இவரா? சுயேச்சையாவா? தலைசுற்றிப்போன கட்சிகள்.. திண்டுக்கல்லில் களம் காணும் "கோடீஸ்வர" குடும்ப வாரிசு!
திண்டுக்கல்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்ற புகாரில் சிக்கி பிறகு விடுதலையான சேகர் ரெட்டியின் நண்பரும், திண்டுக்கல்லின் "மெகா" கோடீஸ்வரர் லயன்.ரத்தினத்தின் 22 வயதான இளைய மகன் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட சுயேட்சையாக மனுத் தாக்கல் செய்துள்ளது திண்டுக்கல் அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ளது. சென்னை உட்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, தமிழகத்தில் உள்ள 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, வார்டு வரையறை செய்யப்பட்டபடி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் தற்போது ஆளும் கட்சியான திமுகவும், எதிர்க் கட்சியாக உள்ள அதிமுகவும் நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தங்களது பலத்தை நிரூபிக்க தயாராகி வருகின்றன. குறிப்பாக மாநகராட்சிகள், முக்கிய நகராட்சிகளை கைப்பற்றுவதில் இருவருக்கும் போட்டா போட்டி நிலவுகிறது.

திண்டுக்கல் ரத்தினம்
அரசியல் கட்சிகளுக்கு போட்டியாக சுயேட்சைகளும் களம் இறங்கி வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்புமனு தக்கல் நிறைவடைந்துள்ள நிலையில், பலர் கவனம் பெற்று வருகின்றனர். அந்த வகையில் திண்டுக்கல் மாநகராட்சி 17வது வார்டு பகுதியில் சுயேச்சையாக போட்டியிட 22வயதான வழக்கறிஞர் கே.கே.ஆர் வெங்கடேஷ் என்பவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதிலென்ன விசேஷம் என கேட்க வேண்டாம். அவரை தெரியாது ஆனால் அவரது தந்தையான திண்டுக்கல் ரத்தினத்தை பலருக்கும் தெரியும். அந்த அளவுக்கு திண்டுக்கல் புதுக்கோட்டையில் ஃபேமஸ், ரத்தினம் என்ற லயன் திண்டுக்கல் ரத்தினம்.

சர்வேயர் தொழில்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள முத்துப்பட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் தான் ரத்தினம். ஆனால் அவரை எல்லோரும் அழைப்பது திண்டுக்கல் ரத்தினம், ஊர் மாறி வந்து இன்று உலகப் புகழ் பெற்றவராக திகழ்கிறார் ரத்தினம். சாதாரண சர்வேயராக சைக்கிளில் வலம் வந்த இவர், இன்று ஜாகுவார் முதல் பிஎம்டபிள்யூ கார் வரை வீட்டில் நிறுத்துவதற்கு இடம் இல்லாமல் வெளியேயும் நிறுத்தி வைக்கும் அளவுக்கு பணபலமும், ஆள் பலமும் கொண்டவர். சர்வேயராக இருந்த அவர் அந்த வேலையை உதறிவிட்டு ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினார். சிறிது சிறிதாக முன்னேறிக் கொண்டிருந்தவர் ஓவர் நைட்டில் ஒபாமாவாக மாறியதற்கு காரணம் சேகர் ரெட்டி.

தொழிலதிபர் சேகர் ரெட்டி
செங்கல் சூளை, ரியல் எஸ்டேட் தொழிலை விரிவாக்கம் செய்து கொண்டவர் தொடர்ந்து மணல் குவாரி தொழிலில் கால் பதித்தார். புதுக்கோட்டை ராமச்சந்திரன், சிவகங்கை படிகாசு உள்ளிட்டோருடன் ஏற்பட்ட தொடர்புகள் இவரை ஒரே வருடத்தில் திண்டுக்கல்லில் மிகப்பெரிய பணக்காரராக மாற்றியது. மிகப் பெரிய தொழிலதிபரான சேகர் ரெட்டியுடன் ஏற்பட்ட அறிமுகம் மாநில அளவில் இவரது தொழிலை விரிவடையச் செய்தது. சேகர் ரெட்டியுடன் தொழில் கூட்டாளியாக இணைந்த பிறகு ரத்தினத்திற்கு சொத்துக்களுக்கு பஞ்சமே இல்லை என்ற நிலை ஏற்பட்டது.

பிரம்மாண்ட திருமணம்
இன்றைய நிலைமையில் அவருக்கு இருக்கும் சொத்துக்களை அவராலேயே எண்ண முடியாது என்பதுதான் ஹைலைட். இடையில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்போது சட்ட விரோதமாக பணம் மாற்றியதாக எழுந்த புகாரில் சேகர் ரெட்டி திண்டுக்கல் ரத்தினம் உள்ளிட்டோர் வீடுகளில் சோதனை நடைபெற்றது அதற்கு பிறகு அவ்வழக்கில் இருந்து அவர்கள் விடுதலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்தான் திண்டுக்கல் ரத்னத்தின் மூத்த மகனின் திருமணம் ஊரையே வாய் பிளக்க வைத்தது. பத்தாயிரம் வாழை மரங்கள், 1 லட்சம் பேருக்கு விருந்து, நடிகர் கருணாஸ்-ன் பாட்டு கச்சேரி என களைகட்டியது திருமணம். இன்று வரை திண்டுக்கல்லில் நடைபெற்ற திருமணங்களிலேயே மிகப்பெரிய திருமணம் ஆகும்.

தேர்தலில் போட்டி
இந்த நிலையில்தான் தற்போது திண்டுக்கல்லில் களமிறங்கியிருக்கிறார் திண்டுக்கல் ரத்தினத்தின் மகனான வெங்கடேஷ். 22 வயதான வெங்கடேஷ் வழக்கறிஞராக பணியாற்றி வருவதாக கூறப்பட்டாலும் தனது தந்தையின் தொழிலை தற்போது கற்றுக் கொண்டு வருகிறார். ஏற்கனவே தந்தையின் தொழிலை கவனித்து வரும் நிலையில் தற்போது உள்ளாட்சி தேர்தலில் களம் இறங்கியிருக்கிறார். திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 17வது வார்டில் தனித்துப் போட்டியிடப்போவதாக தனது அண்ணன் துரையுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். இது தான் தற்போது திண்டுக்கல் அரசியலில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

துணை மேயருக்கு குறி
திண்டுக்கல் மாநகராட்சி மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப் பட்டுள்ள நிலையில் துணை மேயர் பதவியைக் கைப்பற்றுவது அரசியல் கட்சியின் நிர்வாகிகள் குறியாக உள்ளது. திண்டுக்கல் ரத்தினத்திற்கு இருக்கும் பணபலத்திற்கு திண்டுக்கல் நாடாளுமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட்டாலே வெற்றி பெறக்கூடும் என்ற நிலையில், வார்டு கவுன்சிலர் பதவிக்கு தன் மகனை போட்டியிட வைப்பதன் காரணம் புரியாமல் அரசியல் கட்சியினரை குழம்பிப் போயுள்ளனர்.

வாக்காளர்களுக்கு பணமழை
முன்னதாக அதிமுக அல்லது திமுக சார்பில் வெங்கடேசனை களமிறக்க தயாராக இருந்த போதும் அதனை திண்டுக்கல் ரத்தினம் மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது தனித்து களம் இறக்கப்பட்டுள்ளார். வெங்கடேசன் போட்டியிடுவதால் 17வது வார்டு மக்கள் பலத்த "எதிர்பார்ப்புடன்" காத்துள்ளனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications