அம்மா சின்னம்மா ‘அந்த’ கட்சியோட போகட்டும்! உதயநிதியை சின்னவர்னு கூப்டாதீங்க! நேரிலேயே சொன்ன ஐ லியோனி
திண்டுக்கல் : உதயநிதியை சின்னவர் என்று அழைக்க வேண்டாம். அம்மா சின்னம்மா என்பது அவர்களோடு போகட்டும். இனி உதயநிதியை இளைய தலைவர் என்று இனி அழைக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன் என தமிழக பாடநூல் கழக தலைவரும் திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான திண்டுக்கல் ஐ லியோனி கூறியுள்ளார்.
திண்டுக்கல் அஞ்சலி ரவுண்டானா பைபாஸ் அருகில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் திமுக மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியினர் 7 ஆயிரம் பேருக்கு பொற்கிழி வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெரியசாமி, சக்கரபாணி, பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐபி செந்தில்குமார் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் காந்திராஜன் மற்றும் தமிழக பாடநூல் கழக தலைவரும் திமுக கொள்கை பரப்புச் செயலாளருமான திண்டுக்கல் ஐ லியோனி கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் ஐ லியோனி
இந்நிலையில் உதயநிதியை சின்னவர் என்று அழைக்க வேண்டாம் என திண்டுக்கல் ஐ லியோனி கூறியுள்ளார். நிகழ்ச்சியில் பேசிய திண்டுக்கல் ஐ லியோனி," கழக இளைஞரணி செயலாலர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சராகி முதல் அரசு சுற்றுபயணம் தொடங்கி உள்ளதற்கு தொடர்ந்து நாம் வெற்றி பயணத்தை தொடர்கிறோம் என்பதை காட்டுகிறது.

திமுக
திமுகவுக்காக தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுலும் கட்சிக் கூட்டங்களில் ஊர் முழுவதும் பேசினாலும் தற்போது திண்டுக்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் பேசுபவர்கள் பட்டியலில் என் பெயர் இல்லை. ஆனாலும் நான் ஒரு நிமிடம் மட்டும் அனுமதி கேட்டு வந்துள்ளேன். எல்லா ஊர்காரர்களும் திண்டுக்கல் பிரியாணி திண்பார்கள். ஆனால் நாம் திண்டுக்கல் காரர்கள். திண்டுக்கல் காரர்கள் திண்டுக்கல் பிரியாணி திங்க மாட்டார்கள்.

உதயநிதி ஸ்டாலின்
அதுமாதிரி தமிழகம் முழுவதும் ஊர் ஊராக பேய் பேசினாலும் திண்டுக்கல்லில் பேச வேண்டும் என நானே கேட்டு அனுமதி வாங்கினேன். அதற்கு ஒரு முக்கிய காரணம் இருக்கிறது. தற்போது அமைச்சராகி இருக்கும் உதயநிதி ஸ்டாலின் ஒரு செங்கலை வைத்தும், ஒருவர் ஒன்னொருவர் காலில் விழுந்து பதவிக்கு வந்தவர் என ஒரு புகைப்படம். அதை வைத்து தமிழகம் முழுவதும் சூறாவளி பிரசாரம் சுற்றுபயணத்தில் மாஸ் காட்டினார்.

இளைய தலைவர்
குறிப்பாக எளிமையாக அந்த இடத்தில் கிடைக்கும் விசயத்தை வைத்து பிரச்சாரம் செய்தார். அதிலும் மிக எளிமையாக செய்தவர் உதயநிதி ஸ்டாலின். உதயநிதியை சின்னவர் என்று அழைக்க வேண்டாம். அம்மா சின்னம்மா என்பது அவர்களோடு போகட்டும். இனி உதயநிதியை இளைய தலைவர் என்று இனி அழைக்க வேண்டும் என கேட்டு கொள்கிறேன். வரும் நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்" என கூறினார்.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
ராஜாக்கள் மந்திரியானால் இப்படித்தான்! டி.ஆர்.பி ராஜாவுக்கு எதிராக கிளம்பிய மா.செ.க்கள்! -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
MDMK quit?: திமுக கூட்டணியில் மதிமுக தொடருமா? கிளைமாக்ஸ் ஜூன் 27-ஆம் தேதி? -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட திமுக நிர்பந்தித்தது! ஜூன் 27ல் முக்கிய முடிவு! கொதித்து பேசிய வைகோ -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ!












Click it and Unblock the Notifications