திண்டுக்கல்: திடீரென பரபரக்கும் 'ஆன்மீக ஸ்பாட்கள்'- புதியாய் பிறந்த பாதாள செம்பு முருகன் கோவில்!

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: திண்டுக்கம் மாவட்ட சுற்றுவட்டாரங்களில் இப்போது 'ஆ' 'ஊன்னா' 'பாதாள சொம்பு முருகன்' கோவிலுக்கு படையெடுத்து விடுகின்றனர். தனியார் பேருந்துகள் கூட 'பாதாள செம்பு முருகன் கோவில்' வழி இயக்கப்படும் என அறிவிப்பு வைக்கும் அளவுக்கு அலைமோதுகின்றனர் ஆன்மீக அன்பர்கள்.

திண்டுக்கல் மாவட்டத்தில் புகழ்பெற்ற பழனி மலை முருகன் திருக்கோவில் உள்ளது. தமிழ்நாடு மட்டுமல்ல கேரளா, ஆந்திரா, கர்நாடகா என பல்வேறு மாநிலங்களிலும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் எப்போதும் முருகனை தரிசக்க வந்து குவிந்து கொண்டே இருக்கும். பழனி முருகன் கோவில் அளவுக்கு இல்லை என்றாலும் திருமலைக்கேணி - மலைக்கேணி முருகன் கோவிலும் பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலம். அம்மன் கோவில்களில் திண்டுக்கல் கோட்டை மாரியம்மன், அகரம் முத்தாலம்மன் என இப்படி விரல் விட்டுச் சொல்லக் கூடிய கோவில்கள் இன்னமும் அதே பாரம்பரிய உயிர்ப்புடன் திருவிழாக்களை நடத்திக் கொண்டுதான் இருக்கின்றன.

Dindiguls new Spiritual Place Paadhala Sembu Murugan Thirukovil

புதிய ஆன்மீக தலங்கள்: அதேநேரத்தில் திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 40, 50 ஆண்டுகளில் 5 ஆண்டுகள் அல்லது 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை சொல்லி வைத்தால் போல திடீர் திடீரென புதிய புதிய ஆன்மீக தலங்கள் உருவெடுப்பதும் பின்னாளில் அவை கண்டு கொள்ளப்படாமல் போவதும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பேசும் பழனி ஆண்டவர்: எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் அய்யலூர் பேசும் பழனி ஆண்டவர் முருக கோவில் புகழ் பெற்றது. இத்தனைக்கும் இதே அய்யலூர் பேசும் பழனி ஆண்டவர் முருகன் கோவிலுக்கு எதிராகத்தான் புகழ்பெற்ற வண்டி கருப்பண்ண சுவாமி கோவில் அமைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்ட மக்கள் புதிய வாகனங்களை வாங்கினால் கருப்பண்ண சுவாமி கோவிலுக்கு கிடா வெட்டி விருந்து வைப்பது இன்றளவும் தொடரும் ஒரு வழிபாட்டு முறை. இந்த வண்டி கருப்பண்ண சுவாமியை விட ஏராளமான பக்தர்களை சீனியர் பேசும் பழனி ஆண்டவர் முருகன் கவர்ந்திழுத்திருந்தார். அதுவும் பழனி தைப்பூசத்தின் போது ஒரு தேரை முதுகில் கட்டி இழுத்தபடியே பாதயாத்திரையாக அவர் செல்லும் போது வழியெங்கும் ஊர் ஊராக பக்தர்கள் திரண்டு வந்து ஆசி பெறுவது வழக்கம். பின்னாளில் மெல்ல மெல்ல பேசும் பழனி ஆண்டவர் கோவில் பேசுபொருளற்றதானது. பெரிய பேசும் பழனி ஆண்டவர் மறைந்து சின்னவர் வந்தார்.

Dindiguls new Spiritual Place Paadhala Sembu Murugan Thirukovil

ராஜகாளியம்மன் கோவில்: அதேபோல தெத்துப்பட்டி ராஜகாளி அம்மன் கோவில். இந்த கோவில் ஏற்படுத்திய பிரபலம் சென்னை கோடம்பாக்கத்தை உருட்டி புரட்டி எடுத்தது. ராஜகாளியம்மன் பெயரில் திரைப்படங்கள், தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் புற்றீசல் போல கிளம்பின. அன்றும் பேருந்துகள் எல்லாம் தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோவில் வழி என்றெல்லாம் பலகைகள் வைத்தன.

Dindiguls new Spiritual Place Paadhala Sembu Murugan Thirukovil

பாதாள செம்பு முருகன் கோவில்: இந்த வரிசையில் கசவனம்பட்டி மவுன குரு சுவாமிகள் கோவில், அணைப்பட்டி ஆஞ்சநேயர் கோவில் தொடங்கி நேற்று வரை கணக்கம்பட்டி சுவாமிகள் கோவில் வரை இப்படியான புதிய புதிய ஆன்மீக தலங்கள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த வகையில் இப்போது திண்டுக்கல் மாவட்டத்தில் எங்கு திரும்பினாலும் பாதாள செம்பு முருகன் கோவில் குறித்த பேச்சுதான். கூட்டம் கூட்டமாக மொத்தமாக கிளம்பி போய் வழிபடுகின்றனர். பாதாள செம்பு முருகன் கோவில் என்ற பலகையுடனான பேருந்தையும் இன்று கவனிக்க முடிந்தது. காலந்தோறும் தலைமுறைகள் தோறும் ஆன்மீக தேடல் ஒரு தொடர் கதையாகவே நீடிக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+