அடேங்கப்பா.. ஒரே போனில் 10 கோடி பணமா? சேலம் பெண்ணுக்கு அடித்த அதிர்ஷ்டம்! கிளைமாக்ஸில் சோகம்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கல்லைச் சேர்ந்த மக்காச்சோள வியாபாரியிடம், ரூ.10.75 கோடி மோசடி செய்த சேலத்தைச் சேர்ந்த பெண்ணை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் கைது செய்து சிறையில் அடைத்தனர். வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற 20 பேரைத் தேடி வருகின்றனர். கிராமத்து உணவு என்ற பெயரில் ஓட்டல் நடத்தி 20 கோடியைக் கணவருடன் சேர்ந்து சுருட்டியிருக்கிறார் இந்தப் பெண் என்ற அதிர்ச்சித் தகவல் இப்போது வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் கோபாலசமுத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார். இவர் திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகளிடம் நேரடியாக மக்காச்சோளத்தை வாங்கி, அதனைப் பிற தொழில்நிறுவனங்களுக்கு விற்கும் தொழில் செய்கிறார்.

இவருக்கு, 2022ஆம் ஆண்டு சேலத்தைச் சேர்ந்த சரவணன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. சரவணனின் மனைவிதான் சங்கீதா. இவர்கள் சேலத்தில், மக்காச்சோளத்தை மதிப்புக்கூட்டல் செய்து கிராமத்து உணவு எனும் பெயரில் ஓட்டல் நடத்தி வருவதாகவும், வெளிநாடுகளுக்கு மக்காச்சோளத்தை ஏற்றுமதி செய்யும் நிறுவனம் நடத்திவருவதாகவும் கூறியுள்ளனர்.

Dindigul Maize Trader Cheated

திண்டுக்கல் மோசடி

இதை உண்மை என நம்பிய ராஜ்குமார், அவர்களுடன் வர்த்தகம் செய்து வந்தார். இந்நிலையில் மக்காச்சோளம் கொள்முதல் குறைந்ததால் சில மாதங்களாக சரவணன் நிறுவனத்துக்கு அவரால் சரக்குகள் அனுப்ப முடியவில்லை. இதுதொடர்பாகப் பேசிய சரவணன், சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்காச்சோளம் நேரடி விவசாயம் செய்பவர்கள் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். நாங்கள், அவர்களிடம் கொள்முதல் செய்யும் மக்காச்சோள மூடைகளுக்கான பணத்தை அந்தந்த விவசாயிகளின் வங்கிக்கணக்குகளுக்கு நேரடியாக உங்கள் நிறுவனம் மூலம் நீங்கள் கொடுங்கள், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கிடைக்கும் பணத்தில் உங்களின் கொள்முதல் பணத்தை லாபத்தோடு சேர்த்து தருவதாகக் கூறியுள்ளார்.

மக்காச்சோள வியாபாரி

இதற்குச் சம்மதித்த ராஜ்குமார், விவசாயிகளின் வங்கிக் கணக்குகளாக அவர்கள் கொடுத்த 19 பேரின் எண்ணிற்கு ரூ.28 கோடி ரூபாய் வரை பணம் அனுப்பினார். இந்த முதலீட்டைப் பல தவணைகளாக ராஜ்குமார் திரும்பப் பெற்று வந்த நிலையில், ரூ.10 கோடியே 73 லட்சத்து 67 ஆயிரத்து 906 பாக்கி இருந்தது. இந்தப் பணத்தைப் பலமுறை திரும்பக் கேட்டும் சரவணனும், சங்கீதாவும் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாகச் சொல்லப்படுகிறது.

பண மோசடி

சந்தேகத்தின்பேரில் சேலத்திற்கு நேரில் சென்ற ராஜ்குமார், அவர்கள் கொடுத்த 19 பேரின் வங்கிக் கணக்கு விவரங்களை வைத்து விசாரித்தார். அதில் தான் சரவணன், சங்கீதாவின் தில்லுமுல்லு வேலைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. இந்த விசாரணையில், அந்த 19 பேரும் சரவணன், சங்கீதா தம்பதியிடம் வேலை பார்க்கும், ஊழியர்கள், டிரைவர், வீட்டுவேலை செய்பவர், செக்யூரிட்டிகளின் வங்கிக் கணக்குகள் எனவும், அவர்கள் மூலமாக சரவணனும், சங்கீதாவும் மோசடியாக பணத்தைப் பெற்று அனுபவித்துவிட்டு அதைத் திரும்பத் தராமல் இழுத்தடித்ததும் தெரிந்தது.

நிதி மோசடி

இந்த மோசடி குறித்து, திண்டுக்கல் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ராஜ்குமார் புகார் அளித்தார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி, 10 கோடி பணத்தை மோசடி செய்ததாக சரவணன், சங்கீதா, அவர்கள் வீட்டு ஊழியர்கள் என மொத்தம் 21 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் சங்கீதாவை சேலத்தில் கைது செய்து திண்டுக்கல் மாவட்டம் அழைத்து வந்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, நிலக்கோட்டை கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான சரவணன் உள்பட மற்ற 20 பேரை தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+