ப்ளாஸ்பேக்..! இவர் ஓபிஎஸ் பக்கம் தான் இருந்தார்.. நாங்க தண்டிக்கலையே! விஸ்வநாதனை சீண்டிய சீனிவாசன்?
திண்டுக்கல் : சலசலப்புகளை மறந்து அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் நத்தம் விஸ்வநாதன் திண்டுக்கல் சீனிவாசனும் மீண்டும் ஒன்று இணைந்துள்ள நிலையில் திண்டுக்கல்லில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் விஸ்வநாதன் ஒரு காலத்தில் ஓபிஎஸ் பக்கம் தான் இருந்தார் நாங்கள் அவரை என்ன தண்டித்தா விட்டோம் கட்சியில் சேர்த்துக் கொள்ளவில்லையா எனக் கூறியது விஸ்வநாதன் தரப்பு நிர்வாகிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது..
திண்டுக்கல் - நத்தம் சாலையில் உள்ள அதிமுக மாவட்ட தலைமை அலுவலகத்தில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது.
அதிமுகவின் கழக துணை பொது செயலாளராக நத்தம் விஸ்வநாதனும், அதிமுகவின் கழகப் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் பொறுப்பேற்ற பின்னர் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும் முதல் ஆலோசனை கூட்டமாகும்.

நத்தம் விஸ்வநாதன்
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்பு நிர்வாகிகள் மத்தியில் பேசிய அதிமுக துணை பொதுச் செயலாளர் நத்தம் விஸ்வநாதன் பேசுகையில்," தற்பொழுது அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு திண்டுக்கல் மேற்கு மற்றும் கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் 99.9 சதவீதம் பேர் தங்களுடைய முழு ஆதரவையும் தெரிவித்துள்ளனர் 0.1 சதவீதம் பேர் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மீதம் இருக்கின்றனர். தேர்தல் சமயத்தில் மக்களிடம் கூப்பன் தருவது பணம் வழங்குவது முக்கியம்

ஒரே தடைகல்
ஆனால் பணம் என்பது வெற்றிக்கு இரண்டாவது தேவை நிர்வாகிகள் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினால் மட்டுமே நாம் வெற்றி பெற முடியும் . இன்றைக்கு மக்கள் எடப்பாடியார் அவர்களை நம்பத் தொடங்கி விட்டனர். நம்மிடம் இருந்த ஒரே தடைகல் நம்மை விட்டு நீங்கி விட்டது. தமிழகத்திலே அதிமுக ஆட்சி அமைப்பதற்கு முடியாமல் போனதற்கு ஒரு சில காரணங்கள் இருந்தாலும் அதில் ஒரு காரணம் நம்மிடம் தோளில் உட்கார்ந்து கொண்டு தலைமை ஏற்றுக்கொண்டு கழகத்தில் கலவரத்தை ஏற்படுத்திக் கொண்டு கழகத்திற்காகவே குழிபறித்த நபரான ஓபிஎஸ் அவர்களை இன்று நாம் அனைவரும் கழகத்தை விட்டு வெளியே அனுப்பி இருக்கிறோம்.

திண்டுக்கல் சீனிவாசன்
அதன் பின்னர் நிர்வாகிகள் மத்தியில் பேசிய அதிமுக பொருளாளரான திண்டுக்கல் சீனிவாசன்,நடந்து முடிந்த பொதுக்குழுவில் கேட்டேன் அப்பொழுது நான் மூன்று முறை முதலமைச்சராக இருந்திருக்கிறேன் நல்ல விஷயம் தான். நம்முடைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இருக்கிறது. அங்கு மாவட்ட வருவாய் அலுவலர் என்பவர் இருப்பார் மாவட்ட ஆட்சியர் இல்லாத நேரங்களில் அவரிடம் தனது பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவித்துச் செல்வார். ஆனால் மீண்டும் மாவட்ட ஆட்சியர் வந்தவுடன் அவர்தான் அவருக்கான பொறுப்பினை வகிக்க முடியும். என்றார்.
Recommended Video

தண்டித்தா விட்டோம்?
நத்தம் விஸ்வநாதன் எடப்பாடி அணிக்கு திரும்பியது குறித்து பேசிய அவர்,' நத்தம் விஸ்வநாதனும் ஒரு காலத்தில் ஓ பன்னீர்செல்வம் தரப்பில் தான் இருந்தார். அவரை நாங்கள் என்ன தண்டித்தா விட்டோம் தற்போது ஏற்றுக்கொள்ளவில்லையா என பேசினார். கடந்த காலங்களில் ஓபிஎஸ் தரப்பு ஈபிஎஸ் தரப்பு என இரு ஆதரவாள்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து நிலையில் எடப்பாடி பழனிச்சாமி வந்த பிறகு தான் இரு தரப்பினரும் ஒன்று சேர்ந்தனர் தற்போது அதிமுக சார்பாக நடைபெற்ற முதல் கூட்டத்திலேயே பழைய விஷயங்களை கிளறுவது போல திண்டுக்கல் சீனிவாசன் பேசிய ிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications