திருடனுக்கு தேள் கொட்டுதா? அண்ணா பற்றி நான் கூறியது எல்லாம் உண்மைதான்.. அண்ணாமலை திட்டவட்டம்
திண்டுக்கல்: முன்னாள் முதல்வர் அண்ணாதுரை குறித்து நான் கூறிய விஷயங்கள் அனைத்தும் உண்மை என்றும் அதில் தான் உறுதியாக இருப்பதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு தனியார் ஆங்கில சேனலுக்கு அண்ணாமலை பேட்டி அளித்திருந்தார்.

அதில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றவர் என பொருள்படும்படியாக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு அதிமுகவினர் கடுமையாக விமர்சித்திருந்தார்.
ஜெயலலிதாவை பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை என தெரிவித்திருந்தனர். இதனால் அதிமுக- பாஜக இடையே கூட்டணி நீடிக்குமா என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில்தான் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
இதற்காக டெல்லி சென்ற எடப்பாடிக்கு பிரதமருக்கு பக்கத்தில் அமரும்படியான வாய்ப்பு கிடைத்தது. இது மற்ற கட்சியின் தலைவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த நிலையில் அதிமுக - பாஜக இடையே இருந்த பகைமை சிறிது அணைந்திருந்தது. இந்த நிலையில் என் மண் என் மக்கள் எனும் நிகழ்ச்சியில் ஒரு நிகழ்ச்சியில் அண்ணாமலை பேசிய பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவிநீக்கம் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 11 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அண்ணாமலை தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. அந்த போராட்டத்தில் அண்ணாமலை அண்ணாதுரையை கடுமையாக விமர்சித்திருந்தார்.
அப்போது அவர் பேசுகையில், " 1956 ஆம் ஆண்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் 10 நாட்கள் ஒரு தமிழ் மாநாட்டின் 4ஆம் நாளன்று அழைக்கப்படாத நிலையில் அங்கு வந்த அண்ணாதுரை பார்வதி தேவியை விமர்சித்திருந்தார். அடுத்த நாள் மேடைக்கு வந்த முத்துராமலிங்கத் தேவர், சிவபுராணம் இயற்றப்பட்ட மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு வந்து பார்வதி தேவியை பேசியது யார் என கேள்வி எழுப்பினார்.
எல்லாரும் நெளிந்தனர். அண்ணாதுரையை மதுரையில் ஒளித்து வைத்திருந்தார்கள். அவரால் வெளியே செல்ல முடியாத நிலை இருந்தது. மதுரை மீனாட்சி அம்மனுக்கு இதுவரை பாலில்தான் அபிஷேகம் நடந்திருக்கிறது. மீண்டும் ஒரு முறை பார்வதி தேவி குறித்து கடவுளை நம்ப மறுப்போர் பேசினால் ரத்த அபிஷேகம் நடக்கும் என கூறியிருந்தார். இதையடுத்து முத்துராமலிங்கத் தேவரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு வந்தார் அண்ணாதுரை. இவ்வாறு அண்ணாமலை விமர்சித்துள்ளார்.
இந்த நிலையில் அண்ணாமலை அண்ணாதுரையை விமர்சித்திருந்த நிலையில் அவருக்கு ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செல்லூர் ராஜூ ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். பெரியார் குறித்து பேசிய அண்ணாமலையின் நாக்கை அறுத்துவிட வேண்டும் என செல்லூர் ராஜூ விமர்சித்திருந்தார். அது போலி் ஜெயக்குமாரோ அண்ணாமலை எதை படித்து அண்ணா குறித்து தெரிந்து கொண்டாரோ, இனி அவரை பற்றி பேசினால் பதிலடி கொடுப்போம் என்றார்.
அது போல் சி.வி.சண்முகம் கூறுகையில் பேரறிஞர் அண்ணா இல்லையென்றால் தமிழகம் இல்லை, நீயும் இல்லை நானும் இல்லை, இந்த ஆறு சதவீதம் மட்டுமே நாட்டை ஆண்டிருப்பார்கள். அண்ணாமலையின் வயது 40 கூட இன்னும் முடியவில்லை. அண்ணாமலை சொல்லும் சம்பவம் 1951இல் மதுரையில் அண்ணா பேசியதாக ஒரு சம்பவத்தை கூறுகிறீர்கள்.
அந்த சம்பவத்திற்கு எந்தவித ஆதாரமும் இல்லை. வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ, உங்களை நீங்க அறிவு ஜீவியாக நினைத்துக் கொண்டு எல்லாம் தெரியும் என பேசிய உள்ளீர்கள். அந்த சம்பவம் நடந்து 74 ஆண்டுகள் ஆகிறது, உங்கள் வயது 40. அப்போது உங்களுடைய அப்பா அம்மாக்கு திருமணம் ஆகி இருக்காது. இவ்வாறு சி.வி.சண்முகம் பேசியிருந்தார்.
இதற்கு அண்ணாமலை இன்று பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: சி.வி. சண்முகம் அமைச்சராக இருந்ததே வசூல் செய்யத்தான். சி.வி.சண்முகம் மாலை 6 மணிக்கு முன்பு ஒரு விதமாகவும் பின்பு வேறு விதமாகவும் பேசுவார். 10 ஆண்டுகள் துப்பாக்கி பிடித்த கை என்னுடையது. என் நேர்மையை கொச்சைப்படுத்தினால் விடமாட்டேன். அண்ணா குறித்து நான் கூறிய கருத்துகள் உண்மை. அதிலிருந்து நான் பின்வாங்க மாட்டேன் என தெரிவித்திருந்தார்.












Click it and Unblock the Notifications