திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொத்து கொத்தாய் கொல்லப்பட்ட கோழிகள்! ஒன்றல்ல இரண்டல்ல நான்காயிரம்! பரபர பழனி! ஓனர் போட்ட பலே திட்டம்

Google Oneindia Tamil News

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே வயலூரில் நான்காயிரம் இறந்த கோழிகளை கொன்று புதைக்க முயன்ற போது வாகனத்தை தடுத்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இரண்டு மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு மீண்டும் வாகனம் எடுத்துச் செல்லப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அடுத்துள்ளது மேல்கரைப்பட்டி. இங்கு எவிஏஜென் என்கிற தனியார் கோழி இறைச்சி தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிறுவனத்தில் வளர்க்கப்பட்டு வந்த நான்காயிரம் கோழிகளை கொன்று, வயலூர் அருகே உள்ள நந்தகுமார் என்பவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் புதைக்க முடிவு செய்தனர்.

இந்தியைத் திணிக்கும் முயற்சிகளை கைவிடுக! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்! இந்தியைத் திணிக்கும் முயற்சிகளை கைவிடுக! பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!

பழனியில் அதிர்ச்சி

பழனியில் அதிர்ச்சி

இதன்படி இன்று அதிகாலை இறந்த கோழிகளை வாகனங்களில் ஏற்றி செல்லப்பட்டு நந்தகுமார் என்பவரின் விவசாய தோட்டத்தில் இறந்த கோழிகளை புதைக்க எடுத்து சென்றனர். இதுகுறித்த தகவல் அறிந்து, வயலூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராணியின் கணவர் மகுடீஸ்வரன் தலைமையிலான பொதுமக்கள் சம்பவ இடத்தில் குவிந்தனர். குழி தோண்டி கோழிகளை புதைக்க இருப்பதை தடுத்து பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

4000 ஆயிரம் கோழிகள்

4000 ஆயிரம் கோழிகள்

அப்போது கோழிகளை புதைக்க வந்த தனியார் நிறுவன அதிகாரிகள், கோழிகள் விற்பனை ஆகாததால் கோழிகளை கருணைக் கொலை செய்து அதனை புதைக்க வந்ததாகவும், கோழி இறைச்சி நிறுவனத்தில் நந்தகுமார் வேலை செய்பவர் என்பதால், அவரது சம்மதத்தோடு அவருடைய தோட்டத்தில் புதைப்பதாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து கோழிகளை இங்கு புதைக்க கூடாது என்றும் வைரஸ் பாதித்த கோழிகளாக இருக்கலாம் எனவும், எனவே கோழிகளை புதைக்க கூடாது எனக் கூறி பொதுமக்கள் தடுத்தனர்.

பொதுமக்கள் அதிர்ச்சி

பொதுமக்கள் அதிர்ச்சி

ஒரு கோழி இறைச்சி நிறுவனத்திற்கு ஆதரவாக நெய்க்காரப்பட்டி பேரூர் கழக திமுக செயலாளர் அபுதாகீர் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக பேரூர் கழக செயலாளர் அபுதாகீர் கோழி இறைச்சி நிறுவனத்தில் கமிஷன் பெற்றுக் கொண்டு, இதே வேலையை அடிக்கடி செய்து வருவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சாமிநாதபுரம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர்.

பெரும் பரபரப்பு

பெரும் பரபரப்பு

இதில் கோழிகளை இப்பகுதியில் புதைக்க மாட்டோம் என்றும் இனிமேல் இப்பகுதியில் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்றும் தனியார் கோழி இறைச்சி நிறுவனம் சார்பில் உறுதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். தொடர்ந்து கோழி இறைச்சி ஏற்றி வந்த வாகனமும் திருப்பி எடுத்துச் செல்லப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

English summary
At Vayalur near Palani in Dindigul district, the vehicle was taken away again after a two-hour protest when the public blocked the vehicle when it tried to kill and bury four thousand dead chickens.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X