ரஜினி சொம்பு தூக்கறார்னு தெரியுதுல்ல.. நதிகளை இணைக்கிற மூஞ்சிங்கள பாரு... மன்சூர் அலிகான் ஆவேசம்

நடிகர் ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவானவர் என்று மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஆயாசத்தில் அப்படியே அசந்து தூங்கிய மன்சூர் அலிகான்-வீடியோ

    திண்டுக்கல்: "குஜராத்துக்கு 1000 கோடி தந்தாரே? இங்க கீழடிக்கு 1 கோடியாவது தந்தாரா?.. தூக்கு போட்டு சாவுங்கடா நீங்க" என்று நடிகர் மன்சூர் அலிகான் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.

    திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக மன்சூரலிகான் களம் இறங்கி உள்ளார். வேட்பாளர் பெயர் அறிவிப்பதற்கு முன்னாடியே தொகுதிக்குள் இறங்கி ஒரு கலக்கு கலக்கி வருகிறார் மன்சூரலிகான்.

    Mansoor Ali Khan says about Rajnikanth in Kaveri Issue

    இப்போது இணைய தளங்களிலும் மன்சூரலிகான் வாக்கு சேகரிக்கும் வீடியோதான் வைரலாகி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தின் முன்னணி இதழான நக்கீரன் மன்சூரலிகானை நேரில் சென்று பேட்டி அளித்துள்ளது. அப்போது அவரிடம் கேட்கப்பட்ட ஒரு சில கேள்விகளும், மன்சூரலிகான் தன் பாணியிலேயே சாப்பிட்டு கொண்டும், நடந்து கொண்டும் அளித்த கேஷூவல் பதில்கள்தான் இவை:

    கேள்வி: பாஜகவும் வேணாம், காங்கிரசும் வேணாம்ன்னு ஏன் சொல்றீங்க?

    பாஜக என்ன மனிதர்களுக்கான கட்சியா? காவிரி ஆணையத்தை மோடி தடுத்தாரா இல்லையா? விவசாயிகளை வாழ வைக்கறேன்னு சாகடிக்கிறார். எந்த மூஞ்சு வச்சுன்னு ஓட்டு கேட்கிறார்?

    கேள்வி: இதே மாதிரிதான் ரெண்டு பேரும் வேணாம்னு மக்கள் நீதிமய்யம் சொல்லுதே.. அதை ஏன் நீங்க வரவேற்க கூடாது

    கமல்ஹாசன் ஒரு நல்ல நடிகர். நல்ல மனுஷன். ஆனா நாட்டு நடப்புக்கும் அவர் செய்ற வேலைக்கு ஏதாவது சம்பந்தம் இருக்கா? ஜிஎஸ்டியை வரவேற்கிறார்.

    கேள்வி: பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைக்கப்படும் ன்னு சொல்லி இருக்காங்க. அதுக்கு ரஜினியும் வரவேற்பு தெரிவித்துள்ளாரே?

    இப்படி ஒரு கோமாளித்தனமான அறிக்கையும், அதுக்கு ஒரு பதிலும் இருக்க முடியாது. இப்படியே சொல்லிட்டு இருக்கான். அப்ப இத்தனை நாளா நதிகளை இணைக்காம, என்னத்த இணைச்சுட்டு இருந்தான்? கடவுள் விரும்பினால், மீண்டு,ம் ஆட்சிக்கு வந்தால் இப்படியே சொல்லிட்டு இருக்க வேண்டியதுதான். ரஜினிதான் சொம்பு தூக்கறார்னு தெரியுது இல்லை. ரஜினி இவருடைய ஏவல்னு தெரியுது. கேவலமா இருக்கு. நதியில இருந்து எங்க இருந்து எங்க இணைப்போ? எப்படி இணைப்பே? இதெல்லாம் கேனைத்தனமா இல்லை? வெட்கமா இல்லை? நதிகளை இணைக்கிற மூஞ்சிங்கள பாரு.

    Mansoor Ali Khan says about Rajnikanth in Kaveri Issue

    கேள்வி: திமுகவுக்கும் காங்கிரசும் நிறைய முரண்பாடு இருக்கலாம். ஆனால் மோடி மீண்டும் வரக்கூடாது என்பதில் நாங்கள் ஒன்றிணைகிறோம் என்று சொல்கிறார்களே?

    காங்கிரசும் பாஜகவும் ஒன்றுதானே.

    கேள்வி: அப்படின்னா.. நீங்க தனித்து நின்னு யாரை எதிர்க்க போறீங்க?

    அதுக்காக இந்த கொலைகார பாவிகளோட இணையறதா? லட்சம் லட்சம் கோடிஏப்பம் விட்டவங்ககூட இணைஞ்சிட்டா எங்களுக்குன்னு ஒரு தனித்துவம் என்ன? யார் கூடவும் இணையணும் எண்ணம் எங்களுக்கு இல்லை.

    கேள்வி: இந்த தேர்தலில் உங்க நோக்கம் என்ன?

    வெல்லணும். நாடாளுமன்றம் போகணும். 40 இடமோ 4 இடம் ஜெயிக்கிறமோ, ஆனா தமிழனை பிரதமராக ஆக்கணும். தமிழகம் வஞ்சிக்கப்பட்டு விட்டது. குஜராத்துக்கு 1000 கோடி தந்தாரே? இங்க கீழடிக்கு 1 கோடியாவது தந்தாரா? இப்போ கீழடி விஷயம் 5000 ஆண்டு தொன்மைன்னு வெளியே வந்துடுச்சு. இப்போ என்ன செய்வீங்க? தூக்கு போட்டு சாவுங்கடா நீங்க. திமுக, அதிமுக, தேசிய கட்சிகள்ன்னு எதுக்கு இன்னும்? தமிழன் பிரதமர் ஆயிருந்தா நீட் தேர்வு விட்டுருவோமோ?

    Mansoor Ali Khan says about Rajnikanth in Kaveri Issue

    கேள்வி: உங்க கட்சிக்கு கூட்டம் வருது. ஆனா எல்லாம் ஓட்டாக மாறுமா?

    ஏன் மாறாது. ஒன்றரை கோடிக்கு மேல வித்தியாசத்துல ஜெயிப்போம். இந்த கருத்து கணிப்பு... பருப்பு கணிப்புன்னு போட்டு எல்லாரும் சொம்படிக்கிறாங்க.

    கேள்வி: நாடாளுமன்றத்துக்கு போய் என்ன பண்ண போறீங்க? இதே மாதிரி கோமாளித்தனம்தான் அங்கேயும் செய்வீங்களா?

    நீங்க இப்படி சொன்னீங்கன்னா, நான் கோவணம் கட்டிட்டு அங்க போயிடுவேன்(சிரிப்பு). நாம் தமிழர் கட்சிதான் மானத்தோடு, வீரத்தோடு நிக்குது. கொள்கை பிடிப்போடு இருக்கோம். நிச்சயம் ஜெயிப்போம்" என்றார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+