அன்னையர் தினத்தில் 48 வயது இரோம் சர்மிளாவுக்கு இரட்டை குழந்தைகள்!
கொடைக்கானல்: அன்னையர் தினத்தில் சமூக போராளியான 48 வயது இரோம் சர்மிளாவுக்கு இன்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.
மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை ரத்து செய்ய கோரி 16 ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியவர் இரோம் சர்மிளா. அம்மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டு மிக மோசமான தோல்வியைத் தழுவினார்.

இதையடுத்து தமிழகத்தின் கொடைக்கானல் இரோம் சர்மிளா தஞ்சமடைந்தார். கடந்த 2017-ம் ஆண்டு தேஸ்மந்த் கொட்டின்கோவை கொடைக்கானலில் பெரும் சர்ச்சைகளுக்கு இடையே இரோம் சர்மிளா திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் இன்று இரோம் சர்மிளாவுக்கு கொடைக்கானல் மருத்துவமனையில் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன என சமூக செயற்பாட்டாளர் திவ்யா பாரதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். திவ்யா பாரதி பாதிக்கப்பட்ட போது இரோம் சர்மிளா அவருக்காக குரல் கொடுத்தார். அதன் பின்னர் இரோம் சர்மிளா திருமணத்தின் போது திவ்யா பாரதிதான் உடன் இருந்தார்
அன்னையர் தினத்தில் இரட்டை குழந்தை பெற்றெடுத்த இரோம் சர்மிளாவுக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துகள் குவிகின்றன.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications