நாளைக்கு லீவு! கொடைக்கானல் போக ப்ளான் பண்ணிருக்கீங்களா? வெளியான அதிரடி அறிவிப்பு! மக்களே கவனம்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்று சுற்றுலா பயணிகளை அனுமதிக்கும் நடைமுறை முடிவுக்கு வந்ததாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியானது. இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கொடைக்கானலுக்கு இ-பாஸ் பெற்று அனுமதிக்கும் நடைமுறை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் கூறியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், நீலகிரி மாவட்ட ஊட்டி ஆகிய பகுதிகளுக்கு, இந்தியா முழுவதிலுமிருந்து பல்வேறு பகுதியில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக நகர் பகுதி மற்றும் மலைச்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் தொடர்ந்து காணப்பட்டது.
இந்த போக்குவரத்து நெரிசலை சரி செய்யவும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக நீதிமன்றம் கடந்த வருடம் இ-பாஸ் முறையை கட்டாயபடுத்தியது. அதை தொடர்ந்து தற்பொழுது கொடைக்கானல், ஊட்டியில் இ பாஸ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, வார நாட்களில் 4,000 வாகனங்களும்,வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களும் அனுமதிக்க வேண்டும் என ஒரு ஆணை பிறப்பித்துள்ளது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 2 முதல் இ பாஸ் சோதனை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊட்டி மற்றும்,கொடைக்கானல் நுழைவுவாயில் பகுதிகளில் உள்ள சோதனை சாவடிகளில் நேற்று முதல் இ-பாஸ் சோதனையானது தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
குறிப்பாக வார நாட்களில் 4000 வெளியூர் சுற்றுலா வாகனங்களும்,வார இறுதி நாட்களில் 6000 சுற்றுலா வாகனங்களும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதில் இ-பாஸ் பதிவு செய்வதில் 4,000 மற்றும் 6,000 இ-பாஸ் பதிவு செய்தவுடன், இணையதளத்தில் மீண்டும் பதிவு செய்யாத வகையில் அந்த இணையதளம் வடிவமைக்கப்பட்டு இருப்பதாகவும், மேலும் பதிவு செய்த நாளில் சுற்றுலா வாகனங்கள் வராமல் உள்ள சூழ்நிலையில் மற்ற சுற்றுலாப்பயணிகளின் வாகனங்கள் கொடைக்கானல் நகர்ப்பகுதிக்குள் வருவதற்கு வழி வகை செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த வாரத்துடன் இ-பாஸ் நடைமுறை முடிவுக்கு வந்ததாக சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. ஆனால் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெறுவது தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்,"மாண்பமை சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வருகைபுரியும் அனைத்து வாகனங்களும் 'epass.tnega.org" என்ற இணையதளத்தில் உரிய விவரங்களை உள்ளீடு செய்து இ.பாஸ் பெற்று பயணிக்கும் முறை 07.05.2024 முதல் நடைமுறையில் உள்ளது.
மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, கொடைக்கானல் பகுதியில் உள்ள இயற்கை வளங்கள் மற்றும் விலங்குகளை பாதுகாக்கும் வகையிலும் சுற்றுலா பயணிகளின் வாகன போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தும் பொருட்டும், வாரநாட்களில் 4000 வாகனங்களும் வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களும் கொடைக்கானலுக்கு E-Pass பெற்று அனுமதிக்கும் நடைமுறை மறுஉத்தரவு பிறப்பிக்கப்படும் வரை தொடர்ந்து செயல்பாட்டில் இருக்கும் என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. அரசு பேருந்துகள், உள்ளூர் வாகனங்கள், விவசாயப் பொருட்கள் மற்றும் சரக்குப் பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் பெற ஏற்கனவே விலக்களிக்கப்பட்டுள்ளது.
மேலும், கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய நெகிழி (பிளாஸ்டிக்) பொருட்கள், 5 லிட்டருக்கு குறைவாக உள்ள தண்ணீர் பாட்டில்கள் மற்றும் அனைத்து வகையான குளிர்பான பாட்டில்கள் தடை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 5 லிட்டருக்க குறைவாக உள்ள தண்ணீர் பாட்டில்கள் மற்றும் அனைத்து வகையான குளிர்பான பாட்டில்கள் வைத்திருந்தால் பாட்டில் ஒன்றுக்கு ரூ.20 வீதம் பசுமை வரி விதிக்கப்படும்" என கூறியுள்ளார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications