ஒரு பக்கம் ஜெயந்தி.. மறுபக்கம் ரேவதி.. வாலிபமுறுக்கில் வலம் வந்த பாலமுருகன்.. அடுத்து நடந்த பரிதாபம்

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: வாலிப முறுக்கில் வலம் வந்த பாலமுருகனுக்கு 2 மனைவிகள்.. ஒருபக்கம் ஜெயந்தி.. மற்றொரு பக்கம் ரேவதி.. இப்படி றெட்டை வால் குருவியிடம் வாலை ஆட்டிய பாலமுருகன், ஆஸ்பத்திரியில் சுருண்டு இப்போது படுத்துள்ளார்!

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ளது பூசாரிபட்டி.. இங்கு வசித்து வந்த தம்பதி பாலமுருகன் - ரேவதி. பாலமுருகனுக்கு 30 வயதாகிறது.. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

Dindigul Women police officer injured while saving a drunkard man from suicide

பாலமுருகன் ஒரு கூலி தொழிலாளி.. அதனால் பல வெளியூர்களுக்கு சென்று வேலை பார்த்து வருபவர்.. இப்படித்தான் சில வருஷத்துக்கு முன்பு கோபிசெட்டிபாளையம் போனார்.. அங்குதான் ஜெயந்தியை பார்த்தார்.. பாலமுருகனுடன் வேலை பார்த்தவர்தான் இந்த ஜெயந்தி.

ஆனால் ஜெயந்தி கல்யாணம் ஆனவர்.. இருந்தாலும் காதல் அதிகமாகிவிடவும், பாலமுருகனை 2வதாக கல்யாணம் செய்து கொண்டார். ஆனால் பாலமுருகனோ, தனக்கு ஒரு கல்யாணம் ஆனதையும், 2 குழந்தைகள் இருப்பதையும் மறைத்துவிட்டார்.. பாலமுருகன் குடும்பம் பற்றி எதுவுமே ஜெயந்திக்கு தெரியாது.. இப்போது ஜெயந்திக்கும் - பாலமுருகனுக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இந்த சமயத்தில்தான் லாக்டவுன் வந்துவிட்டது.. பாலமுருகனுக்கு வேலை இல்லை.. அதனால், வேலை இல்லாததால் சொந்த ஊருக்கு அதாவது முதல் மனைவி ரேவதியிடம் வந்துதான் ஆக வேண்டும்.. அதனால் பூசாரிபட்டியில் தங்கியிருந்தார்.. இந்நிலையில், ஊருக்கு போன கணவனை காணவில்லையே என்று ஜெயந்தி கிளம்பி பூசாரிப்பட்டிக்கு வந்தார்.

அங்கேதான் ரேவதி & 2 குழந்தைகளை கண்டு அதிர்ந்து நின்றார்.. ஆவேசம், கோபம், டென்ஷனுடன் கிளம்பி சென்றார்.. இதை பார்த்ததும் ரேவதிக்கு டவுட் வந்துவிட்டது.. பிறகுதான் ஜெயந்தி 2 வது மனைவி என்று தெரியவந்ததும், அவர் ஒரு பக்கம் கோபித்து கொண்டு அம்மா வீட்டுக்கு போய்விட்டார். இப்போது 2 மனைவியும் இல்லாமல் தனியாக நின்றார் பாலமுருகன்.. சோகம் அதிகமாகிவிட்டது.. அதனால் சம்பவத்தன்று மூக்கு முட்ட குடித்துவிட்டு, நேராக வத்தலக்குண்டு ஸ்டேஷனுக்கு வந்தார்.

அங்கு என்ன பிரச்சனை என்று போலீசார் விசாரித்தபோது, முதல் மனைவி ரேவதிதான் வேண்டும் என்று அடம்பிடித்தார்.. சரி, சேர்த்து வைக்கிறோம், ஒரு மனு எழுதி தாருங்கள் என்று போலீசார் சொன்னார்கள்.,. ஆனால் மனு எழுதி தருவதற்கு பதிலாக, ஸ்டேஷன் வாசலுக்கு வெளியே வந்த பாலமுருகன் திடீரென்று இடுப்பில் வைத்திருந்த கத்தியை எடுத்து தன்னுடைய கழுத்தை அறுத்து கொண்டார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த போலீஸ் ஏட்டு மஞ்சுளா, ஓடிவந்து பாலமுருகனை தடுத்தார்... அப்போது மஞ்சுளாவுக்கும் வெட்டு காயம் ஏற்பட்டது. பிறகு பாலமுருகன் ஸ்டேஷனில் இருந்து நடுரோட்டுக்கு ஓடினார்.. தற்கொலை செய்ய போறேன் என்று கத்தி கொண்டே ஓடினார்.. அவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர்.. அதற்குள் ஓடிவந்த போலீசார், அவரிடமிருந்த கத்தியை பிடுங்கி கொண்டனர்.

ஏட்டு மஞ்சுளாவுக்கும் பாலமுருகனுக்கும் ரத்தம் கொட்டியது.. 2 பேரையும் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.. இப்போது ஏட்டு மஞ்சுளாவுக்கு உடல்நிலை தேறி வருகிறது.. பாலமுருகனுக்கு சிகிச்சை நடந்து வருகிறது..கழுத்தை அறுத்து கொண்டபோது, ஓடிப்போய் துணிச்சலுடன் தடுத்த மஞ்சுளாவை மாவட்ட எஸ்பி உடல்நலம் விசாரித்து, பாராட்டவும் செய்தார். இப்போது பாலமுருகனுக்கு 2 பேரில் எந்த மனைவி கை கொடுப்பார் என்பதுதான் பெரிய எதிர்பார்ப்பே!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+