திண்டுக்கல் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ட்விஸ்ட்.. பிறப்புறுப்பில் பாதிப்பே இல்லை.. காட்டேஜில் என்ன நடந்தது.. பழனியில் கேரள பெண் பலாத்காரமா..?

பழனி பெண் குற்றச்சாட்டில் கேரளா டிஐஜி பரபரப்பு பேட்டி தந்துள்ளார்

Google Oneindia Tamil News

திண்டுக்கல்: பழனியில் அந்த பெண்ணை யாருமே பலாத்காரம் செய்யவில்லையாம்.. அந்த கேரள பெண்ணின் உடம்பில் காயங்களோ, பிறப்புறுப்பில் பாதிப்போ ஏற்படவில்லை என்று மெடிக்கல் ரிப்போர்ட்டும் வந்துள்ளது என்று திண்டுக்கல் டிஐஜி பரபரப்பான பேட்டி தந்துள்ளார்.

கேரளா மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர் அந்த பெண்.. 40 வயதாகிறது.. இவரும் இவரது கணவரும் ஜுன் 19ம் தேதி பழனிக்கு வந்திருக்கிறார்கள்..

டிஎன்பிஎஸ்சி-க்கு 4 புதிய உறுப்பினர்கள் நியமனம்.. 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள் என அறிவிப்புடிஎன்பிஎஸ்சி-க்கு 4 புதிய உறுப்பினர்கள் நியமனம்.. 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள் என அறிவிப்பு

பழனி பஸ் ஸ்டாண்டில் இறங்கி காட்டேஜுக்கு சென்று கொண்டிருந்தனர்.. அப்போது 3 பேர் கொண்ட கும்பல் இவர்களை வழிமறித்துள்ளது.. கணவனை விரட்டி அடித்துவிட்டு, அந்த பெண்ணை மட்டும் இன்னொரு காட்டேஜூக்குள் அடைத்து வைத்து கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.. இதை பற்றி சம்பந்தப்பட்ட அந்த பெண்ணே கேரள போலீசில் புகார் தந்தார்.

புகார்

புகார்

மேலும், சம்பவம் குறித்து பழனி அடிவாரம் ஸ்டேஷனிலும் புகார் தந்தார்.. அப்போது போலீசார் எங்களை அடித்து விரட்டியதாகவும் அந்த பெண் குற்றஞ்சாட்டி இருந்தார்... இதையடுத்து விரட்டியதாக சொல்லப்பட்ட போலீசார், காட்டேஜ் ஓனர், அங்கு வேலை பார்ப்பவர்கள், ஆட்டோ டிரைவர்கள் போன்றோரை பழனி போலீசார் வரவழைத்து விசாரிக்கப்பட்டனர்.. மற்றொரு பக்கம் பாதிப்புக்கு உள்ளான பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனையும் நடத்தப்பட்டது..

 விஜயகுமாரி

விஜயகுமாரி

இந்த வழக்கு பெரிய அளவில் பரபரப்பாக பேசப்பட்டது.. பல்வேறு விதமான யூகங்களும் வெளியாகி கொண்டிருந்தது.. இதையடுத்து திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி நேரடியாகவே களத்தில் இறங்கினார்.. அப்போதுதான் முதல் சந்தேகம் அவருக்கு எழுந்தது.. புகார் அளித்த நபர் கூறிய தகவலும், சம்பவம் நடந்ததாக கூறப்படும் இடத்தில் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளுக்கும் முரணாக இருப்பதே இந்த சந்தேகத்துக்கு காரணம்..

 திருப்பம்

திருப்பம்

அதற்கு பிறகு, உண்மைத்தன்மையை கண்டறிய கேரளாவுக்கு கிளம்பி உள்ளனர்.. வழக்கின் முக்கிய திருப்பமாக அந்த காட்டேஜ் ஓனரே செய்தியாளர்களை வந்து சந்தித்தார்.. சம்பந்தப்பட்ட பெண், அம்மா மற்றும் மகன் என்ற பெயரில் வந்து ரூம் எடுத்து தங்கினார்களாம்.. 2 பேரும் போதையில் தகராறு செய்ததால் காட்டேஜ் விட்டு வெளியேற்றிவிட்டோம், இதே பெண்தான், ஏற்கனவே ஒருமுறை கேரள பெண் போலீஸ் என்று சொல்லி பணம் கேட்டு மிரட்டியதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை தந்தார்.

 காட்டேஜ்

காட்டேஜ்

கேரள பெண் பாலியல் கொடுமை செய்யப்பட்ட வழக்கு பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், அந்த காட்டேஜ் ஓனர் தந்த தகவல் முற்றிலும் வேறுமாதிரியாக இருந்ததால், டிஐஜி விஜயகுமாரிக்கு இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.. இதற்கு பிறகுதான் அந்த பெண் பலாத்காரமே செய்யப்படவில்லை என்ற உண்மை மெடிக்கல் ரிப்போர்ட்டில் தெரியவந்துள்ளது.

தர்மராஜ்

தர்மராஜ்

இதுகுறித்து டிஐஜி விளக்கம் தந்துள்ளார்.. கடந்த 19ஆம் தேதி தங்கம்மாள் என்ற அந்த பெண்ணும் தர்மராஜ் என்பவரும் பழனியில் ரூம் போட்டுள்ளனர்.. மதுபோதையில் தகராறும் செய்துள்ளனர்.. லாட்ஜ் ஓனர் அவர்களை விரட்டி விட்டுள்ளார்.. ஆனால், அதன்பிறகு 25-ம்தேதி வரை 2 பேரும் பழனி, திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் ஜாலியாக ஊர் சுற்றி வந்திருக்கிறார்கள்.. அதற்கான சிசிடிவி காட்சிகளும் சிக்கி உள்ளன.. அந்த காட்டேஜ் ஓனரிடம் பணம் பறிக்கவே இப்படி ஒரு டிராமா செய்துள்ளார்.

அசம்பாவிதம்

அசம்பாவிதம்

ஆனால், அந்த காட்டேஜில் எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடக்கவில்லை, சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு கல்யாணமே ஆகவில்லை.. உடன் வந்த அந்த தர்மராஜ் இவருடைய கணவர் இல்லையாம்.. பெண்ணுக்கு கூட்டுப்பாலியல் வன்புணர்வு நடந்ததற்கான எவ்வித உடல்காயங்களும், மர்ம உறுப்புகளில் பாதிப்பும் ஏற்படவில்லை' என்று பரபரப்பான பேட்டியை தந்துள்ளார். சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தொடர் விசாரணையும் நடந்து வருகிறது.

English summary
Major Twist in the case of Kerala woman raped in Palani and DIG Explained
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X