கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு போதை காளான்.. மொத்தமாக சிக்கிய 7 பேர் கும்பல்.. திடுக்கிடும் தகவல்
கொடைக்கானல்: கொடைக்கானல் மேல்மலை கிராமங்களான பூம்பாறை, மன்னவனூர், கிளாவரை போன்ற கிராமங்களில் தங்கும் விடுதிகளை வாடகைக்கு எடுத்து நடத்தும் சிலர், தங்கும் விடுதியில் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா, போதை காளான் விற்பனை செய்தது தெரியவந்தது. இந்த புகாரில கேரளாவை சேர்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொடைக்கானலை பொறுத்தவரை இன்னும் இயற்கை இயற்கையாகவே உள்ள சுற்றுலா தளங்ளில் முதன்மையானது. இங்கு மலைகளில் விளையும் காய்கறி தோட்டங்களும், மலைவாழை பழங்களும் தான் விளைவிக்கப்படுகின்றன. வனங்கள் அப்படியே இருக்கின்றன. கொடைக்கானலில் மற்ற சுற்றுலா தளங்களில் இல்லாத பல்வேறு சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. செயற்கை நட்சத்திர ஏரி, செயற்கையாக உருவாக்கப்பட்ட பேரிஜம் ஏரி, கொடைக்கானலின் தனிசிறப்பு. அதேபோல் வெள்ளைப்பூண்டு, அவகோடா, மலை வாழப்பழம், பேரிக்கா, பிலிம்ஸ் பழம் இந்த மண்ணின் முக்கியமான தனிச்சிறப்பு. இங்கு விளையும் உருளைகிழங்கு மிகவும் ருசியானது.

இப்படி பாரம்பரியமிக்க கொடைக்கானலில் இன்னொரு சிறப்பும் உண்டு. அது ஆபத்தானது மட்டுமல்ல.. அபூர்வமானதும் கூட... அதுதான் போதைக்காளான். கொடைக்கானலில் இருக்கும் போதைக்காளானை தேடி சுற்றுலா பயணிகள் வருவதாக கூறப்படுகிறது. ஆபத்தான போதைக்காளானை வெள்னைக்காரர்கள் தான் கண்டுபிடித்தார்கள். இது கஞ்சாவைவிட போதை அதிகம் தரும் என்பதால், இதை தேடி பலரும் கொடைக்கானல் வருகிறார்கள்.
அவர்களுக்கு போதைக்காளானை சப்ளை செய்யும் கும்பல்களும் சட்டவிரோதமாக கொடைக்கானலில் செயல்பட்டு வருகிறார்கள். அப்படி செயல்பட்டு வருவோரை கொடைக்கானல் போலீசார் தேடி தேடி கைது செய்து வருகிறார்கள். அதையும் மீறி போதைக்காளான், கஞ்சா உள்ளிட்டவற்றை சப்ளை செய்வது அவ்வப்போது ரகசியமாக நடந்து வருகிறது. அப்படித்தான் ஒரு சம்பவம் கொடைக்கானல் மேல்மலை கிராமங்களில் நடந்துள்ளது
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மேல்மலையில் பூம்பாறை, மன்னவனூர், கிளாவரை, பூண்டி, கவுஞ்சி, கும்பூர், கூக்கால் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராமங்களில் ஏராளமான தங்கும் விடுதிகள் இருக்கின்றன. இவற்றை கேரள மாநிலத்தை சேர்ந்த சிலர் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் தங்கும் விடுதிகளில் கஞ்சா, போதை காளான் ஆகியவற்றை விற்பனை செய்வதாக கொடைக்கானல் போலீசாருக்கு பல்வேறு புகார்கள் வந்தது. இதன் அடிப்படையில் கடந்த சில வாரங்களாக அந்த கிராமங்களில் செயல்படும் தங்கும் விடுதிகளில் போலீசார் அடிக்கடி சோதனை நடத்தி போதைப்பொருட்கள் விற்றவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்
இந்த நிலையில் புதன்கிழமை இரவு திண்டுக்கல் போதைப்பொருள் கடத்தல் தடுப்புப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் சொக்கலிங்கம் மற்றும் கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் மன்னவனூர் கிராமத்தில் செயல்படும் தங்கும் விடுதிகளில் திடீர் சோதனை நடத்தினார்கள். மேலும் அந்த பகுதிகளில் வாகன சோதனையிலும் ஈடுபட்டார்கள்
அப்போது அப்பகுதியில் செயல்பட்ட ஒரு தங்கும் விடுதியில் இளைஞர் ஒருவர் சுற்றுலா பயணிகளுக்கு கஞ்சா பொட்டலங்கள் மற்றும் போதை காளான் ஆகியவற்றை விற்பதை போலீசார் பார்த்தனர். இதையடுத்து அவருடன் வேறு யாரும் தொடர்பில் இருக்கலாம் என்று சந்தேகம் அடைந்த போலீசார் கூண்டோடு பிடிக்க விரும்பி, அவரை கைது செய்யாமல் பின்தொடர்ந்து சென்றார்கள்.
அப்போது அவர் அதே பகுதியில் உள்ள மற்றொரு விடுதியில் சுற்றுலா பயணிகளிடம் கஞ்சா, போதை காளான் விற்ற, சிறுவன் உள்பட 6 வாலிபர்களுடன் சேர்ந்து போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டார். இதையடுத்து 7 பேரையும் சுற்றி வளைத்து போலீசார் பிடித்தனர்.
கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் பத்தினம்திட்டா ஆகிய இடங்களை சேர்ந்த டோமினிக் பீட்டர் (வயது 28), ஆன்ஸ் ஜே.ஜோஸ் (30), அனிஷ்கான் (34), ஜான்பேப்டிஸ்ட் (25), ஜெய்சன் (29), அகில்பெர்னாண்டஸ் (27) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவர் உள்ளிட்ட 7 பேரையும் கைது செய்தனர். அனிஷ்கான் மன்னவனூரில் தங்கும் விடுதியை வாடகைக்கு எடுத்து நண்பர்களுடன் சேர்ந்து சுற்றுலாப்பயணிகளுக்கு, கஞ்சா, போதைக்காளான் விற்றதும் தெரியவந்தது.

இதையடுத்து 7 பேரிடமிருந்து 800 கிராம் கஞ்சா, 100 கிராம் போதை காளான், கஞ்சா செடிகள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதானவர்களில், டோம்னிக் பீட்டர் மீது போதைப்பொருள் விற்றதாக கேரளாவில் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
-
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி












Click it and Unblock the Notifications