திமுகவுக்கு 136.. விஜய்க்கு 74.. அதிமுகவை முந்தும் தவெக.. டுடேஸ் சாணக்யா எக்ஸிட் போல்
சென்னை: தமிழகத்தில் திமுக கூட்டணியே மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று டுடேஸ் சாணக்யா கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. திமுக கூட்டணி 114 - 136 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், அதிமுக கூட்டணி 34 முதல் 56 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும், விஜய்யின் தவெக 52 முதல் 74 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும் டுடேஸ் சாணக்யா கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வரும் மே 4 ஆம் தேதி வெளியாகிறது. அதற்கு முன்னதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி வருகின்றன. நேற்று மேற்கு வங்கத்தில் தேர்தல் நடந்து முடிந்துள்ள நிலையில் மாலை 6 மணிக்கு பிறகு எக்ஸிட் போல் முடிவுகள் வெளியாகின.

அதிமுகவை முந்தும் விஜய்
இதில் பெரும்பாலான கருத்துக்கணிப்பு முடிவுகள் தமிழகத்தில் திமுக கூட்டணியே மீண்டும் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும், ஒரு சில கருத்துக்கணிப்புகள் அதிமுக கூட்டணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளது என்றும் கூறியிருந்தது. இந்த நிலையில் டுடேஸ் சாணக்யா இன்று கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதில் திமுக கூட்டணியே வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளது.
டுடேஸ் சாணக்யா கருத்துக்கணிப்பின் படி, திமுக கூட்டணி 114 - 136 தொகுதிகளில் வெற்றி பெறும். அதிமுக கூட்டணி 34 முதல் 56 தொகுதிகளில் வெற்றி பெறும். விஜய்யின் தவெக 52 முதல் 74 தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது. மற்றவை 0 முதல் 2 தொகுதிகள் வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.
வாக்கு சதவீதம் எவ்வளவு
வாக்கு சதவீதத்தினை பொறுத்தவரை திமுக கூட்டணி மொத்தமாக 39 சதவீத வாக்குகளை பெறும். அதிமுக கூட்டணி 27 சதவீத வாக்குகளையும், விஜய்யின் தவெக 30 சதவீத வாக்குகளையும், மற்றவை 4 சதவீத வாக்குகளையும் பெறும் என்று கணித்துள்ளது. இதில் தமிழ்நாட்டில் இஸ்லாமியர்களின் வாக்குகள் 64 சதவீதம் திமுகவுக்கே கிடைக்கும் என்றும் கூறியுள்ளது.
பிற்படுத்தப்பட்டோர் வாக்குகள் 36 சதவீதம் பேர் திமுக கூட்டணிக்கே வாக்களித்துள்ளனர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 38 சதவீதம் பேர் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர் என்றும் கூறியுள்ளது. கிறிஸ்தவர்கள் 49 சதவீதம் பேர் திமுக கூட்டணிக்கே வாக்களித்திருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது. பெரும்பான்மைக்கு 118 இடங்கள் தேவை என்கிற பட்சத்தில் திமுக கூட்டணி அதைவிட அதிகமாகவே பெற்று வெல்ல வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது.
தமிழ்நாடு - டுடேஸ் சாணக்யா கருத்துக்கணிப்பு
திமுக கூட்டணி: 114 முதல் 136
அதிமுக கூட்டணி: 34 முதல் 56
தவெக: 52 முதல் 74
மற்றவை: 0 முதல் 2
வாக்கு சதவீதம்
திமுக கூட்டணி: 39 சதவீதம்
அதிமுக கூட்டணி: 27
தவெக: 30
மற்றவை: 4
-
ரசிகர்களை ஏமாற்றிய முதல்வர் விஜய்.. இப்படி செய்வார்னு எதிர்பார்க்கலை.. கர்நாடகா கோவிலுக்கு சென்றபோது சம்பவம் -
அம்மா கொடுத்த அனுமதி.. ரஜினியை போல் விஜய்யும் எனக்கு நெருக்கம்.. ராகவா லாரன்ஸ் சொன்ன வார்த்தை! -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்! -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
Delimitation: கழன்றுக்கொண்ட திமுக.. காணாமல் போகும் இந்தியா கூட்டணி? பாஜக போடும் பலே பிளான்! -
கம்ப்ளைன்ட் கொடுக்க போன என் மீதே கேஸ் போட்டுட்டாங்க.. பிளான் பண்ணி பண்ணுறாங்க! ஜூலி ஆதங்கம் -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
“தீயசக்தி, தீர்ந்துபோன சக்தி.. கூப்புக்காலம் கூடிக்கொண்டே போகும்” - திமுக, அதிமுகவுக்கு தவெக பதிலடி! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்!











Click it and Unblock the Notifications