏழுமலையான் கோயில் மிகவும் புனிதமானது. ஆனால் முந்தைய ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் திருப்பதி லட்டு செய்வதிலும் முறைகேடு நடந்துள்ளது. அங்கு கொடுக்கப்பட்ட லட்டு பிரசாதத்தில் நெய்க்கு பதில், விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாக தகவல் கிடைத்தது. இதனைக்கேட்டு நான் அதிர்ச்சியடைந்தேன். கோடிக்கணக்கான பக்தர்களின் நம்பிக்கைக்கு மதிப்பளிக்க முடியாத இந்த செயலுக்கு ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரசும் வெட்கப்பட வேண்டும்" என்றார்.
எனினும் இதனை ஜெகன் மோகன் ரெட்டி திட்டவட்டமாக மறுத்தார். இந்த விவகாரம் தொடர்பாக விஜயவாடா உயர்நீதிமன்றத்திலும் ஜெகன்மோகன் ரெட்டி கட்சி சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் இந்த விவகாரம் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசும் உடனடியாக அறிக்கை அளிக்குமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
இரட்டை இலைக்கு ‘குட்பை’.. அதிமுகவை அடக்கிய பாஜக? திமுக கூட்டணிக்கு அடிக்கப்போகும் அதிர்ஷ்டம் -
ப்ளீஸ் சார்.. என் ஹனிமூனை விட்ருவீங்களா? கலெக்டருக்கு வித்தியாசமான மனு தந்த கேரளா அரசு பள்ளி ஆசிரியை -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
திமுக சொன்ன அந்த வார்த்தை.. தொகுதி பங்கீட்டில் அதிருப்தியான மநீம.. நாளை கமல்ஹாசன் ஆலோசனை -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
அதிமுக முன்னாள் அமைச்சர்களின் உருவபொம்மைகளுக்கு செருப்பு மாலை! பொள்ளாச்சியில் பரபரப்பு












Click it and Unblock the Notifications