கொடைக்கானலில் விழுந்த கோடு! நிலச்சரிவை தொடர்ந்து.. 300 அடி நீளத்திற்கு நில பிளவு! மக்கள் அச்சம்!
திண்டுக்கல்: கேரளாவில் சமீபத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் இதன் பரபரப்பு அடங்குவதற்குள், கொடைக்கானல் மலைப்பகுதியில் நில பிளவு ஏற்பட்டிருக்கிறது. சுமார் 300 அடி நீளம் வரை ஏற்பட்டுள்ள இந்த பிளவு புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூலை மாத இறுதியில் கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பெரும் உயிர் சேதங்களை ஏற்படுத்தியது. ஜூலை 29-30ம் தேதிகளில் பெய்த கனமழைதான் இந்த நிலச்சரிவுக்கு முக்கிய காரணம். பொதுவாக மண் பல அடுக்குகளை கொண்டிருக்கும். தொடர்ச்சியாக பெய்த மழையானது இந்த அடுக்குகளுக்கு இடையே உள்ள இறுக்கத்தை தளர்த்தியுள்ளது. அடுத்த நாளும் பெய்த கனமழை, தளர்ந்த மண்ணை சரிய செய்திருக்கிறது.

இந்த மண், மலை அடிவாரத்தில் இருந்த கிராமங்களை முழுக்க அப்படியே மூடியிருக்கிறது. குறிப்பாக முண்டக்கை மற்றும் சூரல்மலை என இரண்டு கிராமங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. வீடுகள் இருந்ததற்கான அடையாளம் கூட தெரியாத அளவுக்கு மண் மூடியுள்ளது. சம்பவம் நடந்தது அதிகாலை நேரம் என்பதால் என்ன நடக்கிறது என்பதை யாராலும் உடனடியாக உணர முடியவில்லை. தூக்கத்திலேயே மக்கள் தங்கள் உயிரை இழந்தனர்.
விவரம் அறிந்து மீட்டு படையினர் இப்பகுதிகளுக்கு வருவதற்கு முன்னர் எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. உயிரை பிடித்துக்கொண்டு உதவியை எதிர்பார்த்திருந்த மக்கள் காப்பாற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். புதைந்து போனவர்களின் சடலங்களை தோண்டும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. 336 பேரின் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன. 78 பேரின் நிலை என்ன ஆனது என இப்போது வரை தெரியவில்லை.
வயநாடு நிலச்சரிவு சோகம் இன்னும் அகலாத நிலையில், கேரளாவை ஒட்டியுள்ள கொடைக்கானல் மலைப்பகுதியில் புதிய அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது. அதாவது, கொடைக்கானலில் இருந்து சுமார் 60 கி.மீ தூரத்தில் உள்ள 'கிளாவரை' எனும் பகுதியில் நில பிளவு ஏற்பட்டிருக்கிறது.
இங்குள்ள மக்களுக்கு குழாய் வழியாக குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களாக நீர் வரவில்லை. சந்தேகமடைந்த கிராம மக்கள் குழாய் வரும் பாதையை ஆய்வு செய்தனர். அப்போதுதான் நில பிளவு ஏற்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.
கிளவரை மலைப்பகுதியில் சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு பிளவு ஏற்பட்டிருக்கிறது. இங்கு கட்டுமான பணிகளோ, சுரங்க பணிகளோ ஏதும் நடக்கவில்லை. அப்படியெனில் இந்த பிளவு எப்படி உருவானது? என்று கிராம மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். மட்டுமல்லாது இந்த பகுதி கேரளாவை ஒட்டியுள்ள பகுதி என்பதால், வயநாட்டில் ஏற்பட்டதை போன்ற நிலச்சரிவு இங்கும் ஏற்படுமோ? என்றும் அச்சமடைந்துள்ளனர்.
இது குறித்து அரசு அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு காரணத்தை தெரியப்படுத்த வேண்டும் என்றும், ஆபத்து இருப்பது கண்டறியப்பட்டால், தங்களை உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications